நில அதிர்வு
- நில அதிர்வு நில அதிர்வு என்பது புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும் கடும் அதிர்வாகும். இவ்வதிர்வு தோன்றும் மையத்திலிருந்து அனைத்து திசைகளிலும் தொடர்ச்சியான அதிர்வு அலைகளை ஏற்படுத்துகிறது.
- ஒரு பகுதியினுடைய நிலவியல் அமைப்பு, கடந்த காலங்களில் ஏற்பட்ட நில அதிர்வு, அதிர்வலைகளின் தன்மைகள் ஆகியவற்றை அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நில அதிர்வு மண்டலங்கள் கண்டறியப்படுகின்றன. இதனடிப்படையில் இந்திய தரநிர்ணய நிறுவனம் இந்தியாவை 5 நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நில அதிர்வு மண்டலங்கள்
நில அதிர்வு மண்டலங்கள் | அபாயத்தன்மை | பகுதிகள் |
மண்டலம் 5 | மிக அதிகம் | வடகிழக்கு இந்தியா முழுமையும், ஜம்மு காஷ்மிரின் சிலபகுதிகள், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத்தின் ரான் ஆப் கட்ச், வட பீகார் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டங்கள் |
மண்டலம் 4 | அதிகம் | ஜம்மு-காஷ்மீரின் பிற பகுதிகள், இமாச்சலப்பிரதேசம் தேசிய தலைநகரமான புது டெல்லி, வட உத்திரப் பிரதேசம், பீகார், சிக்கிம், மேற்கு வங்கம், குஜராத்தின் சில பகுதிகள், மேற்கு கடற்கரையை ஒட்டி உள்ள மகாராஷ்டிராவின் சில பகுதிகள் மற்றும் இராஜஸ்தான் |
மண்டலம் 3 | மிதமானது | கேரளா, கோவா, இலட்சத்தீவுகள், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், குஜராத் மற்றும் மேற்கு வங்காளம், பஞ்சாபின் சில பகுதிகள், இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா |
மண்டலம் 2 | குறைவு | நாட்டின் பிற பகுதிகள் |