புறநானூறு-3 குடபுலவியனார்

  • நீர்நிலைகளை உருவாக்கிய பாண்டியன் நெடுஞ்செழியனை போற்றிய பாடல்
  • நீர்நிலைகளை உருவாக்குபவர்களை “உயிரை உருவாக்குபவர்கள்” என்று போற்றியது

திணை  –  பொதுவியல் திணை

துறை  – முதுமொழிக்காஞ்சி

பொதுவியல் திணை

  • வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும். செய்திகளையும். முன்னர் விளக்கப்படாத

முது மொழிக் காஞ்சித் துறை

  • அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல் முது மொழிக் காஞ்சித் துறை

பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது

பாடல் – 18: 11 – 30

வான் உட்கும்வடி நீண் மதில், மல்லர் மூதூர் வய வேந்தே!

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்

ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி, ஒருநீ ஆகல் வேண்டினும்,

சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும்,

மற்று அதன் தகுதி கேள் இனி மிகுதி ஆள!

 

நீர் இன்று அமையா யாக்கைக்கு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!***

 

வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன், வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே!

அதனால் அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே;

நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத் தட்டார் அம்மே ! இவண் தட்டாரே! தள்ளாதோர் இவண் தள்ளாதோரே! * **

 

  • உலகில் உள்ள யாவற்றையும் மிகுதியாகக் கொண்டு விளங்கும் பாண்டிய நெடுஞ்செழியனே!
  • வான்வரை உயர்ந்த மதிலைக் கொண்ட பழைமையான ஊரின் தலைவனே! வலிமை மிக்க வேந்தனே!
  • நீ மறுமை இன்பத்தை அடைய விரும்பினாலோ உலகு முழுவதையும் வெல்ல விரும்பினாலோ நிலையான புகழைப் பெற விரும்பினாலோ செய்ய வேண்டியன என்னவென்று கூறுகிறேன். கேட்பாயாக!

 

  • நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
  • உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர்***

 

  • நெல் முதலிய தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது.
  • அதனால், நான் கூறிய மொழிகளை இகழாது விரைவாகக் கடைப்பிடிப்பாயாக
  • நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.
  • அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்.***

சொல்லும் பொருளும்

  • யாக்கை – உடம்பு
  • புணரியோர் – தந்தவர்
  • புன்புலம் – புல்லிய நிலம்
  • தாட்கு – முயற்சி, ஆளுமை
  • தள்ளாதோர் – நீரை தேக்காதவர்
  • தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – குறைவில்லாது நீர்நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார். ***

பாடலின் சுருக்கம்

விண்ணை முட்டும் திண்ணிய நெடுமதில் வளமை நாட்டின் வலிய மன்னவா போகும் இடத்திற்குப் பொருள் உலகம் வெல்லும் ஒரு தனி ஆட்சி வாடாத புகழ் மாலை வரவேண்டுமென்றால் தகுதிகள் இவைதாம் தவறாது தெரிந்துகொள்

உணவால் ஆனது உடல் நீரால் ஆனது உணவு உணவு என்பது நிலமும் நீரும்

நீரையும் நிலத்தையும் இணைத்தவர் உடலையும் உயிரையும் படைத்தவர் புல்லிய நிலத்தின் நெஞ்சம் குளிர வான் இரங்கவில்லையேல் யார் ஆண்டு என்ன

அதனால் எனது சொல் இகழாது நீர்வளம் பெருக்கி நிலவளம் விரிக்கப் பெற்றோர் நீடுபுகழ் இன்பம் பெற்றோர் நீணிலத்தில் மற்றவர் இருந்தும் இறந்தும் கெட்டோர் மண்ணுக்குப் பாரமாய்க் கெட்டோர்.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!