மூத்த குடிமக்கள் நிலையை மேம்படுத்த அரசின் திட்டங்கள்:
சமூக நீதி (ம) அதிகாரமளிப்பு அமைச்சகம்:
- முதியோருக்கான ஒருங்கிணைந்த திட்டம், 1992:
- மத்திய துறைத்திட்டம்
- குறிக்கோள்: தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சிகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் முதியோர் இல்லங்கள் மேம்பாடு, இயன் முறை மருத்துவம் (பிசியோதெரபி) நிலையங்களை நிர்வாகித்தல்.
- ராஷ்டிரிய வயோசிரி யோஜனா, 2017:
- வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவுதல் மற்றும் இலவச வாழ்க்கைத் துணைநல உபகரணங்கள் வழங்குதல்.
ஊரக மேம்பாட்டு அமைச்சகம்:
- இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்:
- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம்
- 60 முதல் 79 வயதுள்ள முதியோருக்கு மாதம் ரூ.200 மத்திய அரசு உதவி.
- 80 வயதுக்கு மேல் உள்ளோருக்கு மாதம் ரூ.500 வழங்கப்படும்.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்:
- 60 வயதிற்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு மூத்த குடிமக்கள் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் (SCHIS).
நிதி அமைச்சகம்:
- வரிஷ்ட ஓய்வூதிய காப்பீட்டு திட்டம்:
- மூத்த குடிமக்களுக்கு முதலீட்டுத் தொகையில் 9% வட்டி வீதத்தில் (ஆண்டிற்கு) உறுதி செய்யப்பட்ட வருவாய் அளித்தல்.
- LIC யால் செயல்படுத்தப்படுகிறது.
- பிரதம மந்திரி வய வந்தன யோஜனா:
- 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பத்து வருடங்களுக்கு 8% வட்டி வீதத்தில் (ஆண்டிற்கு) உறுதி செய்யப்பட்ட வருவாய் அளித்தல்.