பக்தி இலக்கியம்
- உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது பக்தி இலக்கியம்.
- இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது.
- இறையை நாயகனாக எண்ணி நாயகி பாவத்தில் பாடுவதும் பக்தி இலக்கியத்தில் காணப்படுகிறது
- இறையை நாயகனாக எண்ணி நாயகி பாவத்தில் பெண் கவிஞர் (ஆண்டாள்) பாடுவது உண்மைக் காதலெனக் கருத வைக்கிறது.
- திருமால் மீது காதல் கொண்டு ஆண்டாள் பாடியதாகக் கொள்கின்றனர்.
- அழகியலுக்கும் பக்திக்கும் இடம் தருகிற ஆண்டாள் பாடல்கள் கற்பவர் மனத்தைக் கவர்கின்றன.
ஆண்டாள்
- பன்னிரு ஆழவார்களுள் ஆண்டாள் மட்டுமே பெண்.
- இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலைலயயும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என ஆண்டாள் அழைக்கப்பெற்றார்.
- ஆண்டாள் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.
- நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியது திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் ஆகும்.
- நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது.
- ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் (ஆறாம் திருமொழி) இருந்து நம் பாடப்பகுதியின் இரு பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
அழகியலுக்கும் பக்திக்கும் இடம் தருகிற ஆண்டாள் பாடல்கள்
ஆறாம் திருமொழி
கண்னனை எதிர்கொண்டு அழைத்தல்
பாடல்-57
கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் (கண்ணன்) அடிநிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான் (ஆண்டாள்)**
பாடலின் பொருள்
‘ஆடும் இளம் பெண்கள், கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு (ஆண்டாளை) அழைக்கிறார்கள்
வடமதுரையை ஆளும் மன்னன்கண்னன் பாதுகைகளை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியடன் நடந்து வருகிறான்” கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்
ஆண்டாள் கண்னன் 200
பாடல் –58
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றாத முத்து நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் (கண்ண கைத்தலம் பற்றக் கனாக் கண் தோழீ நான் (ஆண்டாள்)
பாடலின் பொருள்
- ‘மத்தளம் முதலான இசை கருவிகள் முழங்குகின்றன. வரிகளையுடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர்.
- அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன், முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்’ இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.
சொல்லும் பொருளும்
- தீபம் – விளக்கு
- அதிர் – நடனம்
- தாமம்- மாலை
முந்தைய ஆண்டு வினாக்கள்
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
(A) தைப்பாவை
(B) திருப்பாவை
(C) திருவெம்பாவை
(D) காவியப்பாவை
நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் மூன்றாம் பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது
(A) ஆண்டாள் அருளியது
(B) குலசேகர ஆழ்வார் அருளியது
(C) பெரியாழ்வார் அருளியது
(D) திருமங்கையாழ்வார் அருளியது
ஆண்டாள் கூறாத தொடர் எது ?
(A) மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழ்கில்லேன்
(B) ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
(C) வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
(D) வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
(A) I, III, IV சரி
(B) I, II மட்டும் சரி
(C) I, II, III சரி
(D) அனைத்தும் சரி
(E) விடை தெரியவில்லை
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————