பாரதியார்

  • பாரதியாரின் இயற்பெயர்சி. சுப்பிரமணியன்
Contents show
பாரதியாரின் சிறப்பு பெயர்கள்
  • செந்தமிழ்த் தேனீ
  • சிந்துக்குத் தந்தை
  • மகா கவி
  • புதிய அறம் பாட வந்த அறிஞன்
  • நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
  • பாட்டுக்கொரு புலவன்
  • எட்டயபுர ஏந்தல்
  • மறம் பாட வந்த மறவன்
  • இருபதாம் (20)நூற்றாண்டின் இனையற்ற கவிஞர்.
பாரதியாரின் சிறப்புகள்
  • பாரதி என்னும் பட்டம் எட்யபுர மன்னரால் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்வர்.
  • கேலிச்சித்திரம் – கருத்துப்படம் உருவாக்கியவர்.
  • தமிழில் வசனகவிதை வடிவத்தை அறிமுகப்படுத்தியவர்.
பாரதியார் எழுதிய நூல்கள்
  • பாரதியார் எழுதியுள்ள வசன கவிதைகாற்று
  • பாரதியார் எழுதியுள்ள வசன நடைசிட்டு குருவி
  • பாரதியார் எழுதியுள்ள காவியங்கள்குயில் பாட்டு , பாஞ்சாலி சபதம்
  • பாரதியார் எழுதியுள்ள உரைநடைசந்திரிகையின் கதை, தராசு
  • குழந்தைகளுக்கான நீதி பாடல்கள்கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்தி சூடி
பாரதியார் எழுதியுள்ள பிற நூல்கள்
  • நாட்டுப்பாட்டு
  • முரசுப்பாட்டு
பாரதியார் நடத்திய இதழ்கள்
  • சுதேசமித்திரன்
  • சூரியோதயம்
  • கர்மயோகி
  • இந்தியா
பாரதியாரை பாராட்டிய பாரதிதாசன்
  • செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்று பாரதியாரைப் பாராட்டியவர் பாரதிதாசன்.
வசன கவிதை முன்னோடி பாரதி
  • யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உரைநடையும் கவிதையும் இணைந்து உருவாக்கப்படும்
  • கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. வசனகவிதை, ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும்.
  • வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
  • வசனகவிதை வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த
  • பாரதியார் வசனகவிதை வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார்.
பாரதியின் பரிணாமங்கள்
  • மகாகவி என்ற பேரொளியில் பாரதியின் பல பரிமாணங்கள் மறைந்துள்ளன‘.
  • கட்டுரையாளர்
  • சிறுகதை ஆசிரியர்
  • மொழிபெயர்ப்பாளர்
  • அரசியல் அறிஞர்
  • ஆன்மிகவாதி
  • பாடகர்
  • விடுதலைப் பேராட்ட வீரர்
  • சிறந்த பேச்சாளர்
  • கவிஞர்
  • சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர்
  • இவை அனைத்திற்கும் மேலாக மிகச்சிறந்த இதழாளர்.
  • இளம் வயதிலேயோ சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
  • சமுதாய ஏற்றத்தாழ்வுகைளயும், பெண் அடிமைத்தனத்தையும் எழுதியவர்.
  • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
  • நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
பாரதியாரின் நூல்கள் பாடப்பகுதியில் உள்ளவை
  • இதழாளர் பாரதி
  • தம்பி நெல்லையப்பருக்கு (கடிதம்)
  • காற்றே வா – (காற்று என்னும் தலைப்பிலான வசன கவிதையின் ஒரு பகுதி)
  • காணி நிலம் –  (பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது)
இதழியல் துறையில் பாரதி
  • பாரதியின் உலகளாவிய பார்வை கூர்மைப்பட இதழியல் பணியே தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும்.
  • பாரதி எட்டையபுரம் சமஸ்தானத்தின் பணிக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறிய, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
  • பின்னர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் இருந்து வெளியேறி, சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
  • இதழியல் துறைக்குப் பாரதி வந்தது சாதாரண நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதில் அசாதாரணமானவற்றை நிகழ்த்திக் காட்டினார்.
  • பாரதியின் பண்முக தன்மை வெற்றிக்கு காரணம் நேர மேலாண்மையே.
  • தம் பெயரையும் தம்மையும் முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்களுக்கிடையில் தான் என்ற ஒன்றை ஒழித்தவர் பாரதி.
பாரதி ஆசிரியராகவும் துணையாசிரியராகவும் பங்காற்றிய இதழ்கள்
  • சுதேச மித்திரன்
  • சக்ரவர்த்தினி
  • சூர்யோதயம்
  • கர்ம யோகி
  • பால பாரதி (யங் இந்தியா)
  • இந்தியா
  • விஜயா
பாரதி தம் படைப்புகளை வெளியிட்டுள்ள இதழ்கள்
  • காமன் வீல்
  • கலை மகள்
  • கதா ரத்னாகரம்
  • ஞான பாநு
  • தேச பக்தன்
  • சர்வ ஜன மித்திரன்
பாரதியின் புனைபெயர்கள்
  • ஷெல்லி தாசன்
  • சாவித்திரி
  • சக்தி தாசன்
  • காளி தாசன்
  • ரிஷி குமாரன்
  • காசி
  • உத்தமத் தேசாபிமானி
  • வேதாந்தி
  • கிருஷ்ணன்
  • நித்திய தீரர்
இதழியலில் பாரதியை பின்பற்றிய துணையாசிரியர்கள்
  • பரலி. சு. நெல்லையப்பர்
  • கனக லிங்கம்
  • PP சுப்பையா
  • N. நாக சாமி
