Contents show
வங்கப் பிரிவினை
- 1899 ஜனவரி 6 இல் புதிய தலைமை ஆளுநராகவும் இந்தியாவின் அரசப் பிரதிநிதியாகவும் கர்சன் பிரபு பணி நியமனம் செய்யப்பட்டார்.
- கற்றறிந்த தேசியவாத அறிஞர்களோடு ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு மாறாக அவர் வரிசையாகப் பல அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
- கல்கத்தா மாநகராட்சிக் குழுவில் அங்கம் வசித்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தார் (1899).
- 1904 இல் இயற்றப்பட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டது.
- இந்தியச் செய்திப் பத்திரிக்கைகளின் தேசியவாதத் தன்மையைக் குறைப்பதற்காக அலுவலக ரகசியச் சட்டத்தில் (1904) திருத்தம் கொண்டுவரப்பட்டது.
- இறுதியாக வங்காளத்தைப் பிரிக்க 1905 (ஜூலை 19) இல் ஆணை பிறப்பித்தார்.
- இதனைத் தொடர்ந்து டிசம்பர் 1903 இல் தன்னுடைய இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான குறிப்புகளில் ஒரு திட்டத்தை கர்சன் தீட்டியிருந்தார்.
- அதுவே பின்னர் திருத்தம் செய்யப்பட்டு ரிஸ்லி அறிக்கை (Risely Papers) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
வங்காளம் இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டும்.
- புதிய கிழக்கு வங்காளமும் அசாமும் சிட்டகாங், டாக்கா, திப்பேராவிலுள்ள ராஜஷாகி மலையின் சில பகுதிகள், அசாம் மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாய் இருக்கும்.
- மேற்கு வாங்கமானது ஒடிசா மற்றும் பீகார் பகுதிகள் இணைந்தது
- ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வங்காளத்தில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளை அடக்கி இந்து – முஸ்லீம் மக்களிடையே பிரிவினையை உருவாக்குவது என்பதே கர்சனுடைய நோக்கமாகும்.
- கிழக்கு வங்காளத்தில் முஸ்லீம்கள் அதிகம் இருந்தனர். மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தனர்.
- மத்திய வங்கத்தில் இரு சமூகத்தினரும் சமஅளவில் வாழ்ந்து வந்தனர்.
- 1905 அக்டோபர் 16 இல் வங்காளம் அதிகாரபூர்வமாகப் பிரிவினையானபோது அந்தநாள் துக்கநாளாக அறிவிக்கப்பட்டது.
- ஆயிரக்கணக்கானவர்கள் கங்கை நதியில் புனித நீராடியதோடு வந்தே மாதரம்’ பாடலை பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்ததுச் சென்றார்கள்.
- இப்பிரிவினை இந்தியா முழுவதும் பரவலான எதிர்ப்புக்கு இட்டுச் சென்று இந்திய தேசிய இயக்கத்தில் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கி வைத்தது.
சுதேசி இயக்கம்
வங்காளத்தில் சுதேசி இயக்கம் (1905–1911)
- வங்கப் பிரிவினையைத் தடுப்பதில் ஏற்பட்ட தோல்வி, பிபின் சந்திர பால், அஸ்வினி குமார் தத்தா, அரவிந்தகோஷ் போன்ற தலைவர்கள் கொடுத்த அழுத்தம் ஆகியவற்றால் மிதவாத தேசியவாதிகள் புதிய எதிர்ப்பு முறைகளைக் கண்டறிய வற்புறுத்தப்பட்டனர்.
- முதன்முறையாக மிதவாத தேசியவாதிகள் தங்களின் மரபு சார்ந்த அரசியல் முறைகளை மீறினர்.
- ஆங்கிலப்பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க சுரேந்திரநாத் பானர்ஜி அறைகூவல் விடுத்தார்.
- 1905 ஆகஸ்டில் வெளிநாட்டு பொருட்களை விலக்குவதற்கு மக்கள் சபதமெடுத்துக் கொண்டனர். கல்கத்தா டவுன்ஹாலில் நடந்த கூட்டத்தில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
- 1905 அக்டோபர் 16 ல் வங்க பிரிவினைக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டது. அந்நாள் துக்க நாளாக அனுஷ்டிக்கப்பட்டது.
- அந்நாளில் தங்களுடைய ஒற்றுமையை வெளிப்படுத்த ஒருவருக்கொருவர் ராக்கியை கட்டி விட்டனர்.
- அந்நாளில் மாலையில் S.N.பானர்ஜியும். A.M.போசும் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
- பின்னர் இவ்வியக்கம்
- பம்பாயில் திலகர் தலைமையிலும்,
- பஞ்சாபில் லஜபதிராய் தலைமையிலும்,
- டெல்லியில் ஹைதர் ராசா தலைமையிலும்.
- சென்னையில் வ.உ.சிதம்பரம் பிள்ளை தலைமையிலும் பரவியது.
- வங்கபிரிவினைக்கு எதிராகத் தன்னெழுச்சியான எதிர்ப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
- தேசிய கல்வி நிறுவனங்களை, பள்ளிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
- மத விழாக்களான துர்காபூஜை போன்றவ புறக்கணிப்புப் பற்றிய வேண்டுகோள் விடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
சுதேசி சிந்தனையின் பரிமாண வளர்ச்சி
- ”சுதேசி’ என்பதன் பொருள் ‘ஒருவரது சொந்தநாடு’ என்பதாகும்.
