மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கைகள்):
- பிறப்பிலேயே, பாலினத்துடன் தொடர்புடைய பாரம்பரிய விதிமுறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத அடையாளம் மற்றும் வெளிப்பாடு கொண்ட நபர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்:
- பாகுபாடு: இவர்கள் சமுதாயத்தால் களங்கப்படுத்தப்படுவதுடன் விலக்கி வைக்கப்படுகின்றனர்.
- வீட்டை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
- சமமான கல்வி வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை.
- அவர்கள் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்படுவதால் வாழ்வாதத்திற்காக பிச்சை எடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுதல் போன்றவற்றை மேற் கொள்கின்றனர்.
- இச்சமூகம் எச்.ஐ.வி. எய்ட்ஸ் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கு அதிகளவில் ஆளாகிறது.
- சமீபத்தில் UNAIDS அறிக்கையின்படி (2017) இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவரிடையே உள்ள எச்.ஐ.வி. பாதிப்பு 31% ஆகும்.
- பல்வேறு மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
- அவர்கள் தங்குவதற்கென வீடுகள் (ம) குடியிருப்புகள் வழங்க மறுத்தல். மூன்றாம் பாலினத்தவருக்கென தனியே கழிப்பறை இல்லாமை மற்றும் பொதுக் கழிப்பறைகள் பயன்படுத்துவதில் பாகுபாடு நிலவுதல்.
- மூன்றாம் பாலினத்தவர் நிலையான அடையான ஆவணங்களைப் பெறுவது சவாலானதாக உள்ளது.
- மூன்றாம் பாலினத்தவர் பெரும்பாலும் பாலியம் வன்கொடுமைகள், கற்பழிப்பு (ம) பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு ஆளாகின்றனர்.
- பரம்பரை சொத்தைப் பெறுவது (அ) குழந்தைகளைத் தத்தெடுப்பதில் புறக்கணிக்கப்படுகின்றனர்.
அரசியலமைப்பு வழங்கும் பாதுகாப்புகள்:
- ஷரத்து 14 – சமத்துவ உரிமை
- ஷரத்து 15 – சமயம், இனம், சாதி, பாலினம் (அ) பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை
- ஷரத்து 19 – பேச்சு (ம) கருத்து சுதந்திரத்திற்கான உரிமை
- ஷரத்து 21 – தனி மனித சுதந்திரத்திற்கான உரிமை
- ஷரத்து 23 – மனிதரை வணிகப் பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலை சுமத்துதல் ஆகியவற்றிற்குத் தடை
மூன்றாம் பாலினத்தவர் உரிமை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு: NAILSA (தேசிய சட்டப்பணிகள் ஆணையம்), தீர்ப்பு 2014:
- திருநங்கைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர்களை மூன்றாம் பாலினத்தவராக கருத வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது.
- ஒருவரின் பாலின அடையாளத்தை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை ஷரத்து 21ல் அடங்கும் என தெரிவித்தது.
- கல்வி, வேலைவாய்ப்பு (ம) சுகாதார வசதிகளில் இடஒதுக்கீடு வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
- அவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக சமூக நலத்திட்டங்களை அரசு வகுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
பிரிவு 377 தொடர்பான தீர்ப்பு, 2018
- நவ்தேஜ் சிங் ஜோஹர் வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் சில விதிகளை நீக்குவதன் மூலம் உச்ச நீதிமன்றம் ஓரின சேர்க்கை சட்டப்பூர்வமானது என அறிவித்தது.