முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் பற்றி எழுதுக

முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்

நோக்கம்

  • கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்குக்கீழ் வாழும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • நிதி ஆதாரம்: இத்திட்டத்திற்கு தேவையான முழு நிதியையும் மாநில அரசே வழங்குகிறது.
  • ஓவ்வொரு ஆண்டும் 60,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.1260 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள் மற்றும் தகுதிகள்

  • சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணி தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம் செயல்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும்.
  • ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, தாழ்வாரம் மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும்.
  • ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு வீட்டிலும் சூரிய சக்தியில் எரியும் 5 அடர்குறு விளக்குகள்   பொருத்தப்படும்.
  • வீடுகள் கட்டும் பணியினை நேரடியாக பயனாளிகள் மேற்கொள்ளலாம்.
  • இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கான நில எடுப்பு ஏதும் செய்யப்படமாட்டாது. 
  • வீட்டுமனைப்பட்டா உள்ளவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
  • அமைக்கப்படும் சூரிய சக்தி விளக்குகள் மற்றும் அத்துடன் கூடிய இதர உபகரணங்களை பயனாளிகள் முறையாக பயன்படுத்தும் விவரங்களைத் தெரிவிக்கும் சிற்றேடுகள் விநியோகம் செய்யப்படும்.
  • ஒவ்வொரு பசுமை வீடும் அனுமதிக்கப்பட்ட பரப்பளவான 300 சதுர அடிக்கு மிகாமல் இதற்கென தனியாக வடிவமைக்கப்பட்டவாறு கட்டப்படவேண்டும். 
  • இதன் வடிவமைப்பில் மாறுதல்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
  • இருப்பினும் அனுமதிக்கப்பட்ட வீட்டின் பரப்பளவான 300 சதுர அடியில் வீட்டின் வடிவமைப்பில் மாறுதல் செய்யாமல், சமையலறை மற்றும் படுக்கை அறை ஆகியவற்றை இட அமைவிற்கேற்ப மாற்றி அமைக்க அனுமதிக்கப்படும்.
  • இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிலும் முழு சுகாதார திட்ட நிதி ஒதுக்கீட்டினை ஒருங்கிணைத்து அனைத்து வீடுகளிலும் ஒரு கழிவறை அமைக்கப்படும்.
  • செராமிக் ஓடுகளில் இத்திட்டத்திற்கென வடிவமைக்கப்பட்ட சின்னம் அனைத்து வீடுகளிலும் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்படும்.

வீடுகள் ஒதுக்கீடு செய்தல்

  • மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர், கிராம ஊராட்சி வாரியாக கட்டப்பட வேண்டிய வீடுகளின் எண்ணிக்கையை முடிவு செய்வார்.
  • கிராம சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் நபர்களின் பட்டியலிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படும்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!