பொதுநிதி
- பொது நிதி என்பது அரசின் நிதி சார்ந்தவை பற்றி படிக்கக்கூடியதாகும்.
- இது அரசின் வருவாய் மற்றும் செலவுகளைப் பற்றியும், அவை ஒன்றொடொன்று எவ்வாறு சரி செய்து கொள்கிறது என்பதை பற்றியும் விளக்குகிறது
பொதுநிதி மற்றும் தனியார் நிதி
- பொது நிதி என்பது அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குகிறது. தனியார் நிதி என்பது தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களின் வருவாய், செலவு, கடன் மற்றும் அதன் நிதி நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றி படிக்கிறது.
- பொது நிதிமற்றும் தனியார் நிதி அடிப்படையில் ஒன்றுபோல் இருந்தாலும் அவற்றின் அளவு, நோக்கம், விளைவு, தாக்கம் ஆகியவற்றில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.
ஒற்றுமைகள்
பகுத்தறியும் தன்மை
- பொது மற்றும் தனி நிதி பகுத்தறிவை அடிப்படையாக கொண்டவை. இரண்டும் குறைந்த செலவில் அதிக நலத்தைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடனுக்கான வரையறை
- இரண்டுக்குமான கடன்கள் வரையரைக் கொண்டுள்ளது. தனது வருவாய்க்கு அப்பால் அரசும் செல்வதில்லை. அரசின் பற்றாக்குறை வரவு செலவு, திட்டத்திற்கும் எல்லை இருக்கிறது.
வளங்களின் பயன்பாடு
- தனி மற்றும் பொது துறைகள் வரையறுக்கப்பட்ட வளங்களையே கொண்டுள்ளது. இவ்விரண்டும் உத்தம அளவில் வளங்களைப் பயன்படுத்த முனைகிறது.
நிர்வாகம்
- நிர்வாகத் திறனானது அரசு மற்றும் தனியாரின் செயல்திறனைப் பொருத்து அமைகிறது. செயல்திறன் இன்மை மற்றும் ஊழல் ஆகியவை நிர்வாகத்தில் காணப்பட்டால் விரயங்கள் மற்றும் நட்டங்கள் ஏற்படும்.
வேற்றுமைகள்
வருமான மற்றும் செலவு சரி கட்டல்
- அரசு செலவினை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப வருவாயை எழுப்ப முயற்சிக்கிறது.
- தனிநபர்கள் வருவாய்க்கு ஏற்ப செலவினை வைத்துக் கொள்வார்கள்.
கடன்
- அரசானது உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வழிகள் மூலம் கடன்களை பெறலாம்.
- மேலும் அரசானது, பத்திரங்களை வெளியிட்டு மக்களிடம் கடனைப் பெறலாம். ஆனால் தனியார் இவ்வாறு அவர்களிடம் கடனைப்பெறமுடியாது.
பணம் அச்சடிக்கும் உரிமை
- அரசு வேண்டுமெனில் பணத்தை அச்சடிக்கலாம். இது பணத்தை உருவாக்குதல்,பகிர்வு செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தனியார் பணத்தை உருவாக்க இயலாது.