Contents show
வீரபாண்டிய கட்டபொம்மன் – பாஞ்சாலங்குறிச்சி
- பிறப்பு: 1760, தந்தை: ஜகவீரபாண்டியன்
- தாய்: ஆறுமுகத்தம்மாள் மனைவி : ஜக்கம்மாள்
- சகோதரர்கள்: செவத்தய்யா, ஊமத்துரை (இயற்பெயர்-குமாரசுவாமி)
- 1792ம் ஆண்டு கர்நாடக உடன்படிக்கை மூலம் பாஞ்சாலங்குறிச்சியில் வரி வசூலிக்கும் உரிமை பிரிட்டிசாரிடம் சென்றது.
- 1798ல் பஞ்சத்தின் காரணமாக கட்டபொம்மன் செலுத்த வேண்டிய வரி 3310 பகோடா நிலுவையாக மாறியது.
- திருநெல்வேலி ஆட்சியராக பதவியேற்ற காலின் ஜாக்சன் என்பவர் பாஞ்சாலங்குறிச்சிக்கு படையை அனுப்ப எண்ணினார். ஆனால் அம்முயற்சி சென்னை அரசால் தடுக்கப்பட்டது.
- செப்டம்பர் 18, 1798ல் கட்டபொம்மன், ஊமத்துரை மற்றும் அமைச்சர் சிவசுப்ரமணியம் ஆகியோர் ஜாக்சனை சந்தித்தனர்.
- 1080 பகோடா மட்டுமே திருப்பி செலுத்த வேண்டிய நிலையில் கட்டபொம்மனை அவமானப்படுத்தியதோடு கைது செய்யவும் ஜாக்சன் முயன்றார்.
- தப்பிக்கும் முயற்சியில் பிரிட்டிஷ் தளபதி கிளார்க் என்பவர் இறந்தார்.
- சிவசுப்ரமணியம் மட்டும் பிரிட்டிஷிடம் மாட்டிக்கொண்டார்.
- தப்பித்த கட்டபொம்மன் நடந்தவற்றை விளக்கி சென்னைக்கு ஒரு கடிதம் எழுதினார். இதற்காக ஆளுநர் எட்வார்டு கிளைவ் தலைமையில் நடைபெற்ற விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்தார்.
- இதன் விளைவாக காலின் ஜாக்சன் நீக்கப்பட்டு S.R.லூசிங்டன் என்பவர் புது ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
- மருது சகோதாரர்கள், விருப்பாச்சி கோபாலநாயக்கர் மற்றம் ஆனைமலையின் யதுல் நாயக்கரின் கூட்டமைப்பில் கட்டபொம்மன் இணைந்தார்.
- சிவகிரி பாளையத்தை கட்டபொம்மன் கூட்டமைப்பில் சேர அழைத்தார்.
- ஆனால் அவர் மறுக்கவே சிவகிரியைக் கைப்பற்ற கட்டபொம்மன் முயன்றார்.
- இதன் விளைவாக கூட்டமைப்புக்கு எதிராக மேஜர் பானர்மன் தலைமையில் ஒரு படையை வெல்லஸ்லி பிரபு அனுப்பினார்.
- மருது சகோதரர்களை சந்தித்து 1000 படை வீரருடன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு கட்டபொம்மன் சென்றார்.
- திருவிதாங்கூர் ராஜாவின் படையோடு பிரிட்டிஷ் படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை செப்டம்பர் 5, 1799ல் முற்றுகையிட்டனர்.
- பல நாட்கள் கடந்து கோட்டை தகர்க்கப்பட்டது. கட்டபொம்மன் படையோடு “காடல்குடி” எனும் இடத்திற்கு தப்பி சென்றார்.
கொல்லார்பட்டி போர் (1799)
- இப்போரில் கட்டபொம்மன் பிரிட்டிஷாரிடம் தோல்வியுற்றார்.
- அமைச்சர் சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டார்.
- களப்பூர் காட்டில் இருந்த கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டு பிரிட்டிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
- செப்டம்பர் 13, 1799 ல் சிவசுப்ரமணியம் நாகலாபுரத்திலும் அக்டோபர் 16, 1799ல் கட்டபொம்மன் கயத்தாறு எனுமிடத்திலும் தூக்கிலிடப்பட்டனர்.
தென்னிந்திய புரட்சி (1800 – 1801)
- கட்டபொம்மன் இறப்பிற்கு பின் அவரின் சகோதரர்கள் ஊமத்துரை, மருது சகோதரர்களுடன் இணைந்து போரிட்டனர்.
