மாநில நிதி ஆணையம்
- மாநில நிதி ஆணையம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, நகராட்சிகளின் நிதி நிலையை ஆராயும் பொருட்டும், தேவையான பரிந்துரைகளை வழங்கும் பொருட்டும், ஆளுநரால் அமைக்கப்படுகிறது.
மாநில நிதி ஆணையத்தின் பணிகள்
- மாநில அரசால் விதிக்கப்படும் வரிவருவாயை, மாநில அரசிற்கும், நகராட்சிகளுக்கும் இடையே பகிர்ந்து அளித்தல்.
- நகராட்சிகளுக்கென ஒதுக்கப்படும் வரிகள், வருவாய் தொகையை நிர்ணயித்தல்.
- தொகுப்பு நிதியிலிருந்து நகராட்சிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகை மாநிலத்தில் இவற்றை நிர்ணயித்தலில் மாநில நிதி ஆணையம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- மேலும், நகராட்சிகளின் நிதிநிலையை உயர்த்தும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது.
பஞ்சாயத்துகளின் நிதி நிர்வாகம்
- மாநில நிதி ஆணையம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பஞ்சாயத்துகளின் நிதி நிலையை ஆராயும் பொருட்டும் தேவையான பரிந்துரைகளை வழங்கும் பொருட்டும் ஆளுநரால் நியமிக்கப்படுகிறது.
பணிகள்
- மாநில அரசினால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வருவாயை மாநில அரசிற்கும் பஞ்சாயத்துக்கும் இடையே பகிர்ந்தளித்தல்.
- பஞ்சாயத்துகளுக்கென ஒதுக்கப்படும் வரிகள், வருவாய் தொகையை நிர்ணயித்தல்.
- மாநிலத்தின் தொகுப்பு செய்தலில் மாநில நிதி ஆணையத்தின் பங்கு இன்றியமையாதது.
- நிதியிலிருந்து பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும் மானியத்தை நிர்ணயித்தல்
- மேலும் பஞ்சாயத்துகளின் நிதி நிலைமையை உயர்த்தும் பொருட்டு நடவடிக்கை எடுத்தல்.
- மாநில நிதி ஆணையம் தனது அறிக்கையை ஆளுநரிடம் சமர்பிக்கிறது.
- ஆளுநர் அவ்வறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கிறார்.
தமிழ்நாடு மாநில நிதி ஆணையம்
- தமிழ்நாட்டில் மாநில நிதி ஆணையமானது 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் நாள் அமைக்கப்பட்டது. இந்த நிதி ஆணையம் அரசியலமைப்பு விதி 243(1)-இன்படி உருவாக்கப்பட்டது.
பணிகள்
- உள்ளாட்சி அமைப்புகளின் (நகராட்சி மற்றும் பஞ்சாயத்து) நிதி நிலையை ஆய்வு செய்து அவற்றின் வருவாயைப் பெருக்க வழிவகைகளைக் காண்பது மற்றும் வரிவசூலை சீர் செய்வது போன்றவை இந்த நிதி ஆணையத்தின் பணிகளாகும்.