லென்சுகள்
- இரு பரப்புகளுக்கு இடைப்பட்ட ஒளிபுகும் தன்மை கொண்ட ஊடகம் ‘லென்சு’ எனப்படும்.
- இப்பரப்புகள் இரண்டும் கோளகப் பரப்புகளாகவோ அல்லது ஒரு கோளகப் பரப்பும், ஒரு சமதளப் பரப்பும் கொண்டதாகவோ அமைந்திருக்கும். பொதுவாக லென்சுகள்
- குவிலென்சு
- குழிலென்சு என இரு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
குவிலென்சு அல்லது இருபுறக் குவிலென்சு:
- இவை இருபுறமும் கோளகப் பரப்புகளைக் கொண்டது. இவை மையத்தில் தடித்தும், ஓரங்களில் மெலிந்தும் காணப்படும். இவற்றின் வழியாகச் செல்லும் இணையான ஒளிக்கற்றைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகின்றன. எனவே இவை ‘குவிக்கும் லென்சுகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
குழிலென்சு அல்லது இருபுறக் குழிலென்சு:
- இவை இருபுறமும் உள் நோக்கிக் குழிந்த மெலிந்தும், ஓரங்களில் தடித்தும் காணப்படும்.
- இவற்றின் வழியாகச் செல்லும் இணையான கோளகப் பரப்புகளைக் கொண்டது, இவை மையத்தில் ஒளிக்கற்றைகள் விரிந்து செல்கின்றன. எனவே இவை விரிக்கும் லென்சுகள் என்று அழைக்கப்படுகின்றன.
குவிலென்சின் பயன்பாடுகள்
- ஒளிப்படக் கருவியில் பயன்படுகின்றன.
- உருப்பெருக்கும் கண்ணாடிகளாகப் பயன்படுகின்றன.
- நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள் மற்றும் நழுவப்பட வீழ்த்திகள் (Slide Projector) போன்றவற்றின் உருவாக்கத்தில் பயன்படுகின்றன.
- தூரப்பார்வை என்ற பார்வைக் குறைப்பாட்டைச் சரி செய்யப் பயன்படுகின்றன.
குழிலென்சின் பயன்பாடுகள்
- கலிலியோ தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகப் பயன்படுகின்றன.
- வெளியாட்களைத் தெரிந்துகொள்ள வீட்டின் கதவுகளில் ஏற்படுத்தப்படும் உளவுத் துளைகளில் பொருத்தப்படுகின்றன.
- கிட்டப்பார்வை என்னும் பார்வைக்குறைப்பாட்டைச் சரி செய்யப் பயன்படுகிறன.
Also Read
- Nature of universe / பேரண்டத்தில் இயல்புகள்
- General Scientific Law / பொது அறிவியல் விதிகள்
- Electricity and Electronics / மின்னியல் மற்றும் மின்னணுவியல்
- Elements and Compounds / தனிமங்களும் சேர்மங்களும்
- Carbon / கார்பன்
- Nitrogen and their compounds / நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள்
- Fertilizer / உரங்கள்
- Pesticides / களைக்கொல்லி
- Insecticides / பூச்சிக்கொல்லி
- Blood and blood circulation / இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி மண்டலங்கள்
- Endocrine system reproductive system / நாளமில்லா சுரப்பி மண்டலம், இனப்பெருக்க மண்டலம்