ராஜா ராம்மோகன் ராய் (1772-1833)

சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் சமூகம் மற்றும் சமயத்தில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • இத்தகைய சமூக – சமய சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவின் மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்பட்டன.
  • சீர்திருத்த இயக்கங்களை இரண்டாக வகைப்படுத்தலாம்.

சீர்திருத்த இயக்கங்கள் 

  1. பிரம்ம சமாஜம்
  2. பிரார்த்தனை சமாஜம்
  3. அலிகார் இயக்கம்.

புத்தெழுச்சி மீட்டெடுப்பு இயக்கங்கள்

  1. ஆரியசமாஜம்
  2. ராமகிருஷ்ணா மிஷன்
  3. தியோபந்த் இயக்கம்

ராஜா ராம்மோகன் ராய் (1772-1833)

  • இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
  • இவர் அராபிக், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றார். பின்னர் பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் மற்றும் ஹீப்ரூ போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
  • ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் 1805 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 1814 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

பிரம்ம சமாஜம் 1828

  • 1815 ஆம் ஆண்டு ஆத்மீய சபாவைத் தோற்றுவித்தார். இதுவே பின்னர், 1828 ஆம் ஆண்டு முதல் பிரம்ம சமாஜமாக வளர்ந்தது.
  • ‘ஒரே கடவுள்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ‘பொது சமயத்தில்’ நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக பிரம்ம சமாஜம் இருந்தது.

இராஜாராம் மோகன்ராய் பின்வருவனவற்றை வன்மையாகக் கண்டித்தார்.

  • உருவ வழிபாடு, 
  • ஆடம்பரமான சடங்குகள், 
  • சமய விதிகள் 
  • சாதி வேறுபாடு
  • பொருளற்ற சமயச்சடங்குகள்
  • தீண்டாமை
  • உடன்கட்டை ஏறும் பழக்கம் 
  • பலதார மணமுறை  
  • குழந்தைகள் திருமணம்

இராஜாராம் மோகன்ராய் பின்வருவனவற்றை பின்வருவனவற்றை ஆதரித்தார் 

  • ஒருகடவுள் கோட்பாடு
  • ஆங்கிலக்கல்வி & மேலை நாட்டு அறிவியல்
  • கலப்புத் திருமணம்
  • பெண்கள் முன்னேற்றம்
  • பெண் கல்வி
  • விதவைகள் மறுமணம்
    • ராஜா ராம்மோகன் ராயின் சகோதரர் ஜெகன்மோகன் ராய் காலமானதால் அவரது மனைவியும் எரிக்கப்பட்டது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • எனவே சதி பழக்கத்திற்கு எதிராக பல கூட்டங்களை நடத்தினார். இவருக்கு ராதாகந்த் தேப் மாற்றும் பவானி சரண் பானர்ஜி போன்றோரும் உதவினர்.
    • இவரது சீரிய முயற்சியினால் 1829 ஆம் ஆண்டு ஆங்கிலத் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு ‘சதி தடை சட்டத்தை’ கொண்டுவந்தார்.

இராஜாராம் மோகன்ராய் நூல்கள் 

  • ‘ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள்’ (Precepts of Jesus Christ) 
  • ‘அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி’ (The Guide to Peace and Happiness)
  • கைம்பெண்களை உயிரோடு எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும் எதிர்ப்பொருக்குமிடையே நடைபெற்ற விவாதம் – எனும் கட்டுரையை எழுதினார்.
  • முகலாய மன்னர் இரண்டாம் அக்பருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வு ஊதியத்தை உயர்த்திப் பெற இங்கிலாந்து சென்றார். இவர் 1833 ஆம் ஆண்டு பிரிஸ்டல் என்றும் இடத்தில் இறந்தார்.
  • இவருக்கு முகலாய மன்னர் ‘இராஜா‘ என்ற பட்டத்தை வழங்கினார்.
  • இவர் புதிய யுகத்தின் அறிவிப்பாளர் என்று அழைக்கப்பட்டார் (Herald of New age in India).

 மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்

  • ராஜா ராம்மோகன் ராய் 1833 இல் இயற்கையெய்திய பின்னர் அவர் விட்டுச்சென்றப் பணிகளை, கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் தந்தையரான தேவேந்திரநாத் தாகூர் (1817-1905) தொடர்ந்தார்.

சமாஜத்தில் பிளவு

  • தேவேந்திரநாத் மிதவாதச் சீர்திருத்தவாதியாவார். ஆனால் சமாஜத்தில் அவருடன் பணியாற்றிய இளையவர்கள் விரைவான மாற்றங்களையே விரும்பினர்.
  • அவர்களுள் மிக முக்கியமானவரான கேசவ் சந்திர சென் இவர் 1857 இல் சபையில் இணைந்தார்.
  • கேசவ் சந்திரசென் முயற்சியால் 1872 ஆம் ஆண்டு, பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் போன்றவற்றை தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது.
  • “எங்களுடைய நிலை அனைத்து மதங்களிலும் உண்மைகள் இருந்தாக வேண்டும் என்பதல்ல, ஆனால் உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்களும் உண்மையானவையே” எனக் கேசவ் சந்திர சென் கூறினார்.
  • 1886 இல் பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டதால் கேசவ் சந்திர சென் சமாஜத்திலிருந்து விலகி ‘இந்திய பிரம்ம சமாஜம்’ புதிய அமைப்பொன்றை உருவாக்கினார்.
  • குழந்தைத் திருமணத்தை சமாஜம் கண்டனம் செய்திருந்தபோதும் அதற்குமாறாக கேசவ் சந்திர சென் தனது பதினான்கு வயது மகளை இந்திய இளவரசன் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தபோது குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்தியாவின் பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி சாதாரண சமாஜ் எனும்அமைப்பை நிறுவினர்.
  • இதன்பின்னர் தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு ‘ஆதி பிரம்ம சமாஜம்’ என அழைக்கப்படலாயிற்று.

தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜம்

  • தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளரான சைதை காசி விஸ்வநாத முதலியார் சமாஜத்தின் கருத்துகளை விளக்க ‘பிரம்ம சமாஜ நாடகம்’ எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதினார்.
  • கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவாக ஒரு ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார். 
  • 1864 இல் இதே நோக்கத்திற்காகத் ‘தத்துவபோதினி’ எனும் தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!