மரபணு சிகிச்சை (Gene therapy)
- மரபணுச் சிகிச்சை என்பது, குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சையாக ஒரு மரபணுவின் வெளிப்பாட்டை மாற்றியமைத்தல் அல்லது சிகிச்சைப் பயன்பாட்டிற்காக உயிரணுக்களின் உயிரியல் பண்புகளை மாற்றியமைத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு மருத்துவத் துறையாகும்
- ஒரு மரபணுத்திடீர் மாற்றத்தால் உருவாகும் நோய்களான, “நீர்மத்திசுவழற்சி” (Cystic fibrosis) மற்றும் ‘இரத்த உறையாமை’ (Haemophilia) Guns நோய்களைக் குணப்படுத்தும் முயற்சியே மரபணு சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும்.
மரபணு சிகிச்சை முறை
- குறிப்பிட்ட மரபணுவைத் தனித்துப் பிரித்தெடுத்து அதன் நகல்களை உருவாக்கி பின்பு அவற்றை இலக்கு செல்களுக்குள் செலுத்தி விரும்பிய (சரியான) புரதத்தை உற்பத்தி செய்தலே மரபணு சிகிச்சை ஆகும்.
- இவ்விதம் செலுத்தப்படும் மரபணுவை, பெறுபவரின் உடலுக்குள் அது சரியான விதத்தில் செயல்பட்டு வெளிப்பாட்டை அளிக்கிறதா என்பதையும் இந்த மரபணுவில் உருவாக்கப்படும் புதிய வகைப் புரதங்களோடு அந்நபரின் நோய்த்தடைகாப்பு மண்டலம் எதிர்வினை ஏதும் புரியவில்லை என்பதையும் மற்றும் நோயாளிக்குத் தீங்கு ஏதும் ஏற்படவில்லை என்பதையும் மரபணு சிகிச்சையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுதல் மிக முக்கியமானதாகும்.
சவால்கள்
குறுகிய கால ஆயுள் கொண்ட மரபணு சிகிச்சை
- எந்த ஒரு நிலைக்கும் மரபணு சிகிச்சை ஒரு நிலையான குணப்படுத்தியாக மாறும் முன்னர், இலக்கு வைக்கப்பட்ட உயிரணுக்குள்ளாக செலுத்தப்படும் சிகிச்சை டிஎன்ஏ செயல்படும் நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதுடன் இந்த சிகிச்சை டிஎன்ஏவைக் கொண்டிருக்கும் உயிரணுக்கள் நீண்ட காலம் வாழ்பவையாகவும் நிலையானவையாகவும் இருக்க வேண்டும்.
நோயெதிர்ப்பு அமைப்பு எதிர்வினை
- மனித திசுவிற்குள்ளாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒரு அந்நியப் பொருள் சேர்ந்துவிடலாம், இந்த நோயெதிர்ப்பு அமைப்பான அந்த ஊடுருவும் பொருளை தாக்கத் தொடங்கிவிடுகிறது.
- இம்முறையில் நோயெதிர்ப்பு அமைப்பைத் தூண்டுவதில் உள்ள அபாயத்தினால் மரபணு சிகிச்சையின் பலனளிப்புத் திறன் குறைவதற்கு எப்போதுமே சாத்தியமுளளதாக இருக்கிறது