- இக்கூட்டமைப்பில் மருது சகோதரர்களின் தலைமையில் கோபாலநாயக்கர், மலபாரின்
- கேரளவர்மா, திண்டுக்கல்லின் கிருஷ்ணப்ப நாயக்கர் மற்றும் தூண்தாஜி ஆகியோர்
- புரட்சியில் பங்கு கொண்டனர்
- ஏப்ரல் 1800ல் இவர்கள் திருப்பாச்சியில் சந்தித்து போரிட முடிவு செய்தனர்.
- பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டிய நிலையில் ஊமத்துரையிடமிருந்து மீண்டும் கோட்டை காலின் மெக்காலே என்பவரால் கைப்பற்றப்பட்டது.
- கட்டபொம்மன் சகோதரர்களை பிரிட்டிஷிடம் ஒப்படைக்க மறுத்ததால் மருது சகோதரர்களுக்கு எதிராக கர்னல் அக்னியு மற்றும் கர்னல் இன்னஸ் என்பவர்களின் கீழ்படையை அனுப்பினர்.
- ஜீன் 1801ல் “திருச்சிராப்பள்ளி பேரறிக்கை” கூட்டமைப்பால் வெளியிடப்பட்டு அதன் நகல் நவாபின் திருச்சி கோட்டையிலும் ஸ்ரீரங்கம் கோயில் சுவரிலும் ஒட்டப்பட்டது.
- மருது சகோதரர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக 20,000 பேர் அடங்கிய படையை திரட்டினர்.
- ஜூலை 1801ல் பழையநாடுவை ஊமத்துரை கைப்பற்றினார்.
- சின்னமருதுவின் மகன் செவத்ததம்பி தஞ்சாவூரை கைப்பற்ற முயன்றபோது இரண்டாம் சரபோஜி மற்றும் கம்பெனி படையினரால் தோற்கடிக்கப்பட்டார்.
- திப்பு சுல்தானை தோற்கடித்த பின் கம்பெனியின் படைகள் சிவகங்கை மற்றும்
- இராமநாதபுரத்தை நோக்கி அனுப்பப்பட்டது.
- புதுக்கோட்டை தொண்டைமான், எட்டயபுரம் ராஜா மற்றம் சரபோஜி ஆகியோர்
- கம்பெனிக்கு உதவி செய்தனர்.
- கம்பெனியின் படை மானாமதுரை, பார்த்திபனூர் மற்றும் பரமக்குடியை கைப்பற்றியது.
- சிவகங்கை கைப்பற்றப்பட்டு 24 அக்டோபர் 1801ல் மருது சகோதரர்கள் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.
- 16 நவம்பர் – 1801ல் ஊமத்துரை மற்றும் செவத்தையா ஆகியோர் பாஞ்சாலங்குறிச்சியில் தலைவெட்டி கொல்லப்பட்டனர்.
- நவாப்பிற்கும் கம்பெனிக்கும் இடையே ஜூலை 1801ல் புதிய கர்நாடக உடன்படிக்கை செய்யப்பட்டது. இதன்படி பாளையக்காரர்முறை ஒழிக்கப்பட்டு தமிழ்நாட்டின் நிர்வாகம் கம்பெனியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
தீரன் சின்னமலை
- பிறப்பு : 1756
- பிறப்பிடம்: சென்னிமலை, ஈரோடு
- இயற்பெயர்: தீர்த்தகிரி
- மைசூரின் கீழ் இருந்த கொங்கு பகுதியின் பாளையக்காரர் தீரன் சின்னமலை ஆவார்.
- பிரஞ்சு போர்முறையை கற்று திப்பு சுல்தான் படையுடன் இணைந்து செயல்பட்டார்.
- கம்பெனிக்கு எதிராக போராட “ஓடா நிலை” எனுமிடத்தில் கோட்டை அமைத்தார்.
- சுல்தான் திவான் அலியின் வரிகளை கைப்பற்றியதால் ஏற்பட்ட நொய்யல் போரில் வெற்றி பெற்றார்.
- கொரில்லா போர்முறையை பின்பற்றி போரிட்டார்.
- கோயமுத்தூர் போரில் கம்பெனியிடம் தோல்வியடைந்தார்.
- 1801ல் நடைபெற்ற காவேரிப் போர், 1802ல் நடைபெற்ற “ஓடா நிலைப் போர்” 1804ல் நடைபெற்ற “அரச்சநல்லுார் போர்” ஆகிய போர்களில் கம்பெனி படையை தோற்கடித்தார்.
- சமையல்காரனின் உதவியால் கம்பெனியின் படை தீரன் சின்னமலையையும் அவர் சகோதரனையும் கைது செய்து 31 ஜூலை 1805ல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.