பிரமிள்

தருமு சிவராமலிங்கம் (பிரமிள்)

  • தருமு சிவராமுவின் இயற்பெயர் சிவராமலிங்கம்.
  • தருமு சிவராமலிங்கம் (பிரமிள்) இலங்கையில் பிறந்தவர்.

தருமு சிவராமுவின் புனைப்பெயர்கள்

  • பானு சந்திரன்
  • பிரமிள்
  • அரூப சிவராம்
  • தருமு சிவராம்
  • தருமு

தருமு சிவராமுவின் நூல் படைப்புகள்

  • நக்ஷத்திர வாசி (நாடகம்)
  • லங்காபுரி ராஜா (சிறுகதைத் தொகுப்பு)
  • வெயிலும் நிழலும் (கட்டுரைத் தொகுப்பு)
  • பிரமிள் கவிதைகள் (கவிதை)

 

  • மொழியாக்கம், விமர்சனம், நாடகம், சிறுகதை, புதுக்கவிதை என விரிந்த தளத்தில் இயங்கியவர் தருமு சிவராமு.
  • ஓவியம். சிற்பம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார் தருமு சிவராமு.
  • தருமு சிவராமுவின் கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

காவியம் – தருமு சிவராமு (பிரமிள்)

கவிதை

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது. ***

தருமு சிவராமு (பிரமிள்)

காவியத்துக்கான பாடுபொருள்

இறகுகளின் தொகுதியைச் சிறகு என்பர்.

சிறகிலிருந்து பிரிந்த இறகு, நிலத்துக்கும் வானுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழும் காற்றின் தீராத தழுவல்களால் மண்ணில் வீழாது தன் வாழ்வை எழுதுகிறது.

வாழ்வு என்பது காவியத்துக்கான பொதுவான பாடுபொருள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!