வையாபுரிப்பிள்ளை & ந.மு.வேங்கடசாமி நாட்டார்

வையாபுரிப்பிள்ளை

  • வையாபுரிப்பிள்ளை, நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் பிறந்தார்.
  • உ.வே.சாமிநாதருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து. ஆய்வு செய்து வெளியிட்டவர் வையாபுரிப் பிள்ளை.
  • இலக்கியங்களை ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்து அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்தவர் வையாபுரிப் பிள்ளை.
  • கால மொழி ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படுபவர் வையாபுரிப்பிள்ளை.
  • சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகவும் பதிப்பாசிரியராகவும் செயற்பட்டவர் வையாபுரிப்பிள்ளை.
  • கம்பனின் கவிநயத்தில் தன்னைப் பறிகொடுத்த வையாபுரிப் பிள்ளை, இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தார்.
  • மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும், வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள்ளைக்கு நெருங்கிய நட்பு இருந்தது.
  • வ.உ.சி., தனது சிறைவாசத்துக்குப் பிறகு, ஏட்டிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்து, அதனை வையாபுரிப் பிள்ளையிடம் காட்டி திருத்தம் செய்தார்.
  • தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர் வையாபுரிப்பிள்ளை.
  • வையாபுரிப் பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் படித்து திருநெல்வேலியில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
  • வையாபுரிப் பிள்ளையின் திருநெல்வேலி நண்பர்களாக இருந்தவர்கள் இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார் போன்றோர் இருந்தனர்.
  • வையாபுரிப்பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார்.
  • வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்று கூறுவார்கள்.
  • வையாபுரிப் பிள்ளை மலையாள மொழி சொற்களஞ்சியம் (லெக்சிகன்) பதிப்பிக்கப்பட்ட போது. அதன் உறுப்பினாரகவும் பணினார்.
  • வையாபுரிப்பிள்ளை கால மொழி ஆராய்ச்சியாளர், திறனாய்வாளர், ஆய்வுக கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை, கவிதைகள் புனையும் திறனாளர் எனப் பன்முகப் ஆற்றல்கள் கொண்டவர்.

ந.மு.வேங்கடசாமி நாட்டார்

  • ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் இயற்பெயர் சிவப்பிரகாசம்,
  • ந. மு. வேங்கடசாமி நாட்டார். தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் பிறந்தார்.
  • (எண்பது) 80 ஆண்டுக்கு முன்னரே தமிழுக்கெனத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டுமென்பதை உணர்ந்து வலியுறுத்தியவர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்.
  • ந. மு. வேங்கடசாமி நாட்டாரிடம் 1912ல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சிலப்பதிகாரம் மற்றும் தொல்காப்பியம் பொருள் விளங்கங்களை கேட்டு, ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார்.

ந. மு. வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள நூல்கள்

  • கள்ளர் சரித்திரம்
  • உலக நீதி
  • காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது
  • கண்ணகி வரலாறும் – கற்பும் மாண்பும்
  • ஐ. சாமிநாத முதலியாரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார்.
  • ந. மு. வேங்கடசாமி நாட்டார் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம், பால
  • பண்டிதம், பண்டிதம் ஆகிய தேர்வுகளை எழுதி, முதல் மாணவனாகத் தேர்ச்சியுற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத் தோடாப் பெற்றார்.
  • மு.இராகவய்யங்கார் எழுதிய வேளிர் வரலாறு என்ற நூலிலுள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டி தமிழறிஞர்களை ஏற்கச் செய்தார் ந. மு. வேங்கடசாமி நாட்டார்.

ந. மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரம்

  • ந. மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரம் நூலை “கள்ளர்களைப் பற்றி மட்டுமல்லாது தமிழக மக்களைப் பற்றிய வரலாற்று நூலாகும். கலாசாலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கத் தகுதி பெற்றது” என்று தமிழ்த்தாத்தா உ.வே.சா. பாராட்டினார்.
  • ‘தமிழ் கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு.
  • ந.மு.வே. நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை
  • எழுதத் தொடங்குகிறேன்’ என்று கலைஞர் மு. கருணாநிதி, தனது தென்பாண்டிச் சிங்கம் நூலின் முன்னுரையில் எழுதியுள்ளார்.

பிற மொழி சொற்கள் ந. மு. வேங்கடசாமி நாட்டாரின் பார்வை

  • அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது அந்நூல்களில் காணப்படும் கலைச் சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
  • அறிவியல் சொற்களுக்கு தமிழில் உள்ள வேர்ச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக்கொள்ள வேண்டும்.
  • புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகும் போது வேற்றுமொழிச் சொற்களையும் தமிழின் ஒலியியல் இயல்புக்கு ஏற்ப திரித்தே வழங்குதல் வேண்டும்.
  • சான்றோன் ஒருவன் கடன் வாங்கத் தேவையில்லாதபடி பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக்கொள்வான் அவண் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையையே மொழி வளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!