தேம்பாவணி

தேம்பாவணி-வீரமாமுனிவர்

தாயை இழந்து தனித்துறும் துயரம் பெரிது என்பதை விளக்கும் பாடல்

கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையார் இறந்துவிட்ட போது அடையும் துன்பத்தையும் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதையும் கூறிகின்றது.

தேம்பாவணி

  • கிறித்துவின் வளர்ப்புத் தந்தை சூசையப்பர் என்னும் யோசேப்பு வளவன்).
  • சூசையப்பர் என்னும் யோசேப்பிளைப்(வளவள்) பாட்டுடைத் தலைவனாகக்
  • கொண்டு பாடப்பட்டது தேம்பாவணி
  • தேம்பாவணி காப்பியம் 3 காண்டங்களையும் 35 படலங்களையும் உள்ளடக்கி, 3815 பாடல்களை கொண்டுள்ளது.
  • தேம்பாவணி 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது
  • தேம்பாவணி காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர்
  • தேம்பா + அணி எளப் பிரித்தால் வாடா மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்தால் தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் பொருள்படும்

வீரமாமுனிவர்

  • வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்சு டான்சு சோசப் பெசுகி.
  • வீரமாமுனிவர் சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வீரமாமுனிவர் எழுதியுள்ள முக்கிய நூல்கள்

  • தமிழின் முதல் அகராதியான சதுரகராதி
  • தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்)
  • பரமார்த்த குரு கதைகள்

சந்தா சாகிப் மன்னனை சந்தித்து

  • வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தா சாகிப் மன்னனை சந்தித்து

உரையாடுவதற்காக 2 மாதங்களில் உருது மொழியைக் கற்றுகொண்டார்.

இஸ்மத் சன்னியாசி (தூய துறவி) -வீரமாமுனிவர்

  • வீரமாமுனிவருடைய எளிமையையும், துறவையும் கண்டு சந்தா சாகிப் வியந்தார்.
  • வீரமாமுனிவருக்கு இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை சந்தா சாகிப் அளித்தார்.
  • இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லுக்குத் தூய துறவி என்று பொருள்.

தேம்பாவணி-வீரமாமுனிவர்

யோவான் – அருளப்பன் – கருணையன்

  • கிறித்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான்.
  • கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யோவான்.
  • யோவாள் அருளப்பன் என்றும் குறிப்பிடப்படுகிறார்
  • வீரமாமுனிவர் தேம்பாவணி காப்பியத்தில் யோவானுக்குக கருணையன் என்று பெயரிட்டுள்ளார்.

கதை முன் நிகழ்வு

  • கருணையன் யோவாள்) தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார்.
  • அச்சூழலில் தாயார் எலிசபெத் இறந்துவிட்ட போது கருணையன்(யோலான) அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதை தேம்பாவனி பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

எலிசபெத்து அம்மையார் அடக்கம், கருணையன் கண்ணீர்

பாடல் -2388***

  • பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்கென்று அம்பூஞ் சேக்கையைப் பரப்பி
  • இங்கண் திருந்திய அறத்தை யாவும் யாக்கையைப் பிணித்தென்று ஆக இளிதிலுள் அடக்கி * * *
  • வாய்ந்த ஆக்கையை அடக்கிப் பூவோடு அழுங்கணர் பொழிந்தான் கருணையன் யோவான்) மீதே

பாடலின் பொருள்

  • கருணையன் தன மலர் போன்ற கையைக் குவித்து, “பூமித்தாயே! என் அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக” என்று கூறி, குழியினுள் அழகிய மலர்ப் படுக்கையைப் பரப்பினான்
  • இவ்வுலகில் செம்மையான அறங்களையெல்லாம் தன்னுள் பொதிந்து வைத்து.
  • பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை, மண் இட்டு மூடி அடக்கம் செய்து, அதன் மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒரு சேரப் பொழிந்தான்

பாடல் – 2400

வாய்மணியாகக் கூறும் வாய்மையே மழை நீராகித் தாய்மணியாக மார்பில் தயங்கியுன் குளிர வாழ்ந்தேன் கருணையன்(யோவான்)**

தாய்மணியாகத் தவும் துளியிலது இளங்கூழ் வாடிக் காய்மணியாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன். அந்தோ ***

பாடலின் பொருள்

  • என் தாய் தன் வாயாலே மணிபோலக் கூறும் உண்மையான சொற்களையே மழைநீராக உட்கொண்டு, அத்தாயின் மார்பில் ஒரு மணிமாலையென அசைந்து அழகுற வாழ்ந்தேன்.
  • ஐயோ! இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னே தூய மணி போன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டதைப் போல, நானும் இப்போது என் தாயை இழந்து வாடுகின்றேனே!”

