Contents show
வளர்தமிழ்
- உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ்மொழியின் சிறப்புகள்
மொழி
- மனித இனப் பரிணாம வளர்ச்சியின் சிறப்புகளுள் ஒன்று மொழி.
- மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது மொழி
- உலகில் (ஆறாயிரத்திற்கும்) 6000 மேற்பட்ட மொழிகள் உள்ளன.
சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் மேற்கோள்
- தமிழ் – தொல்காப்பியம்
- தமிழன் – திருத்தாண்டகம். அப்பர் தேவாரம்
- தமிழ்நாடு – சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம்
- தமிழென் கிளவியும் அதனோரற்றே – தொல்காப்பியம்
- தமிழன் கண்டாய் – திருத்தாண்டகம், அப்பர் தேவாரம்
- இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் – சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம்
தமிழ் மொழி
- யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ்மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார் பல மொழிகள் கற்ற கவிஞர் பாரதியார்.
- மூத்தமொழி என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்! என்று பாரதத்தாயின் தொன்மையைப் பற்றிப் பாரதியார் கூறிய கருத்து தமிழ்த்தாய்க்கும் பொருந்துவதாக உள்ளது.
தமிழ் எழுத்துக்கள்
- தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
- எ.கா – வலஞ்சுழி எழுத்துகள் – அ. எ, ஔ, ண, ஞ
- இடஞ்சுழி எழுத்துகள் – ட.ய.ழ
தமிழ் இலக்கியங்கள்
- தமிழ் இலக்கியங்கள் சொல் இனிமை, பொருள் இனிமை, ஓசை இனிமை கொண்டவை.
- இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும்.
வளர் மொழி
- தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
- எண்ணத்தை வெளிப்படுத்துவது – இயல் தமிழ்
- உள்ளத்தை மகிழ்விப்பது – இசைத்தமிழ்
- உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டுவது – நாடகத்தமிழ்.
தமிழ்க் கவிதை வடிவங்கள்
- துளிப்பா
- செய்யுள்
- கவிதை
- புதுக்கவிதை
தமிழ் உரைநடை வடிவங்கள்
- கட்டுரை புதினம்
- சிறுகதை
கணினித்தமிழ்
- மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
- தொல்காப்பியம். நன்னூல் போன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்டவை. ஆயினும் அவை கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன.
தாவர இலைப் பெயர்கள்
- நெல், வரகு – தாள்
- சப்பாத்திக் கள்ளி, தாழை – மடல்
- கரும்பு, நாணல் – தோகை
- கமுகு (பாக்கு) – கூந்தல்
- ஆல், அரசு, மா, பலா, வாழை – இலை
- அகத்தி, பசலை, முருங்கை – கீரை
- அருகு, கோரை – புல்
- மல்லி – தழை
- பனை, தென்னை – ஓலை
தமிழ் எண்களை அறிவோம்
- 1 – க
- 2 – ௨
- 3 – ௩
- 4 – ச
- 5 – ரு
- 6 – ௬
- 7 – எ
- 8 – அ
- 9 – ௯
- 10 – ௰
இரண்டாயிரம் 2000 ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள்
சொல் – இடம்பெற்ற நூல்
- உழவர் – நற்றிணை
- அரசு – திருக்குறள்
- கோடை – அகநானூறு
- வெள்ளம் – பதிற்றுப்பத்து
- பார் – பெரும்பாணாற்றுப்படை
- உலகம் – தொல்காப்பியம்,கிளவியாக்கம், திருமுருகாற்றுப்படை
- மருந்து – அகநானூறு, திருக்குறள்
- வேளாண்மை – கலித்தொகை, திருக்குறள்
- பாம்பு – குறுந்தொகை
- முதலை – குறுந்தொகை
- செய் – குறுந்தொகை
- அன்பு – தொல்காப்பியம், களவியல், திருக்குறள்
- மகிழ்ச்சி – தொல்காப்பியம், கற்பியல், திருக்குறள்
- உயிர் – தொல்காப்பியம், கிளவியாக்கம், திருக்குறள்
- ஒழி – தொல்காப்பியம், கிளவியாக்கம்
- புகழ் – தொல்காப்பியம், வேற்றுமையியல்
- முடி – தொல்காப்பியம், வினையியல்
- ஊர் – தொல்காப்பியம், அகத்திணையியல்
- செல் – தொல்காப்பியம், புறத்திணையியல்
சீர்மை மொழி
- சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்.
- தமிழ் மொழியின் பலவகைச் சீர்மைகளுள் குறிப்பிடத்தக்கது அதன் சொற்சிறப்பு.
- உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும்.
- ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர்.
- பாகற்காய் கசப்புச்சுவை உடையது.
- அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல். இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினர்.