வேலையின்மை
- வேலையின்மை என்பது ஒரு நபர் வேலை செய்யத் தயாராகவும் விருப்பத்துடனும் இருந்து ஆனால் அவர் தற்போது வேலையின்றி இருக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதாகும்
வேலையின்மையின் வகைகள்
- வேலைவாய்ப்பைத் தீவிரமாகத் தேடும் ஒரு நபருக்கு வேலை கிடைக்காத போது வேலையின்மை ஏற்படுகிறது.
- வேலையின்மை பெரும்பாலும் பொருளாதார ஆரோக்கியத்தின் ஒரு அளவீடாக பயன்படுத்தப்படுகிறது.
- மறைமுக வேலையின்மை
- பருவகால வேலையின்மை
- அமைப்பு சார் வேலையின்மை
- சுழல் வேலையின்மை (அ) வாணிபச் சூழல் வேலையின்மை
- தொழில்நுட்ப வேலையின்மை
- பிறழ்ச்சி வேலையின்மை / தற்காலிக வேலையின்மை
- பாதிக்கப்படக்கூடிய வேலைவாய்ப்பு
மறைமுக வேலையின்மை:
- தேவைக்கு அதிகமானவர்கள் ஒரு வேலையில் இருந்தால் அது மறைமுக வேலையின்மை ஆகும்.
- இந்தியாவில் விவசாயம் மற்றும் அமைப்புசாரா துறைகளில் இவ்வேலை வாய்ப்பின்மை காணப்படுகிறது.
பருவகால வேலையின்மை:
- ஆண்டின் சில பருவங்களில் மட்டும் நிகழ்கிறது.
- (உ.தா) இந்தியாவில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைப்பது அரிதாகும்.
அமைப்பு சார் வேலையின்மை:
- சமூக அமைப்பில் ஏற்படும் பெரிய மாற்றங்களால் அமைப்பு சார் வேலையின்மை உருவாகிறது.
- ஒரு பொருளுக்கான தேவைக் குறைதல் அல்லது பிற பொருட்களின் தேவை அதிகரித்தல்,
- இடு பொருட்கள் இன்மை, முதலீடு பற்றாக்குறை ஆகியவையும் இதற்கு காரணமாகிறது.
சுழல் வேலையின்மை (அ) வாணிபச் சூழல் வேலையின்மை:
- கீழ்நோக்கியப் பகுதியில் ஒரு பொருளாதாரம் இருக்கும் போது நிகழ்கின்ற வேலையின்மை.
- பொருளாதார மந்தநிலையின் போது வேலையின்மை உயர்கிறது, மேலும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் இது குறைகிறது.
தொழில்நுட்ப வேலையின்மை:
- தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் வேலை இழப்பு.
- 2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் இயந்திரமயமாதலால் அச்சுறுத்தப்படும் வேலைகளின் விகிதம் ஆண்டுக்கு 69% என்று உலக வங்கி கணித்துள்ளது.
பிறழ்ச்சி வேலையின்மை / தற்காலிக வேலையின்மை:
- ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறும்போது அந்த இடைவெளியில் வேலையின்மை ஏற்படுகிறது.
பாதிக்கப்படக்கூடிய வேலைவாய்ப்பு
- முறையான வேலை ஒப்பந்தங்கள் இல்லாமல் முறைசாரா தொழிலில் ஈடுபடும் மக்களை இது குறிப்பிடுகிறது.