புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020)
- இந்திய புதிய கல்வி கொள்கை 2020யானது இந்தியாவை உலகளாவிய அறிவுசார்வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என மறுபெயரிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட இந்தக்கொள்கையானது சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவில் கல்வி கட்டமைப்பின் செய்யப்படும் மூன்றாவது பெரிய மறுசீரமைப்பு ஆகும்.
- முந்தைய இரண்டு கல்வி கொள்கைகள் 1968 மற்றும் 1986 ஆம் கொண்டு வரப்பட்டன
2020 ஆம் ஆண்டு புதிய கல்வி கொள்கையின் நிறைகள்
- NEP 2020 உதவியுடன் அனைவருக்கும் பள்ளிப்படிப்பை கிடைக்கச் செய்வதை அரசாங்கம் நோக்கமாகக்கொண்டுள்ளது.
- இந்த புதிய அணுகுமுறையின் மூலம் சுமார் இரண்டு கோடி பள்ளி மாணவர்கள் மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வர முடியும்.
- இந்த 5 + 3 + 3 + 4 எனும் புதிய அமைப்பு தற்போதுள்ள 10 +2 என்ற முறையைமாற்றும்.
- இந்த அமைப்பு மாணவர்களின் கற்றல் ஆண்டுகளில் கவனம் செலுத்துகிறது.
- இந்த 5 + 3 + 3 + 4 எனும் புதிய அமைப்பு 3 முதல் 8, 8 முதல் 11. 11 முதல் 14 மற்றும் 14 முதல் 18 வயது வரையிலான காலத்தைக்குறிக்கிறது.
- இந்த கட்டமைப்பில் அங்கன்வாடி மற்றும் முன்பள்ளி கல்வி சேர்க்கப்பட்டால் 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்புடன் 3 ஆண்டுகள் சேர்க்கப்படும்.
- 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு, ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய பாடத்திட்ட மற்றும் கற்பித்தல் அமைப்பானது NCERT ஆல் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும்.
- NEP 2020 என்பது இந்தியாவில் தேசிய புத்தக மேம்பாட்டுக் கொள்கையை உருவாக்குவதாகும்.
- இந்த புதிய திட்டம் இரு பாலரையும் உள்ளடக்கும் நிதியத்தை அமைப்பதில் கவனம் செலுத்துகிறது.
- தேசிய கல்வி கொள்கையை திறனாய்வு செய்யும் பராக் எனும் முறையும் அரசாங்கத்தால் அமைக்கப்பட உள்ளது
- இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் / மாவட்டத்திலும் பகல் நேர உறைவிடப்பள்ளியான “பால் பவன்ஸ்” நிறுவப்பட உள்ளது.
- இந்த உறைவிடப்பள்ளிகளானது விளையாட்டு, தொழில் கலை தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க பயன்படுத்தப்படும்.
- தேசிய கல்வி கொள்கை 2020 இன் படி. ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்ஆகியவற்றிற்கு இணையாக பலதரப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் நாட்டில் அமைக்கப்படும்.
- பலதரப்பட்ட கல்விகளை அறிமுகப்படுத்துவதற்காக இவைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
- ஒரே அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் பட்டியலானது அரசு மற்றும் தனியார் கல்வி அமைப்புகளுக்கு வழிகாட்ட பயன்படுத்தப்படும்.
- கல்லூரிகள் இணைப்பு நிறுத்தப்பட்டு கல்லூரிகளுக்கு படிப்படியாக மற்றும் சுயாட்சி வழங்கப்படும்.
- 2030 ஆம் ஆண்டளவில், கற்பித்தல் பணியில் சேர குறைந்தபட்சம் நான்கு ஆண்டு பி. எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- எதிர்கால தொற்று சூழ்நிலைகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காக, ஆன்லைன் வழிக்கல்வியானது பெரிய அளவில் உயர்த்தப்படும்.
புதிய கல்வி கொள்கையின் குறைபாடுகள்
- இந்தியாவில் மாணவர்-ஆசிரியர் விகிதம் ஒரு சிக்கலான இருப்பதால் மொழி ஒரு எதிர்மறையானகாரணியாகும், இதனால் கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு பாடத்தையும் தாய் மொழிகளில் அறிமுகப்படுத்துவது ஒரு சிக்கலாகும்.
- சில நேரங்களில், திறமையான ஆசிரியரைக் கண்டுபிடிப்பது பிரச்சினையாக மாறும்
- தாய் மொழிகளில் பாட புத்தகங்களைக் கொண்டு வருவது மற்றொரு சவால் ஆகும்.
- பட்டப்படிப்பை முடிக்க விரும்பும் மாணவர்கள் நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒருவர் தனது பட்டய படிப்பை இரண்டு ஆண்டுகளில் எளிதாக முடிக்க முடியும். இது மாணவர்களை பாதியில்படிப்பை விட்டு வெளியேற ஊக்குவிக்கும்.
- தனியார் பள்ளிகளின் மாணவர்கள் அரசுப்பள்ளிகளின் மாணவர்களைக் காட்டிலும் முந்தைய வயதிலேயே ஆங்கிலக் கல்வியில் அறிமுகப்படுத்தப்படுவர்.
- கல்வி பாடத்திட்டமானது அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பிராந்திய மொழிகளிலேயே கற்பிக்கப்படும்.