புதுமை விளக்கு – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
- திருமாலை வழிபாட்டுச் சிறப்பு நிலை எய்திய ஆழவார்கள் 12 பேர்கள் (பன்னிருவர்).
- பன்னிரு ஆழவார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும்
- நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனி ஆவார்
அந்தாதி
- ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலடியாக அமைவது அந்தாதி என்பர்.
- அந்தம் – முடிவு. ஆதி – முதல் அந்தாதி – முடிவு + முதல்
- அந்தாதி சிற்றிலக்கிய வகைகளிள் ஒன்று ஆகும்.
முதலாழ்வார்கள்
- பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
- ஆகிய (மூன்று) 3 பேரையும் முதலாழ்வார்கள் என்பர்.
பொய்கையாழ்வார்
- பொய்கையாழ்வார் திருவெஃகா (காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ளது) என்னும் ஊரில் பிறந்தவர்
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார் பாடியதாகும்.
- பொய்கையாழ்வார் பாடிய முதல் திருவந்தாதியின் முதல் பாடல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:
பூதத்தாழ்வார்
- பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர்
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதியை பூதத்தாழ்வார் இயற்றியுள்ளார்.
- பூதத்தாழ்வார் பாடிய இரண்டாம் திருவந்தாதியின் முதல் பாடல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் திருவந்தாதி – பொய்கையாழ்வார்
பாடல் –1 ***
வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய
கதிரோன் விளக்காக செய்ய *
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ் சொன் மாலை
(பொய்கையாழ்வார்)
இடராழி நீங்குகவே என்று.
-பொய்கையாழ்வார்.
பாடலின் பொருள்
பூமியை அகல் விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால்
சிவந்த ஒளி வீசும் சக்கரத்தை உடைய திருமாலின் திருவடிகளுக்கு என் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன் (பொய்கையாழ்வார்).
சொல்லும் பொருளும்
- வையம் -உலகம்
- தகளி – அகல் விளக்கு
- வெய்ய – வெப்பக்கதிர் வீசுமி
- சுடர் ஆழியன் – ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
- சொல் மாலை – பாமாலை
- இடர் ஆழி – துன்பக் கடல்
இரண்டாம் திருவந்தாதி பூதத்தாழ்வார்
பாடல்-1***
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா நென்பு உருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றியனேன் ஞானத்தமிழ் நாரணற்கு
புரிந்த நான் (பூதத்தாழ்வார்)
– பூதத்தாழ்வார்.
பாடலின் பொருள்
ஞானத்தமிழ் பயின்ற நான் (பூதத்தாழ்வார்) அன்பையே
அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு,
ஞான ஒளியாகிய சுடர் விளக்கை. மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.
சொல்லும் பொருளும்
- ஞானம் – அறிவு
- அந்தம் – முடிவு
- ஆதி – முதல்
- அந்தாதி – அந்தம் + ஆதி
- அந்தாதி – முடிவு முதல்
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————