மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016:
- இந்தியா கையெழுத்திட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தத்திற்கு இணங்க இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது
முக்கிய அம்சங்கள்:
வரையறை
- ” ஊனம்” என்பது மாறிக்கொண்டே வரும் கருத்துருவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத் திறனாளிகளின் வகைப்பாடு 7ல் இருந்து 21ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இவ்வெண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, மத்திய அரசுக்கு அதிகாரமுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்டள்ளது
- பேச்சு மற்றும் மொழி தடை பெற்ற நிலை, கற்றலில் குறைபாடு, மாற்றுத் திறனாளிகளின் வகைப்பாட்டில் புதிதாக சேர்க்கப்பட்டள்ளது. அமில வீச்சினால் பாதிப்படைந்தோரும் இவ்வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
- இரத்தம் தொடர்பான நோய்கள்: தலாசீமியா, ஹீமோபீலியா, கதிர் அரிவாஸ் சோகை நோய்கள் வகைப்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளன.
சம உரிமைகள்
- மாற்றுத் திறனாளிகள் பிறருடன் சம உரிமைகள் அனுபவிப்பதை அரசு உறுதிபடுத்த வேண்டும்.
- உயர்கல்வி, வேலை, நில ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு.
- 6 முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச கல்வி.
- பொது இடங்கள் அணுகக்கூடியதாய் இருத்தல் (எளிதில் அணுகக்கூடிய இந்தியா இயக்கம்)
- அரசு நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3% முதல் 4% ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- கொள்கை வடிவமைப்பில் மத்திய மாநில ஆலோசனைக் குழு அமைப்பு.
ஒழுங்குமுறை ஆணையம்
- மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் மற்றும் மாநில ஆணையர்கள் ஒழுங்குமுறை ஆணையமாகவும், குறைதீர் முகமையாகவும் செயல்படுவர்.
- மாவட்ட அளவிலான குழுக்களை மாநில அரசு உருவாக்குதல்.
தேசிய, மாநில நிதிகள்
- மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய, மாநில நிதிகளை உருவாக்கி நிதி உதவி வழங்கல்.
- மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அபராதம்
- மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான உரிமை மீறலை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்.