Skip to content- மங்கோலிய செங்கிஸ்கான், துருக்கிய தைமூர் ஆகியோரின் வழித்தோன்றல்களான முகலாயர் இந்தியாவில் ஒரு பேரரசை நிறுவினர்.
- அப்பேரரசு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தது.
- முகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர். இப்பேரரசு 1526 இல் பானிப்பட் போரில் இப்ராகிம் லோடியை பாபர் தோற்கடித்தபின் நிறுவப்பட்டது.
- இந்தியாவில், ஒரு புதிய சகாப்தம், ஒரு புதிய பேரரசு தொடங்கி 1526 முதல் 1857 வரை நீடித்தது.
- முகலாய வம்சத்தைச் சேர்ந்த ஆறு முக்கிய அரசர்களான பாபர். ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப் ஆகியோர் “மாபெரும் முகலாய மன்னர்கள்” ஆவார்.
- இவர்கள் இந்திய வரலாற்றில் தங்களது கால்தடத்தினை பதித்து சென்றுள்ளனர்.
- 1707 இல் ஒளரங்கசீப்பின் மறைவைத் தொடர்ந்து பேரரசு வீழ்ச்சியடைந்தது என்றாலும் 1707 முதல் 1857 வரை முகலாயர் அரசு பெயரளவுக்கு ஓர் அரசாக இயங்கி வந்தது.
- இந்தியா முழுவதிலும் மையப்படுத்தப்பட்ட சீரான நிர்வாக அமைப்பை முகலாயர் உருவாக்கினர்.
- இந்தியாவைச் செழுமைப்படுத்திய மகத்தான கலை. கட்டடக்கலை. இலக்கிய, பாரம்பரியத்தையும் விட்டுச் சென்றனர்.
- பாபருடைய வருகையுடன் இந்தியாவில் ஒரு புதிய சகாப்தமும் ஒரு புதிய பேரரசும் தொடங்கியது.
- சூர் வம்சத்தைச் சேர்ந்த ஷெர்ஷாவின் குறுகியகால ஆட்சி தவிர்த்து முகலாயர் ஆட்சி கி.பி.பொ.ஆ) 1526 முதல் 1707 வரை நடைபெற்றது.
Post Views: 444
Related
error: Content is protected !!