மத்திய புலனாய்வுத் துறை:
- மத்திய புலனாய்வுத் துறை உள்துறை அமைச்சகத்தின் தீர்மானம் மூலம் 1963-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- இந்தியாவின் பாதுகாப்பு, உயர்மட்ட ஊழல், கடுமையான மோசடி, அகில இந்திய (அ) மாநிலங்களிடையே நடைபெறும் சமூக குற்றம் போன்றவை தொடர்பான கடுமையான குற்றங்களை விசாரிக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது.
- மத்திய புலனாய்வுத் துறை குற்றங்களை விசாரிக்க தனது சட்ட அதிகாரங்களை டெல்லி சிறப்பு காவல் நிறுவனச் சட்டம், 1946 லிருந்து பெறுகிறது.
- இது ஊழல் தடுப்பு (ம) நிர்வாகத்தில் ஒருமைப்பாட்டை பராமரிக்க உதவுகிறது.
மேற்பார்வை:
- ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் மத்திய புலனாய்வுத் துறை மேற்கொள்ளும் விசாரணைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்பார்வை இடுகிறது.
- இதர பொருட்பாடுகளில் பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை மேற்பார்வை செய்கிறது
செயல்பாடுகள்:
- மத்திய அரசு ஊழியர்களின் ஊழல், லஞ்சம் மற்றும் நெறிதவறிய தொடர்பான டக்குகளை விசாரித்தல்
- நீதி மற்றும் பொருளாதார சட்டங்களை மீறுவது தொடர்பான வழக்குகளை விசாரித்தல், இருப்பினும், இதுபோன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட துறைகளின் கோரிக்கை அடிப்படையிலேயே கலந்தாலோசிக்கப்படுகின்றன.
- தொழில்முறை குற்றங்கள் செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் செய்யம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கடுமையான குற்றங்களை விசாரித்தல்
- ஊழல் எதிர்ப்பு, முகமைகள் மற்றும் பல்வேறு மாநில காவல் படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.
- ஒரு மாநில அரசின் வேண்டுகோளின் படி, டாது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது.
- குற்ற புள்ளி விவரங்களை பராமரித்தல் மற்றும் குற்றவியல் தகவல்களை பகிர்தல்