ந. பிச்சமூர்த்தி (15 ஆகஸ்ட் 1900 – 4 டிசம்பர் 1976)

புதுக்கவிதை

  • புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
  • பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்தி.

புதுக்கவிதையின் வெவ்வேறு பெயர்கள்

  • இலகு கவிதை
  • கட்டற்ற கவிதை 
  • விலங்குகள் இலாக் கவிதை
  • கட்டுக்குள் அடங்காக் கவிதை

ந. பிச்சமூர்த்தி

  • பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்தி. எனவே, “புதுக்கவிதையின் தந்தை என்று ந. பிச்சமூர்த்தி போற்றப்படுகிறார்.
  • தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றியவர் ந. பிச்சமூர்த்தி.
  • நவஇந்தியா, ஹனுமான், ஆகிய இதழ்களின் துனை ஆசிரியராகவும் பணியாற்றியவர் ந. பிச்சமூர்த்தி. ந. பிச்சமூர்த்தி ஓரங்க நாடகங்கள், புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைகளைப் படைத்தவர்.
  • ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை –(science) சயன்ஸூக்கு பலி என்பதாகும்.
  • ந. பிச்சமூர்த்தி 1932 ல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார்.
  • பிக்ஷு, ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதியவர் ந. பிச்சமூர்த்தி.

ந. பிச்சமூர்த்தியை பாராட்டிய வல்லிக்கண்ணன் 

  • இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்
  • புதுகவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்என்னும் நூலில் வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார்.

ஒளியின் அழைப்பு – ந. பிச்சமூர்த்தி

போட்டியின்றி வாழ்க்கையில்லை, வலிகளின்றி வெற்றியில்லை.

கமுகு மரத்தின் வாழ்க்கை போர்.

வாழ்க்கையில் முன்னேற்றம்

  • புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து விண்ணோக்கி விரைவது தாவரத்தின் தனித்துவம். 
  • வேர் வளர்க்கும் கதிரவன் ஒளியும் காற்றும் நீரும் பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும் பாறையும் என எல்லாம் இணைந்தே, இயற்கையைப் போற்றி வளர்க்கின்றன. 
  • போட்டியின்றி வாழ்க்கையில்லை, வலிகளின்றி வெற்றியில்லை. ஒன்றையொன்று அடுத்தும் படுத்தும் மென்மேலும் முன்னேறுவது இயற்கைக்கு மட்டுமன்று, வாழ்க்கைக்கும் தான்!.

கவிதை

பிறவி இருளைத் துளைத்து சூழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி எப்படி விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது?

ரவியின் கோடானுகோடி விரல்களின் அழைப்பிற்கு இணங்கி எப்படி உடலை நெளித்து நீட்டி, வளைத்து வளருகிறது?

எப்படி அமிருதத்தை நம்பி, ஒளியை வேண்டி பெருமரத்துடன் சிறு கமுகு போட்டியிடுகிறது? ***

அதுவே வாழ்க்கைப் போர்

முண்டி மோதும் துணிவே இன்பம் ***

உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி.*** 

-ந.பிச்சமூர்த்தி

சொல்லும் பொருளும்

  • விண் – வானம்
  • ரவிகதிரவன்
  • கமுகுபாக்கு

முந்தைய ஆண்டு வினாக்கள்

மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் “ஈஸ்வரலீலை” என்னும் கதைநூலின் ஆசிரியர்
(A) லாச. ராமாமிருதம்
(B) சி. சு. செல்லப்பா
(C) ந. பிச்சமூர்த்தி
(D) தி. ஜானகிராமன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!