தொலைநோக்கு பார்வை
- மாநிலத்தின் மூத்த குடிமக்களுக்கு முழுமையான முறையில் சேவையாற்றுவதன் மூலம் அவர்கள் பாதுகாப்பான, ஆரோக்கியமான, சுறுசுறுப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ வழிவகை செய்தல்.
- பொது மற்றும் தனியார் கூட்டாண்மை மூலம் முதுமைக்கேற்ற சமுதாயத்தை ஊக்குவித்தல் மற்றும் தமிழ்நாட்டில் முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்.
இலக்கு
- மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, பொது மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து ஒவ்வொரு மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு, நிதி நிலைத்தன்மை, தங்குமிடம் மற்றும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பை சரியான நேரத்தில் அளிப்பதை அரசு உறுதி செய்தல்.
- வாழ்விடம், பாலினம், சாதி, வகுப்பு, மதம் அல்லது இயலாமை ஆகியவற்றின் அடிப்படையில் மூத்த குடிமக்களிடம் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதன் மூலம், அவர்களது நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான தடுப்பு, ஊக்குவிப்பு, மற்றும் மறுவாழ்வை உள்ளடக்கிய அணுகுமுறையை பின்பற்றுதல்.
கொள்கையின் வழிகாட்டி பகுதிகள்:
- ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து
- சமூக பாதுகாப்புத் திட்டங்கள்
- வாழ்வாதாரம்/வருவாய் பாதுகாப்பு
- வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல்
- இடரின்மை மற்றும் பாதுகாப்பு
- நிறுவனங்கள் மூலம் பராமரிப்பு
- விழிப்புணர்வு மற்றும் கல்வி
- ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்துதல்
- பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் தணிப்பு
- மூத்த குடிமக்கள் நலனுக்கான இயக்ககம்