நான்மணிக்கடிகை
- நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று.
- நான்மணிக்கடிகை ஒரு நீதி நூல்
- நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார் ஆவார்.
- நான்மணிக்கடிகை நூல் (நான்காம்) 4ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது ஆகும்.
- தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது நான்மணிக்கடிகை நூல்.
- நான்கு + மணி + கடிகை – நான்மணிக்கடிகை
- கடிகை என்பதற்கு துண்டு, ஆபரணம், தோள்வளை என்று பொருள்.
- நான்கு மணிகளின் துண்டுகள் இணைந்த மாலை போல நான்கு நீதி மணிகளால் பாடப்பெற்றுள்ளதால் ‘நான்மணிக்கடிகை’ என அழைக்கப்படுகிறது.
- நான்மணிக்கடிகை நூலில் மொத்தம் (நூற்று நான்கு) 104 பாடல்கள் உள்ளன.
- நான்மணிக்கடிகை நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 101 பாடல்கள்
- முதல் இரண்டு 2 கடவுள் வாழ்த்து பாடலிலும் (நான்கு) 4 கருத்துக்கள் உள்ளன.
- கடவுள் வாழ்த்து திருமலைப் பற்றியது.
- கி.ஆ.பெ.விசுவநாதன் பதிப்பித்துள்ள மும்மணிகளும் நான்மணிகளும் என்னும் நூலில் கடவுள் வாழ்த்து செய்யுட்கள் (இரண்டு) 2 நீங்கலாக (நூற்று நான்கு) 104 பாடல்களே உள்ளன.
- நான்மணிக்கடிகையில் ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது.
- நான்மணிக்கடிகை வெண்பா வகை பாடல்களால் இயற்றப்பட்டது.
- நான்மணிக்கடிகையில் (இரண்டு) பாடல்களுக்கு (7 மற்றும் 100) ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழிபெயர்த்துள்ளார்.
- நான்மணிக்கடிகை நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
விளம்பி நாகனார்
- நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பி நாகனார்
- விளம்பி நாகனார் வைணவ சமயத்தை சார்ந்தவர்.
- விளம்பி நாகனார் (நான்காம்) 4ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
- விளம்பி என்ற ஊரில் பிறந்ததால் விளம்பி நாகனார் என்றும் ஆற்றிய தொழில் காரணமாக விளம்பி நாகனார் என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதுவர்.
- நான்மணிக்கடிகை நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இரண்டும் திருமாலைப் பற்றி இருப்பதால் விளம்பி நாகனார் வைணவ பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் நான்மணிக்கடிகை வைணவ இலக்கியம் என்றும் கூறுவர்.
- விளம்பி நாகனார் பெயரை நாயனார் நயினார் என்று கூறி இருப்பதாலும், நான்மணிக்கடிகை நூலில் சமண சமயக் கருத்துக்களான பொய்யாமை, கொல்லாமை, புலால் உண்னாமை ஆகியவை வலியுறுத்திக் கூறப்படுவதாலும் விளம்பி நாகனார் ஒரு சமணர் என்றும் நான்மணிக்கடிகை சமணர்களின் இலக்கியம் என்றும் கூறுவர்.
நான்மணிக்கடிகை சிறந்த மேற்கோள்கள்
- யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி
- தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க
- வெல்வது வேண்டின் வெகுளி விடல்
- கல்விக்கு விளக்கம் புகல்சார் உணர்வு (ஒழுக்கம்)
- நிலத்துக்கு அணி நெல்லும் கரும்பும்
- இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசை நடுக
- இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
- வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
- ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்
- கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர் இல்
- குளத்துக்கு அணி தாமரை பெண்ணுக்கு அணி நாணம்
- மனைக்கு விளக்கம் மடவாள் மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
- புதல்வர்க்கு விளக்கம் கல்வி கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு
முந்தைய ஆண்டு வினாக்கள்
‘துண்டு’ என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது?
A) ஆசாரக் கோவை
B) நான்மணிக்கடிகை
C) இனியவை நாற்பது
D) சீவகசிந்தாமணி
நான்மணிக்கடிகையைப் பாடியவர் யார்?
(A) விளம்பி நாகனார்
(B) கபிலர்
(C) முன்றுறை அரையனார்
(D) கடுவெளிச் சித்தர்
‘விளம்பி’ என்பது பெயர் (2 Times Asked)
(A) இயற்பெயர்
(B) புனைபெயர்
(C) ஊர்ப்பெயர்
(D) இறைவனின் பெயர்
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————