பிராந்தியவாதம்
- ஒவ்வொரு பிராந்தியத்தின் குறிப்பிட்ட நிபந்தனைகள், தேவைகள் மற்றும் குணாதிசயங்களுக்கு ஏற்றவாறு மாநிலத்தின் ஒரு அமைப்பால் முன்மொழியப்பட்ட போக்கு அல்லது இயக்கம் என பிராந்தியவாதம் அறியப்படுகிறது.
பிராந்தியவாதம் வளர்வதற்கான காரணங்கள்
- தொடர்ச்சியாக ஒரு பகுதி அல்லது ஒரு பிராந்தியத்தை ஆளும் கட்சிகள் புறக்கணிப்பது.
- நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களிடத்திலும் தேசிய அரசாங்கம் குறிப்பிட்ட சித்தாந்தம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைத் திணிக்க மேற்கொள்வது.
- எ.கா. தென்னிந்தியாவில் ஹிந்தியை அலுவல் மொழியாக கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், அது வட ஆதிக்கத்தை கொண்டு வந்துவிடும் என்கின்ற அச்சமே ஆகும்.
- அசாமில், மக்கள் தங்கள் கலாச்சாரத்தை பாதுகாக்கும் பொருட்டு வெளிநாட்டவர் எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கினர்.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம்
- நிர்வாகம் மற்றும் அரசியல் அதிகாரத்தில் கவனம் செலுத்தியமை அதிகாரப் பரவலாக்கம் மற்றும் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம் ஆகிய கோரிக்கைகளுக்கு வலு சேர்த்தது.
மண்ணின் மைந்தர் கோட்பாடு
- ஒரு மாநிலத்தில் புறக்கணிக்கப்பட்ட குழுக்கள் அல்லது பகுதிகள் ஆகியவற்றின் நலன்களை ஊக்குவிப்பது.
- இந்தியக் கூட்டாட்சியில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் தங்களுக்கான சுயராஜ்ஜியத்தை அமைத்துக் கொள்வதில் இருக்கும் வேட்கையும் காரணமாகும்.
- சுயாட்சிக்கான தேவை அதிகரித்து வருவது
அரசியல் காரணங்கள்
- ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது மக்கள் குழுவில் தங்கள் பிடியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சில அரசியல் தலைவர்கள் பிராந்தியவாத உணர்வுகளை ஊக்குவிக்கிறார்கள்.
- பிராந்திய உயரடுக்கின் பங்கு பிராந்திய கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பிராந்தியவாதத்தை ஊக்குவித்தல்.
- (எ.கா.) திமுக, அதிமுக, அகாலிதல், தெலுங்கு தேசம் போன்றவை அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பிராந்தியவாதத்தை ஊக்குவிக்கின்றன.
நவீனமயமாக்கல்
- நவீனமயமாக்கல் மற்றும் வெகுஜன சக்திகளுக்கு இடையிலான தொடர்பின் பங்கு.
- குழு நலன்களை தேசிய நலன்களுடன் அடையாளம் காண்பதில் தோல்வி.
பிராந்திய ஏற்ற தாழ்வுகள்
- மத்திய அரசின் செயல்பாடுகளில் சில பகுதிகளில் சமூக, பொருளாதார மேம்பாடு புறக்கணிக்கப்படுவதால் பிராந்திய ஏற்ற தாழ்வுகள் ஏற்படுகின்றன.
- இதனை உள்ளூர் தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டு பிராந்தியவாத உணர்வுகளை ஊக்குவிக்கின்றனர்.