முத்தொள்ளாயிரம்

அறிமுகம்

  • ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவி மரபாகக் கொண்டிருந்தனர்.
  • பிற்காலக் காப்பியங்களில் நாட்டு வளம் தவறாது இடம்பெற்றது.
  • சேரன், சோழன், பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை முத்தொள்ளாயிரம் நயமாக வெளிப்படுத்துகிறது.

முத்தொள்ளாயிரம்

  • சிற்றிலக்கியத்தில் உள்ள எண் செய்யுள் வகையைச் சார்ந்தது முத்தொள்ளாயிரம் ஆகும்.
  • புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதுபிக்கப்பட்டுள்ளன.
  • முத்தொள்ளாயிரம் வெண்பாவால் எழுதப்பட்ட நூல்
  • மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோ பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது முத்தொள்ளாயிரம்.
  • மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது
  • முத்தொள்ளாயிரம் நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை
  • முத்தொள்ளாயிரம் ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை.
  • முத்தொள்ளாயிரம் நூலின் ஆசிரியர் (ஐந்தாம்) 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
  • முத்தொள்ளாயிரத்தில் மூவேந்தர்களின் சிறப்புகளாக பாடப்பட்டுள்ளது
  • அச்சமில்லாத நாடு – சேர நாடு
  • ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடு – சோழ நாடு
  • முத்துடை நாடு – பாண்டிய நாடு

சேர நாடு – அச்சமில்லாத நாடு

பாடல்

சேர நாடு அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய விழ

வெள்ளம் தீப்பட்ட(து) என வெரீஇப் புள்ளினம் தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலை வேல் கோக் கோதை நாடு (சேர நாடு)* **

பாடலின் பொருள்

  • சேர நாட்டில் சேறுபட்ட நீர் மிக்க வயல்களில் அரக்கு
  • நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன.
  • அதைக் கண்ட நீர் பறவைகள் தண்ணீரில்
  • தீப்பிடித்துவிட்டது என்று அஞ்சி விரைந்து தம்
  • குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் ஒடுக்கி வைத்துக்
  • கொண்டன
  • அடடா! பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட சேரனின் நாட்டில்
  • இந்த அச்சம் இருக்கின்றதே.

 பாடலில் வந்துள்ள அணி – தற்குறிப்பேற்ற அணி * *

சொல்லும் பொருளும்

  • அள்ளல் – சேறு
  • வெரீஇ – அஞ்சி
  • பழனம்  –  நீர் மிக்க வயல்
  • பார்ப்பு  – குஞ்சு

ஒழியா வனப்பு (8) எட்டு

  1. சம நிலை
  2. இழிப்பு
  3. இயைபு
  4. விருந்து
  5. புலன்
  6. தொன்மை
  7. துறை, விருத்தம், தாழிசை
  8. இயல், இசை, நாடகம்

 சோழ நாடு – ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடு

பாடல்

சோழ நாடு காவல் உழவர் களத்து அகத்துப் போர் ஏறி

நாவலோ ஓ என்றிசைக்கும் நாளோதை

காவலன் தன் கொல் யானை மேலிருந்து கூற்றி

இசைத்தால் போலுமே

நல் யானைக் கோக்கிள்ளி நாடு. (சோழ நாடு) ***

 பாடலின் பொருள்

சோழ நாட்டில் நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போர் மீதேறி நின்றுகொண்டு மற்ற உழவர்களை ‘நாவலோ’ என்று கூவி அழைப்பர்

இவ்வாறு அவர்கள் செய்வது வீரர்கள் போர்களத்தில் கொல் யானை மீது ஏறி நின்றுகொண்டு மற்ற வீரர்களை ‘நாவலோ’ என்று அழைப்பது போலிருந்தது.

யானைப் படைகளை உடைய சோழனது நாடு, இத்தகு வளமும் வீரமும் மிக்கது

 பாடலில் வந்துள்ள அணி – உவமை அணி **

சொல்லும் பொருளும்

  • நாவலோ  – நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
  • இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல். 

பாண்டிய நாடு -முத்துடை நாடு

பாடல்

பாண்டிய நாடு நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித் திகழ் முத்தம்

போல் தோன்றும்

செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையான்

நாடு (பாண்டிய நாடு) ***

 பாடலின் பொருள்

சங்குகள் மணலில் ஈனுகின்ற முட்டைகள் முத்துக்கள் போலிருக்கின்றன.

தரையில் உதிர்ந்துகிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துக்கள் போலிருக்கின்றன.

பந்தல் போட்டது போல் தோன்றும் பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துக்கள் போலிருக்கின்றன.

முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய பாண்டியனது நாடு இத்தகைய முத்து வளம் மிக்கது

பாடலில் வந்துள்ள அணி – உவமை அணி **

சொல்லும் பொருளும்

  • நந்து  –  சங்கு
  • கமுகு – பாக்கு
  • முத்தம் – முத்து

முந்தைய ஆண்டு வினாக்கள்

‘முத்தொள்ளாயிரம்’, இப்பாடலின் ஆசிரியர்
(A) நல்லாடனார்
(B) மிளை கிழான் நல்வேட்டனார்
(C) பெயர் தெரியவில்லை
(ID) செயங்கொண்டார்

“வையகமெல்லா மெம தென்றெழுதுமே மொய்யிலை வேல் மாறன் களிறு”
இப்பாடல் வரி இடம் பெற்ற நூல்
(A) கலிங்கத்துப்பரணி
(B) முத்தொள்ளாயிரம்
(C) பிள்ளைத்தமிழ்
(D) தமிழ்விடுதூது

கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்க. முத்தொள்ளாயிரம் முழுமையாகக் கிடைக்கவில்லை புறத்திரட்டு என்னும் நூல் வாயிலாக பழைய உரைநூல்களில் மேற்கோள்களாக_
வெண்பாக்கள் கிடைத்துள்ளன.
(A) 108, 21
(B) 107, 21
(C) 108, 22
(D) 106, 20

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் சிறப்பு குறித்து பாடப்பட்ட நூல் எது?
(A) மும்மணிகோவை
(B) முத்தொள்ளாயிரம்
(C) மூவர் உலா
(D) கலிங்கத்துப்பரணி

‘முத்தொள்ளாயிரம்’ பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I.மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம். சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் ‘முத்தொள்ளாயிரம்’
II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு, வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்
(A) I, III சரியானவை
(B) I, IV சரியானவை
(C) II, III சரியானவை
(D) III, IV சரியானவை

‘முத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைச் சுட்டுக
(A) முத்தொள்ளாயிரப் பாடல்களில் ‘புறத்திரட்டு’ என்னும் நூலின் வாயிலாக 108 வெண்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன
(B) பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 பாடல்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன
(C) பழந்தமிழர் பண்பாடு, தமிழக மூவேந்தர்கள், அவர்தம் படைகள், வீரர்கள், போரியல் முறைகள் சொல்லப்பட்டுள்ளன
(D) கவை மிகுந்த விருத்தப்பாக்கள் கற்பனைக் களஞ்சியமாகத் திகழ்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!