பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) (திராவிட சாஸ்திரி)
- பரிதிமாற் கலைஞர் காலம் 1870-1903.
- பரிதிமாற் கலைஞருக்கு பெற்றோர் தனக்கு இட்ட பெயர் சூரியநாராயண சாஸ்திரி.
- சூரிய நாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.
- ‘திராவிட சாஸ்திரி’ என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்டவர் பரிதிமாற் கலைஞர்.
- தமிழை உயர் தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன் முதலில் மெய்ப்பித்தவர் பரிதிமாற் கலைஞர்.
- பின்னாளில் 2004ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது.
- தமிழைச் செம்மொழியென்று நிறுவி, பரிதிமாற் கலைஞர் எழுதிய கட்டுரை உயர்தனிச் செம்மொழி
பரிதிமாற் கலைஞர் எழுதிய உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரையிலிருந்து
“பல மொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி.
தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி,
திருந்திய பண்பும். சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி.
ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.
-பரிதிமாற் கலைஞர் மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து நடத்திய அறிவியல் இதழ் ஞான போதினி.
பரிதிமாற் கலைஞர் இயற்றியுள்ள நூல்கள்
- கலாவதி (நாடக நூல்கள்)
- ரூபாவதி (நாடக நூல்கள்)
- மான விஜயம் (களவழி 40 (நாற்பது) நூலைத் தழுவி எழுதப்பட்டது)
- நாடகவியல் (நாடக இலக்கண நூல்)
- தனிப்பாசுரத் தொகை (ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்)
- நாடகவியல் என்ற நாடக இலக்கண நூல் ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது.
- பரிதிமாற் கலைஞர் எழுதிய மான விஜயம், களவழி 40 (நாற்பது) நூலைத் தழுவி எழுதப்பட்டது.
- பரிதிமாற் கலைஞர் இயற்றிய தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
- பரிதிமாற் கலைஞர் தந்தையாரிடம் வடமொழி கற்றார்.
- பரிதிமாற் கலைஞர் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றார்.
- பரிதிமாற் கலைஞர் எப்.ஏ (F.A- First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார்.
- தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார்.
- சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்றார் பரிதிமாற் கலைஞர்.
- 1893ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
- பரிதிமாற் கலைஞர் தம் 33ஆவது வயதில் மறைந்தார்.
வகுப்பறையில் பேராசிரியராக பரிதிமாற் கலைஞர்
- வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், “நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை. ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக” என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர் தான் ‘திராவிட சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்).
முந்தைய ஆண்டு வினாக்கள்
கண்டறிதல்
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் ஒருவர் யார் என்பதைக் கண்டறிக.
(A) பரிதிமாற்கலைஞர்
(B) ந.மு.வேங்கடசாமி நாட்டார்
(C) மறைமலையடிகள்
(D) திரு.வி.க
பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு
(A) 1860
(B) 1870
(C) 1880
(D) 1890
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
(A) மு.சி.பூர்ணலிங்கம்
(B) தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
(C) கே. வி. சுப்பையா
(D) எல்.வி.இராமசுவாமி
பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
(A) மறைமலையடிகள்
(B) உ.வே.சாமிநாத ஐயர்
(C) வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
(D) வையாபுரிப்பிள்ளை
வசன நடை கைவந்த வல்லாளர் என ஆறுமுக நாவலரைப் பாராட்டியவர் (4)
(A) ஜி.யு. போப்
(B) பரிதிமாற் கலைஞர்
(C) வீரமாமுனிவர்
(D) ரா.பி.சேதுப்பிள்ளை
பரிதிமாற் கலைஞருக்கு ‘திராவிட சாஸ்திரி’ என்ற பட்டத்தை வழங்கியவர் யார்? (4)
(A) ஜி.யு. போப்
(B) சி.வை. தாமோதரனார்
(C) ஆறுமுக நாவலர்
(D) மு.சி.பூர்ணலிங்கம்
தமிழ்மொழியை “உயர்தனிச்செம்மொழி” என முதன் முதலில் நிலைநாட்டிய தமிழ் அறிஞர்
(A) பரிதிமாற் கலைஞர்
(B) மறைமலையடிகள்
(C) ரா.பி. சேதுப்பிள்ளை
(D) திரு வி க
பரிதிமாற் கலைஞர் இயற்றிய நாடகவியல் என்னும் நூல் எந்த நடையில் எழுதப்பட்டுள்ளது?
(A) நாடக வடிவம்
(B) செய்யுள் வடிவம்
(C) உரைநடை வடிவம்
(D) கவிதை வடிவம்
நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
(A) தவத்திரு சங்கரதாஸ்
(B) பரிதிமாற் கலைஞர்
(C) பம்மல் சம்பந்தனார்
(D) திண்டிவனம் ராமசாமிராஜா
‘நாடக இயல்’ எனும் நூலை இயற்றியவர் யார்?
(A) பரிதிமாற் கலைஞர்
(B) பம்மல் சம்மந்த முதலியார்
(C) கிருஷ்ணசாமிப் பாவலர்
(D) விபுலானந்த அடிகள்
தமிழார்வத்தின் காரணமாகத் தம் பெயரை ‘பரிதிமாற்கலைஞர்’ என மாற்றி அமைத்துக் கொண்டவர்
(A) மறைமலையடிகள்
(B) சூரியநாராயண சாஸ்திரி
(C) ரா. இராகவையங்கார்
(D) சிங்கார வேலு முதலியார்
பரிதிமாற்கலைஞரின் தனிப்பாசுரத்தொகை என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
(A) வில்லியம் ஜோன்ஸ்
(B) பேராசிரியர் ராஸ்க்
(C) கால்டுவெல்
(D) ஜி.யு. போப்