புறநானூறு 1

  • புறநானூறு எட்டுதொகை நூல்களுள் ஒன்று.
  • புறநானூறு, புறத்திணை சாரந்த நானூறு (400) பாடல்களைக் கொண்டது.
  • புறம், புறப்பாட்டு என்றும் புறநானூறு வழங்கப்படுகிறது.
  • புறநானூறு அகவற்பாக்களால் ஆனது.
  • பல்வேறு வரலாற்றுச்செய்திகள் அடங்கிய தமிழரின் வாழ்வியல் பண்பாட்டுக் கருவூலமாகத் புறநானூறு திகழ்கிறது
  • புறநானூறு, வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாமல், வாழ்வின் விழுமியங்களையும் பேசுகிறது.
  • பண்டைக்காலத் தமிழக வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை, போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுக்கல் குறித்தும் குறுநில மன்னர்கள், வேளிர்கள், புலவர்கள், சான்றோர்கள் பெருமைகளையும் தமிழ் மக்களின் புறவாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம், முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக புறநானூறு விளங்குகிறது.

புறநானூறு முதன் முதலாக அச்சில் பதிப்பித்தது

  • சுவடிகளில் எழுதப்பட்டு அழிந்துபோகும் நிலையில் இருந்த புறநானூற்றின் சுவடிகளை ஒப்பிட்டு ஆராய்ந்து, உ.வே.சா. 1894 ஆம் ஆண்டு முதன் முதலாக அச்சில் பதிப்பித்து வெளியிட்டார்

புறநானூறு மொழிப்பெயர்ப்புகள்

  • புறநானூறுப் பாடல்கள் சிலவற்றை “Extracts from purananooru Purapporul venbamalai” என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஜி.யு.போப் (G. U. POPE), மொழிப்பெயர்த்துள்ளார்.
  • புறநானூறு, 1999ஆம் ஆண்டு கலிபோர்னியோ பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் போராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் (GEORGE L. HART) The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 சொல்லேரு உழவனுக்குக் கவரி வீசிய வில்லேரு உழவன்

  • சொல்லேரு உழவன் – புலவர் மோசிகீரனார்
  • கவரி வீசிய வில்லேரு உழவன் – தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
  • ஏடாளும் புலவர் மோசிகீரனார் நாடாளும் மன்னர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காண அரண்மனை சென்றார்.
  • களைப்பு மிகுதியால் புலவர் மோசிகீரனார் முரசுக் கட்டிலில் கண்ணயர்தார்.
  • அரசு குற்றமான அச்செயலைச் செய்த புலவர் மோசிகீரனாருக்குத் தண்டனை வழங்காமல் மன்னர் பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசினார்.
  • உறங்கிய புலவர் மோசிகீரனார். கவரி வீசிய மன்னர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
  • மன்னர் பெருஞ்சேரல் இரும்பொறையின் செயலைக் கண்டு வியந்து, கண் விழித்த புலவர் மோசிகீரனார் பா மழை பொழிந்தார். அப்பாடல்…

மாசற விசித்த வார்புறு வள் பின்” ……..புலவர் மோசிகீரனார், புறநானூறு 50

புறநானூறு முக்கிய மேற்கோள்கள்

  • உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! – புறநானூறு 18
  • உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும். பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே! – புறநானூறு –183
  • உண்பது நாழி உடுப்பவை இரண்டே! – புறநானூறு 189
  • யாதும் ஊரே யாவரும் கேளிர்! – புறநானூறு – 192
  • சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே! – புறநானூறு – 312

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!