பாடல்-2401

விரிந்தன கொம்பில் கொய்த வியென உள்ளம் வாட

எரிந்தன நுதி நச்சு அம்புண்டு இரும்புழைப் புண் போல் நோகப்

பிரிந்தன புள்ளின் கானில் பெரிதழுது இரங்கித் தேம்பச் சரிந்தன.

அசும்பில் செல்லும் தடவிலா தனித்தேன் அந்தோ!

பாடலின் பொருள்

  • “என் மனம் பரந்து நின்ற மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட மலரைப் போல வாடுகிறது
  • தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான. புண்ணின் வலியால் வருந்துவது போன்றது என் துயரம்.
  • துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல நான் இக்காட்டில் அழுது இரங்கி வாடுகிறேன்.
  • சரிந்த வழுக்கு நிலத்திலே, தனியே விடப்பட்டுச் செல்லும்
  • வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்.”

பாடல் – 2403 *

உய்முறை அறியேன், ஓர்ந்த உணர்வினொத்து உறுப்பும் இல்லா மெய்முறை அறியேன் ***

மெய் தான் விரும்பிய உணவு தேடச் செய்முறை அறியேன் கானில் செல்வழி அறியேன்.

தாய் தன் கைமுறை அறிந்தேன் தாயும் கடிந்தெனைத் தனித்துப் போனாள் ***

பாடலின் பொருள்

  • “நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன் நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன். காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்
  • என் தாய் தன் சையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன் என்னைத் தவிக்க விட்டுவிட்டு என் தாய் தான் மட்டும் தனியாகப் போய்விட்டாளே!”

 இயற்கை கொண்ட பரிவு

பாடல்-2410

நவமணி வடக்கயில் போல் லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன  தன்னிசைக்கு இசைகள் பாடத்***

துவமணி மரங்கள் தோறும் துணர் அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம் கொல் என்று ஒலித்து அழுவ போன்றே ***

பாடலின் பொருள்

  • நவமணிகள் பதித்த மணி மாலைகளைப் பிணித்தது போன்று நல்ல அறங்களை எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன், இவ்வாறு புலம்பிக் கூறினான்.
  • அது கேட்டுப் பல்வேறு இசைகளை இயக்கியது போன்று
  • தேன் மலர்கள் பூத்த மாங்கள் தோறும் உள்ள மணம் வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன்.

சொல்லும் பொருளும்

  • சேக்கை – படுக்கை
  • யாக்கை – உடல்
  • பிணித்து – கட்டி
  • தயங்கி – அசைந்து
  • இளங்கூழ் – இளம் பயிர்
  • வாய்ந்த – பயனுள்ள
  • காய்ந்தேன் – வருந்தினேன்
  • கொம்பு – கிளை
  • புழை – துளை
  • கான் – காடு
  • தேம்ப – வாட
  • அசும்பு – நிலம்
  • உய் முறை – வாழும் வழி
  • ஓர்ந்து – நினைத்து
  • கடிந்து – விலக்கி
  • படலை – மாலை
  • துணர். – மலர்கள்
  • உவ மணி – மண மலர்

முந்தைய ஆண்டு வினாக்கள்

‘தேம்பாவணி’ என்பது
(A) கிறித்தவக் காப்பியம்
(B) இசுலாமியக் காப்பியம்
(C) வைணவக் காப்பியம்
(D) சைவக் காப்பியம்

‘கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்’ எனப் போற்றப்படுவது
(A) தேம்பாவணி
(B) இரட்சண்ய யாத்ரீகம்
(C) இரட்சண்ய மனோகரம்
(D) கிறித்துவின் அருள்வேட்டல்

தேம்பாவணியில் ‘வளன்’ என்னும் பெயர்ச்சொல்லால் குறிக்கப்படுபவர்
(A) இயேசு கிறிஸ்து
(B) சூசை மாமுனிவர்
(C) தாவீது
(D) கோலியாத்து

‘தேம்பாவணி’ நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை
(A) 39 படலங்கள்
(B) 30 படலங்கள்
(C) 32 படலங்கள்
(D) 36 படலங்கள்

“தேம்பாவணி” எத்தனை காண்டங்களை உடையது
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஐந்து

“கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்” எனப் போற்றப்படும் நூல்
(A) இரட்சண்ய மனோகரம்
(B) இரட்சண்ய யாத்திரிகம்
(C) போற்றி திருவகல்
(D) தேம்பாவணி

‘வளன்’ என்னும் பெயரால் அழைக்கப்பெறுபவர்
(A) சூசை
(B) பீட்டர்
(C) டேவிட்
(D) சேவியர்

இயேசுபெருமானின் வளர்ப்புத் தந்தை யார்?
(A) அந்தோணியார்
(B) சூசை
(C) தாவீது
(D) பேதுரு

விடைத்தேர்க: வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
(A) முதுமொழி மாலை
(B) செந்தமிழ் இலக்கணம்
(C) கொடுந்தமிழ் இலக்கணம்
(D) தொன்னூல் விளக்கம்

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!