- இத்தத்துவத்தின் தோற்றமானது 1872 இல் பூனாவில் மகாதேவ் கோவிந்த் ரானடே தனது தொடர் சொற்பொழிவுகளின் மூலம் இச்சிந்தனையைப் பிரபலப்படுத்தியதிலிருந்துத் தொடங்குகிறது.
சுதேசியின் வகைகள்
- ஆக்கபூர்வமான சுதேசி
- மறைமுக எதிர்ப்பு
- சமிதிகள்
ஆக்கபூர்வமான சுதேசி
- ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்து முழுவதுமாக விடுதலைபெற்ற, சுயாட்சிக்கான மாற்று நிறுவனங்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தியது.
- ரவீந்திரநாத் தாகூர் தனது எழுத்துகள் மூலம் இக்கருத்துகளைப் பிரபலமடையச் செய்தார்.
- சுயஉதவி (அ) ஆத்ம சக்தி எனும் ஆக்கத் திட்டத்தினை அவர் கோடிட்டுக் காட்டினார்.
- சுயஉதவி ஆத்ம சக்தி எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு மேளாக்கள் எனும் திருவிழாக்களைப் பயன்படுத்த அவர் அழைப்பு விடுத்தார்.
- இதுவே ஒட்டு மொத்த வங்காளத்தின் தாரக மந்திரமாகி அதன் விளைவாக அனைத்து இடங்களிலும் ஜவுளி, கைத்தறித் துணிகள், சோப்புகள், மட்பாண்டங்கள், தீப்பெட்டி, தோல் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சுதேசி விற்பனை நிலையங்கள் பெருகின.
- வட்டார மொழியில் கல்வி எனும் கருத்து சுதேசி இயக்கத்திற்கு வெகு முன்னரே 1902 இல் சதீஷ் சந்திராவால் விடிவெள்ளிக் கழகம் (Dawn Society) நிறுவப்பட்ட போதே உருவாகிவிட்டது.
- 1905 நவம்பர் 5 இல் விடிவெள்ளிக் கழகத்தின் முன்னெடுப்பில் கல்விக்கான தேசிய கழகம் உருவாக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 1906இல் வங்காள தேசியக் கல்லூரியும் பள்ளியும் நிறுவப்பட்டன.
- அடிமை நிறுவனங்களிலிருந்து வெளியே வரும்படி சதிஷ் சந்திரா மாணவர்கட்கு ஒரு உணர்ச்சிகரமான வேண்டுகோள் விடுத்தார்.
- இருந்தபோதிலும் இவ்வாறான முயற்சிகள் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் எதுவும் இல்லாததால் தோல்வியடைந்தன.
மறைமுக எதிர்ப்பு
- வங்கப் பிரிவினையைத் திரும்பப் பெறுவது அதற்குமேலும் கருப்பொருளாக இல்லாத காரணத்தால் 1906 இல் சுதேசி இயக்கம் மாற்றுப்பாதையில் செல்லத் துவங்கியது.
- இந்த புதிய திசையில் சுதேசி இயக்கம் நான்கு அம்சங்களைக் கொண்டிருந்தது.
- அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது;
- அரசுப்பள்ளிகள் கல்லூரிகளைப் புறக்கணிப்பது, நீதிமன்றங்கள், பட்டங்கள் மற்றும் அரசு சேவைகளை புறக்கணிப்பது;
- சுதேசி தொழிற்சாலைகளை மேம்படுத்துவது;
- பொறுத்துக்கொள்ளும் அளவைத் தாண்டி ஆங்கிலேயர்களின் அடக்குமுறை இருக்குமானால் ஆயுதமேந்திய போராட்டத்துக்கு ஆயத்தமானது என நான்கு அம்சங்கள் பின்பற்றப்பட்டன.
சமிதிகள்
- பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றொரு வெற்றிகரமான முறை சமிதிகள் (தொண்டர் படைகள்) எனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டமையாகும்.
- உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சி அளித்தல், அறநெறிகளைக் கற்றுக் கொடுத்தல், பஞ்சங்களின்போதும் நோய்களின் தாக்கத்தின்போதும் சேவையாற்றுதல், விழாக்காலங்களில் சுதேசி செய்தியைப் பரப்புரை செய்தல், உள்ளூரளவில் பள்ளிகளையும் நடுவர் நீதிமன்றங்களையும் உருவாக்குதல் போன்ற பல பணிகளில் இச்சமிதிகள் ஈடுபடுத்தப்பட்டன.
- தனது இயல்பான அமைதிவழிப் போராட்டத்தின் மூலம் ஆங்கில அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத் தராமல் இருப்பதே அதன் நோக்கம்.
- சமிதிகளின் தொண்டர்களில் பெரும்பாலோர் கற்றறிந்த மத்தியதர வர்க்கத்திலிருந்தும் இந்து உயர் வர்க்கத்திலிருந்தும் அணி திரட்டப்பட்டிருந்தனர்.
- சுதேசி இயக்கவாதிகள் பல சமயங்களில் சமூக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுக்கட்டாயமான முறைகளைக் கையாண்டனர்.
வங்கப்பிரிவினை விலக்கப்படுதல்
- 1911 ல் வங்கப்பிரிவினை திரும்பப் பெறப்பட்டது.
- டெல்லிக்கு இந்தியாவின் தலைநகர் மாற்றப்பட்டது.
- வங்காளத்திலிருந்து பீஹாரும், ஒரிசாவும் பிரிக்கப்பட்டது, அஸ்ஸாம் தனி மாநிலமாகியது.