  • ஹரி ஹரர்
  • V . ராம சாமி
  • சரஸ்வதி
  • பிஞ்சுக் காளி தாசன்
  • இளசை சுப்ரமணியன்
  • சி.சு. பாரதி
இதழ்களில் கருத்துப்படங்கள் கேலிச்சித்திரங்கள்
  • அன்றே கருத்துப்படங்களையும் கேலிச்சித்திரங்களையும் தாம் பணியாற்றிய இதழ்களில் பாரதி வெளியிட்டுள்ளார்.
  • தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாகக் கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் பாரதியார். லண்டன் பஞ்ச், இந்தி பஞ்ச் முதலிய கருத்துப்படங்களைக் கொண்ட இதழ்களைப் பார்த்து தமிழில் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட சித்திராவளிஎன்ற பெயரில் இதழ் ஒன்றையும் நடத்த விரும்பினார். ஆனால் அதைச் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது.
  • எனவே இந்தியா, விஜயா ஆகிய இரு இதழ்களிலும் கருத்துப்படங்களை வெளியிட்டுளார்.
இதழ்களில் தமிழில் தலைப்பிடுவது
  • செய்திகளுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு எழுதிக் கீழே தமிழில் தலைப்பிடுவது அக்கால இதழ்களின் வழக்கம்.
  • தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கும் முன்னோடி பாரதியே.
  • தலைப்பிடலை ‘மகுடமிடல்என்றே பாரதியார் கூறுகின்றார்.
  • 1905-07 காலப்பகுதியில் இந்தியா, சக்கரவர்த்தினி போன்ற இதழ்களில் ஆங்கிலத் தலைப்பையும் கலந்து பயன்படுத்தினார் பாரதி.
  • பிறகு ஆங்கிலத் தலைப்பு வைப்பதைக் கைவிட்டதோடு சுதேசமித்திரனில் அதைச் சாடியும் எழுதினார்.
  • மேலும், ஆங்கிலேயர்களின் கெடுபிடியால் பாரதி பாண்டிச்சேரி சென்ற போது இந்தியா இதழும் உடன் பாண்டிச்சேரிக்கு சென்றது.
  • எந்த நெருக்கடியான காலகட்டத்திலும் பாரதி தம் இதழியல் பணியைக் கைவிடவில்லை.
இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள்
  • தமிழ் இதழ்களில் தமிழ் மாதம், ஆண்டு குறிப்பிடும் முறையைக் கையாண்டதில் முன்னோடியாகப் பாரதி திகழ்ந்ததாக எழுதியிருந்தாய்.
  • ஆங்கிலக் கலப்பின்றித் தமிழில் பேசுவதையே வியப்பாகப் பார்ப்பவர்களுக்கு இடையில் தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாகக் குறித்தவர் பாரதி.
சிவப்பு வண்ணத்தாளில் இந்தியா இதழ்
  • பாரதி “இந்தியா” இதழைச் சிவப்பு வண்ணத்தாளில் வெளியிடார்.
  • சிவப்பு வண்ணம் புரட்சியையும் விடுதலையையும் குறிப்பது ஆகும்.
  • அடிமைத்தளையில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் பாரதியின் இந்தியா இதழிலும் சிவப்பு வண்ணத்திலும் வெளிப்பட்டது.
பெண்களுக்காக சக்ரவர்த்தினி
  • பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பாரதி பெண்களுக்காகத் தமது சக்ரவர்த்தினிஇதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார். அக்குறள்,
  • பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மை தான் ஒண்மையுற ஓங்கும் உலகு.பாரதி
பிறரையும் நேசிக்கும் பண்பாளர்
  • பாரதி தம்மைப் போலவே பிறரையும் நேசிக்கும் பண்பாளர்.
  • ஆங்கிலேயர்களால் தம் நண்பர்களுக்கும் எந்தக் கெடுபிடியும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நண்பர்களின் பெயர்களையும் அவர்கள் கூடிப் பேசும் இடங்களையும் புனைபெயரில் பயன்படுத்தி வந்துள்ளார்.
  • இப்புனைபெயர்களை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தியிருப்பது மகிழத்தக்கதாகும்.
  • மேலும், மற்றவர் பெயரை வெளிப்படுத்த விரும்பாத பாரதியின் இதழியல் அறத்தையும் இப்புனைபெயர்களில் காணலாம்.
  • கண்ணம்மா, வள்ளி என்ற புனைபெயர்களிலேயே தம் மனைவி செல்லம்மாவையும் குறிப்பிட்டிருப்பார்.
பாரதியார் கட்டுரைகள்
  • எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது. -பாரதியார் கட்டுரைகள்
தம்பி நெல்லையப்பருக்கு – பாரதியார்
மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம்
  • ரா. அ. பத்மநாபன் பதிப்பித்த பாரதி கடிதங்கள்என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது.
பாரதியின் கடிதங்கள்
  • பாரதி, முதல் கவிதைக் கடிதம் பதினந்து 15 வயதில் கல்வி கற்க உதவி வேண்டி எட்டையபுரம் அரசருக்கு எழுதியது.
  • பாரதி, தம் மறைவிற்கு முன்னர் எழுதிய கடிதம் குத்தி சேகருக்கு எழுதியது. பாரதியின் கடிதங்கள் அனைத்தும் நம்மிடம் பேசுவது போல இருப்பதே பாரதியின் நடையழகின் சிறப்பு.
எட்டையபுரம் ஜமீனுக்குப் பாரதி எழுதிய கவிதை கடிதம்
  • பாரதி, (பதினந்து) 15 வயதில் கல்வி கற்க உதவி வேண்டி எட்டையபுரம் அரசருக்கு கவிதை கடிதம் எழுதினார்.
  • ஐயநின் (எட்டையபுரம் மன்னர்) அருளே அருங்கதி யென்ன உய்ய இவண்(பாரதி) வந்துற்று
  • என் தந்தையார் என்னையும் புறமொழி கற்க வென்றி இயும்புவர்
  • என்னை யான் செய்குவ தின்றமிழ் கற்பினோ பின்னை ஒருவரும் பேனார் **
