- நகர் வன (நகர்ப்புற காடுகள்) திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 200 நகர்ப்புற காடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- புனேவில் (மகாராஷ்டிரா) உள்ள வார்ஜே நகர்ப்புற காடுகள் இந்த திட்டத்திற்கு ஒரு முன்மாதிரியாக கருதப்படுகிறது.
- இத்திட்டம் வனத்துறை, நகராட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் குடிமக்கள் இடையே மக்களின் பங்கேற்பையும் ஒத்துழைப்பையும் ஏற்று இந்த திட்டம் செயல்படுத்தபடுகிறது.
- இந்த நகர்ப்புற காடுகள் முதன்மையாக நகரத்தில் இருக்கும் வன நிலம் அல்லது உள்ளூர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படுகிறது.
Contents show
நிதி:
- இத்திட்டத்திற்கான நிதியானது CAMPA (காடு இழப்பு வளர்ப்பு நிதி (CAF) சட்டம், 2016) நிதி மூலம் செலுத்தப்படுகிறது.
- காடு இழப்பு வளர்ப்பு நிதி சட்டம், ஈடுசெய்யும் காடு வளர்ப்பிற்காக சேகரிக்கப்பட்ட நிதியை நிர்வகிப்பதற்கு இயற்றப்பட்டது.
- இதற்கு முன்னர் தற்காலிக இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தால் (CAMPA) நிர்வகிக்கப்பட்டது.
- காடு இழப்பு வளர்ப்பு என்பது ஒவ்வொரு முறையும் வன நிலம் சுரங்கம் அல்லது தொழில் போன்ற வனமற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்த படும்போது, வனமற்ற நிலத்திக்கு சமமான பரப்பளவில் காடுகளை நடுவதற்கு காடுகளை அழித்த நிறுவனம் அளிக்கிறது. அல்லது அத்தகைய நிலம் கிடைக்காத போது, இரண்டு மடங்கு பரப்பளவு பாழடைந்த வன நிலம். அளிக்கப்படவேண்டும்
- காடு இழப்பு வளர்ப்பு நிதி பணத்தில் 90% மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும், 10 % மத்திய அரசால் தக்கவைக்கப்பட வேண்டும் .