மருதகாசி (13 பிப்ரவரி 1920 – 29 நவம்பர் 1989)

மருதகாசி

  • மருதகாசி தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.
  • திரைக்கவி திலகம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் மருதகாசி.
  • மருதகாசி, அரியலூர் மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தார்.
  • மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007ல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.
  • 1949ல் மாயாவதி என்ற படத்தில் வரும் பெண் எனும் மாயப் பேயாம். என்று தொடங்கும் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார்.
  • தந்தை பெயர் அய்யம்பெருமாள், தாயார் மிளகாயி அம்மாள்,

கவிதை

பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு செல்லக்கண்ணு

நீயும் வித்துப்போட்டுப் பணத்த எண்ணு செல்லக்கண்ணு.

-மருதகாசி

மருதகாசியின் சிறந்த மேற்கோள்கள்

  • சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
  • மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே
  • கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
  • சிரிப்பு இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு

ஏர்முனை – மருதகாசி

  • மருதகாசி பாடல்கள் என்னும் நூலில் இருந்து ஏர்முனை என்ற பாடல் எடுக்கப்பட்டது.
  • ஏர்முனை என்னும் பாடல் சமூகம் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

கவிதை

ஏர்முனைக்கு நேரிங்கே ஏதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!

பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே

நாம் சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே இந்தத் தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே!

நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக அது நெல்மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக்கொத்தாக

பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக்கட்டாக அடிச்சுப் பதரு நீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக

வளர்ந்து விட்ட பருவப் பெண் போல் உனக்கு வெட்கமா? தலை வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா

இது வளர்த்துவிட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? என் மனைக்கு வரக்காத்திருக்கும் நீ என் சொத்தம்மா.

-மருதகாசி

முந்தைய ஆண்டு வினாக்கள்

”சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே”- இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது – எனப் பாடியவர்
(A) கண்ணதாசன்
(B) தஞ்சை இராமையாதாஸ்
(C) மருதகாசி
(D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
“திரைக்கவித் திலகம்’ என்ற சிறப்புக்குரியவர்
(A) வாலி
(B) உடுமலை நாராயண கவி
(C) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
(D) மருதகாசி
‘ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே! என்ற பாடலின் ஆசிரியர் யார்?
(A) பட்டினத்தார்
(B) மருதகாசி
(C) உடுமலை நாராயணகவி
(D) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
‘திரைக்கவித் திலகம்’ எனச் சிறப்புப் பெயர் பெற்றவர்
(A) கண்ணதாசன்
(B) வாலி
(C) வைரமுத்து
(D) மருதகாசி
‘திரைக்கவித் திலகம்’ என்றழைக்கப்படுபவர் யார்?.
(A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(B) மருதகாசி
(C) உடுமலை நாராயணகவி
(D) சுரதா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!