  • ஆதலின்கன்ன யான்(பாரதி) அம்மொழி(தமிழ்) கற்கத் துணிந்தனன்* எனினும் கைப்பொருள் அற்றான் கற்பது எவ் வகை?
வம்சமணி தீபிகை நூலும் பாரதியும்
  • எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் கூறும் நூல் வம்சமணி தீபிகை.
  • வம்சமணி தீபிகை என்னும் நூலை கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் 1879ல் வெளியிட்டார்.
  • பாரதி வம்சமணி தீபிகை பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசைபட்டு, 6. ஆகஸ்ட், 1919ல் ஆட்சி செய்த வேங்கடேசுர எட்டையப்பருக்கு கடிதம் எழுதினார்.
  • பலவிதமான குற்றங்களை உடைய வம்சமணி தீபிகை நூலை நல்ல இனிய தமிழ்நடையில் அமைத்துத் தருவேன் என்று பாரதி குறிப்பிட்டார்.
  • ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. வம்சமணி தீபிகை நூலின் மூல வடிவம் அப்படியே 2008ல் மறு பதிப்பாக இளசை மணி என்பவர் வெளியிட்டார்.
பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம்
  • பாரதி எழுதிய கடிதம் – இடம் மற்றும் நாள் – புதுச்சேரி, 19, ஜுலை 1915. எனது அருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்பரைப் பராசக்தி நன்கு காத்திடுக.
  • நினது (நெல்லையப்பர்) உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள் ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு(நெல்லையப்பருக்கு) நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்.
  • நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது.
  • நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட
  • வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை.
  • உனக்கு (நெல்லையப்பர்) ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்த பாஷைப் பத்திரிகைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் – தமிழ்நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும்!
  • தமிழ், தமிழ், தமிழ் – என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க! ஆனால் புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் – தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்.
  • தம்பி – உள்ளமே உலகம்! ஏறு! ஏறு! ஏறு! மேலே! மேலே! மேலே!
  • நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.
  • உனக்குச்(நெல்லையப்பர்) சிறகுகள் தோன்றுக. பறந்து போ. பற! பற! – மேலே மேலே! மேலே!
  • தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது. தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது.
  • தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.
  • அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது.
  • ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.
  • பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது. பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.
  • தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு. வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக.
  • முயற்சிகள் ஓங்குக. சங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமி நூல், வான நூல், இயற்கை நூலின் 1000 (ஆயிரம்) கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.
  • சக்தி! சக்தி ! சக்தி! என்று பாடு. தம்பி – நீ வாழ்க!
பரலி. சு. நெல்லையப்பர்
  • பரலி சு. நெல்லையப்பர் விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
  • பாரதியாரைவிட (ஏழு)7 ஆண்டுகள் இளையவரான பரலி சு. நெல்லையப்பரை பாரதி
  • தன்னுடைய அருமைத் தம்பியாக கருதி அன்புகாட்டி வந்தார். பாரதியின் கடிதங்கள்
  • பரலி சு. நெல்லையப்பரை நன்றாகப் புரிந்துகொள்ளத்  துணைபுரிகின்றன.
  • பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பா பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பரலி சு. நெல்லையப்பர் பதிப்பித்தார்.
  • பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக பரலி சு. நெல்லையப்பர் பணியாற்றினார்.
  • லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பரலி சு. நெல்லையப்பர் பணியாற்றினார். 
பரலி சு. நெல்லையப்பர் எழுதியுள்ள நூல்கள்
  • கவிதை நூல்கள்
  • நெல்லை தென்றல்
  • பாரதி வாழ்த்து
  • உய்யும் வழி
வாழ்க்கை வரலாறு
  • வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு
தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார்
  • தமிழை உயிராகக் போற்றி வாழ்த்திப் பாடியுள்ள பாரதியின் பாடல்.
  • பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது
மொழி
  • மொழி கருத்தை அறிவிக்கும் கருவி, மக்களின் பண்பாட்டுடன் தொடர்புடையது, உணர்வுடன் கலந்தது.
கவிதை

