Contents show
தாவரத்தின் பகுதிகளை குறிக்கும் சொற்கள்
பயிர் வகைச் சொற்கள்
தாவரத்தின் அடி வகை
- கரும்பு – கழி
- மூங்கில் – கழை
- நெட்டி, மிளகாய் செடி – கோல்
- புதர், குத்துச்செடி – தூறு
- நெல், கேழ்வரகு – தாள்
- கம்பு, சோளம் – தட்டு / தட்டை
- கீரை,வாழை – தண்டு
- புளி, வேம்பு – அடி
கிளை – தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவு
- அடி மரம் பிரிவு (மாபெரும் கிளை) – கவை
- கவையின் பிரிவு – கொம்பு / கொப்பு
- 1q1q1111கொம்பின் பிரிவு – கிளை
- கிளையின் பிரிவு – சினை
- சினையின் பிரிவு – போத்து
- போத்தின் பிரிவு – குச்சு / குச்சி
- குச்சியின் பிரிவு – இணுக்கு
கிளையின் வரிசை
- கவை – கொம்பு / கொப்பு – கிளை – சினை – போத்து – குச்சு – இணுக்கு
காய்ந்த அடியும் கிளையும்
- காய்ந்த கழி – வெங்கழி
- காய்ந்த கவையும் கொம்பும் அடியும் – கட்டை
- காய்ந்த சிறு கிளை – விறகு
- காய்ந்த குச்சு (குச்சி) – சுள்ளி
இலை வகை
- காய்ந்த தோளும் தோகையும் – சண்டு
- நெல்,புல் – தாள்
- சோளம், கரும்பு – தோகை
- புளி, வேம்பு – இலை
- தென்னை, பனை – ஓலை
- காய்ந்த இலை – சருகு
கொழுந்து (நுனிப்பகுதி) வகை
- கரும்பு நுனி – கொழுந்தாடை
- புளி, வேம்பு – முறி / கொழுந்து
- நெல், புல் – துளிர் / தளிர்
- சோளம், கரும்பு, தென்னை, பனை – குருத்து
பூ வகைகள்
- பூவின் தோற்ற நிலை – அரும்பு
- பூ விரியத் தொடங்கும் நிலை – போது
- பூவின் மலர்ந்த நிலை – மலர்(அலர்)
- பூ கீழே விழுந்த நிலை – வீ
- பூவாடிய நிலை – செம்மல்
பூ வின் வரிசை
- அரும்பு ~ போது ~ மலர்(அலர்) – வீ – செம்மல்
பிஞ்சு வகை
- பலா பிஞ்சு – மூசு
- இளம் பாக்கு – நுழாய்
- இளம் நெல் – கருக்கல்
- வாழை பிஞ்சு – கச்சல்
- எள் பிஞ்சு – கவ்வை
- தென்னை, பனை இளம் பிஞ்சு – குரும்பை
- சிறு குரும்பை – முட்டுக் குரும்பை
- மாங்காய் பிஞ்சு – வடு
- பூவோடு கூடிய இளம் பிஞ்சு – பூம் பிஞ்சு
- இளம் காய் – பிஞ்சு
- முற்றாத தேங்காய் – இளநீர்
குலை வகை
- நெல், தினை – அலகு / குரல்
- அவரை, துவரை – கொத்து
- கொடி முந்திரி – குலை
- கேழ்வரகு, சோளம் – கதிர்
- வாழைக் குலை – தாறு
- வாழை தாறு பகுதி – சீப்பு
கெட்டுப்போன காய் கனி வகை
- நுனியில் சுருங்கிய காய் – சூம்பல்
- சுருங்கிய பழம் – சிவியல்
- குளுகுளுத்த பழம் – அளியல்
- குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய் – அழுகல்
- பதராய்ப் போன மிளகாய் – சொண்டு
- தென்னையில் கெட்ட காய் – ஒல்லிக்காய்
- தேரை அமர்ந்ததினால் செட்ட தேங்காய் – அல்லிக்காய்
- கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய் – கூகைக்காய் / கோட்டான் காய்
- சூட்டினால் பழுத்த பிஞ்சு – வெம்பல்
- தேரை அமர்ந்ததினால் கெட்ட காய் – தேரைக்காய்
- புழு பூச்சி அரித்த காய் அல்லது கனி – சொத்தை.
பழத்தோல் வகை
- மிக மெல்லியது – தொலி
- திண்ணமானது – தோல்
- வன்மையானது – தோடு
- மிக வன்மையானது – ஒடு
- வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி – கொம்மை
- சுரையின் ஓடு – குடுக்கை
- நெல்,கம்பு முதலியவற்றின் மூடி – உமி
- தேங்காய் நெற்றின் மேற்பகுதி – மட்டை
மணி வகை
- நெல், புல் (கம்பு) தானியங்கள் – கூலம்
- புளி, காஞ்சிரை (நச்சு மரம்) வித்து – காழ்
- வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து – முத்து
- கத்தரி, மிளகாய் வித்து – விதை
- உளுந்து, அவரை முதலியவை – பயறு
- அவரை, துவரை முதலிய பயறுகள் – முதிரை
- தென்னையின் வித்து – தேங்காய்
- வேர்க்கடலை, கொண்டைக்கடலை – கடலை
- மா, பனை முதலியவற்றின் வித்து – கொட்டை
இளம் பயிர் வகை
- விளாவின் இளம் நிலை – குட்டி
- நெல், கத்தரி இளம் நிலை – நாற்று
- வாழையின் இளம் நிலை – குருத்து
- பனையின் இளம் நிலை – மடலி / வடலி
- நெல், சோளம் பசும் பயிர் – பைங்கூழ்
- புளி, மா, வாழை இளம் நிலை – கன்று
- தென்னையின் இளம் நிலை – பிள்ளை
சம்பா வகைகள் – (60)
- சம்பாவில் உள் வகைகள் அறுபது (60) உள்ளளை, அவை
- ஆனை கொம்பன் சம்பா
- குண்டு சம்பா
- ஆவிரம்பூ சம்பா
- சிறு மணிச் சம்பா
- சீரக சம்பா
- குதிரை வாலி சம்பா
கோதுமை வகைகள்
- சம்பா கோதுமை.
- குண்டு கோதுமை.
- வாற்கோதுமை
நெல் வகைகள்
- செந்நெல், சம்பா
- மட்டை
- கார் நெல்
- வெண் நெல்
குறிப்பு
- வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய சிறுகூலங்கள் தென் தமிழ் நாட்டில் மட்டுமே விளைகின்றன. வேறு எங்கும் விளைவதில்லை.
நிலம் வகைகள்
- சிவல்
- சுவல்
- கரிசல்
- அவல்
- தரிசு
- முரம்பு
- புறம்போக்கு