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ் மொழி! வாழிய வாழியவே!

வானம் அளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே!

எங்கள் தமிழ் மொழி! எங்கள் தமிழ் மொழி! என்றென்றும் வாழியவே! *

சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத் துலங்குக வையகமே! **

தொல்லை வினை தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே! **

வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழியே!

வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே! * *

-பாரதியார்

சொல்லும் பொருளும்
  • நிரந்தரம்காலம் முழுமையும்
  • வண்மொழி – வளமிக்க மொழி
  • வைப்புநிலப்பகுதி
  • இசை –  புகழ்
  • சூழ் கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
  • தொல்லை – பழமை, துன்பம்

முந்தைய ஆண்டு வினாக்கள்

‘ஷெல்லிதாசன்’ என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்?
(A) சுப்பிரமணிய பாரதியார்
(B) சுத்தானந்த பாரதியார்
(C) சோமசுந்தர பாரதியார்
(D) சுப்ரமணிய சிவா

“யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்” – என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?
(A) வாணிதாசன்
(B) கணியன்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாடியவர்
(A) இளங்கோவடிகள்
(B) பாரதிதாசன்
(C) பாரதியார்
(D) கவிமணி

“வயிரமுடைய நெஞ்சு வேணும்” எனக் கூறிய கவிஞர்
(A) பாரதிதாசன்
(B) கவிமணி
(C) பாரதியார்
(D) அழ, வள்ளியப்பா

“நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்” என்று முழக்கமிட்டவர்
(A) சி. சுப்பிரமணிய பாரதியார்
(B) பாரதிதாசனார்
(C) உ.வே.சா. ஐயர்
(D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்’ கம்பரைப் புகழ்ந்து பாடியவர் யார்?
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) சுரதா
(D) வாணிதாசன்
பாரதியார் வசன கவிதை எழுத உந்துதலாய் இருந்த அமெரிக்கக் கவிஞர்
(A) வால்ட் விட்மன்
(B) ஹோர்ட்ஸ்வொர்த்
(C) கீட்ஸ்
(D) ஷேக்ஸ்பியர்

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்ற தொடரை எழுதியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) கவிமணி
(D) சுரதா
பாரதியார் இயற்றிய ஞானரதம் என்னும் நூல் வகையைச் சார்ந்தது.
(A) சமய இலக்கியம்
(B) கவிதை இலக்கியம்
(C) உரைநடை இலக்கியம்
(D) நாடக இலக்கியம்

பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?
(A) ஜார்ஜ் எல். ஹார்ட்
(B) வால்ட்விட்மன்
(C) லிண்ட் ஹோம்
(D) ஹால் சிப்மேன்

இந்தியா விஜயா என்ற இதழ்களை வெளியிட்டர்
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்.
(C) திரு.விக
(D) முடியரசன்

‘ஓருருக் கொருநாட்டுக் குரிய தான
ஓட்டைச் சாண் நினைப்புடையர் அல்லர்’ – யார்?
(A) கவிமணி
(B) கண்ணதாசன்
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!