Contents showமக்கள் தொகை கணக்கெடுப்பு 2011
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக பண்புகளுடன் ஒவ்வொரு பத்து ஆண்டிலும் நடைபெறும் அதிகாரப்பூர்வ கணக்கீடு ஆகும்.
1872 ம் ஆண்டு இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1881 ம் ஆண்டு முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவின் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
மக்கள் தொகை அளவு மற்றும் பரவல்:
இந்தியாவின் மக்கள்தொகை – 1.21 பில்லியன் (1,210,193,422)
இது ஒட்டு மொத்த உலக மக்கள் தொகையில் 5 % ஆகும்.
மக்கள் தொகை:
வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கை.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உத்தரபிரதேச மாநிலம் 199 மில்லியன் மக்கள் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது.
நாட்டின் மக்கள்தொகையில் 16 சதவீதத்தை உத்தரபிரதேசம் கொண்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 50 சதவீத மக்கள் பின்வரும் ஐந்து மாநிலங்களில் உள்ளனர்.
மகாராஷ்டிரா பீகார் உத்தரபிரதேசம் மேற்கு வங்காளம் மத்திய பிரதேசம்.
மக்கள் தொகையின் அடிப்படையில் முதல் ஐந்து மாநிலங்கள்
உத்தர பிரதேசம்
மகாராஷ்டிரா
பீகார்
மேற்கு வங்கம்
மத்திய பிரதேசம்
கடைசி ஐந்து மாநிலங்கள்
சிக்கிம்
மிசோரம்
அருணாச்சலப் பிரதேசம்
கோவா
நாகாலாந்து
தமிழ்நாட்டின் மக்கள் தொகை
7.2 கோடி மக்கள் தொகை
இந்திய அளவில் ஏழாவது இடத்தில் உள்ளது.
முதல் ஐந்து மாவட்டங்கள் (மக்கள் தொகை)
சென்னை
காஞ்சிபுரம்
வேலூர்
திருவள்ளூர்
சேலம்
கடைசி ஐந்து மாவட்டங்கள் (மக்கள் தொகை)
பெரம்பலூர்
நீலகிரி
அரியலூர்
கரூர்
தேனி
மக்கள் தொகை அடர்த்தி:
ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் வசிக்கும் மொத்த மக்களின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடர்த்தி எனப்படும்.
இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தி – 382 / சதுர கிலோமீட்டர்.
முதல் ஐந்து மாநிலங்கள் (மக்கள்தொகை அடர்த்தி)
பீகார் – 1106
மேற்கு வங்காளம் -1028
கேரளா – 860
உத்திரபிரதேசம் – 829
ஹரியானா – 573
கடைசி ஐந்து மாநிலங்கள்(மக்கள்தொகை அடர்த்தி)
அருணாச்சலப் பிரதேசம் – 17
மிசோரம் – 52
சிக்கிம் – 86
மணிப்பூர் – 115
நாகாலாந்து – 119
தமிழ்நாடு மக்கள் தொகை அடர்த்தி
555 / சதுர கிலோமீட்டர்
மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் தமிழ்நாடு 12வது இடத்தில் உள்ளது.
முதல் ஐந்து மாவட்டங்கள் (மக்கள் தொகை அடர்த்தி)
சென்னை
கன்னியாகுமரி
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
மதுரை
கடைசி ஐந்து மாவட்டங்கள் (மக்கள் தொகை அடர்த்தி)
நீலகிரி
ராமநாதபுரம்
பெரம்பலூர்
சிவகங்கை
தர்மபுரி
10 ஆண்டு கால மக்கள் தொகைவளர்ச்சி வீதம்
இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் – 64%
தமிழ்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் – 60%
பிறப்பின்போது எதிர்பார்க்கப்பட்ட சராசரி வயது
இந்தியா – 9 வருடம்
தமிழ்நாடு – 6 வருடம்
பாலின விகிதம்
மக்கள் தொகையில் 1,000 ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கையை குறிக்கும்.
இந்தியாவின் பாலின விகிதம் – 940/1000
அதிக பாலின விகிதம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள்
கேரளா – 1084
புதுச்சேரி – 1038
தமிழ்நாடு – 995
ஆந்திரப் பிரதேசம் – 992
சட்டிஸ்கர் – 991
மணிப்பூர் – 987
குறைந்த பாலின விகிதம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள்
டாமன் டையூ – 618
தாத்ரா நாகர் ஹவேலி – 775
சண்டிகர் – 818
டெல்லி – 866
ஹரியானா – 877
அந்தமான் நிக்கோபார் – 878
தமிழ்நாட்டில் பாலின விகிதம்
995
இந்திய அளவில் பாலின விகிதத்தில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள்
நீலகிரி – 1041
தஞ்சாவூர் – 1031
நாகப்பட்டினம் – 1025
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி – 1024
திருவாரூர் – 1020
குறைந்த பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள்
தர்மபுரி – 946
சேலம் – 954
கிருஷ்ணகிரி – 956
ராமநாதபுரம் – 977
திருவள்ளூர் – 983
குழந்தை பாலின வீதம் (0 முதல் 6 வயது வரை)
மக்கள் தொகையில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
இந்தியா – 919 / 1000
அதிக குழந்தை பாலின விகிதம் உள்ள மாநிலங்கள்
அருணாச்சல பிரதேசம் – 972
மிசோரம் மற்றும் மேகாலயா – 970
சட்டிஸ்கர் – 969
புதுச்சேரி – 967
கேரளா – 964
[the_ad id=”6551″]
குறைந்த பாலின விகிதம் உள்ள மாநிலங்கள்
ஹரியானா – 834
பஞ்சாப் – 846
ஜம்மு மற்றும் காஷ்மீர் – 862
டெல்லி – 871
சண்டிகர் – 880
தமிழ்நாட்டின் குழந்தை பாலின விகிதம்
946 / 1000
அதிக குழந்தை பாலின விகிதம் உள்ள மாவட்டங்கள்
நீலகிரி – 985
கன்னியாகுமரி – 964
குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டங்கள்
கடலூர் – 896
அரியலூர் – 897
எழுத்தறிவு விகிதம்
இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் – 74%
அதிக எழுத்தறிவு வீதம் கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
கேரளா – 94.0 %
லட்சத்தீவு – 91.8 %
மிசோரம் – 91.3 %
கோவா – 88.7 %
திரிபுரா – 87.2 %
பெண்கள் எழுத்தறிவு அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
கேரளா – 92.1 %
மிசோரம் – 89.3 %
லட்சத்தீவுகள் – 87.9 %
கோவா – 87.4 %
திரிபுரா – 82.7 %
குறைந்த எழுத்தறிவு கொண்ட மாநிலங்கள்
பீகார்
அருணாச்சல பிரதேசம்
ராஜஸ்தான்
ஜார்க்கண்ட்
ஆந்திர பிரதேசம்
தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் – 80.33%
தமிழ்நாடு எழுத்தறிவு வீதத்தில் 14வது இடத்தில் உள்ளது.
அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டங்கள்
கன்னியாகுமரி – 91.75 %
சென்னை – 90.18 %
தூத்துக்குடி – 86.18 %
நீலகிரி – 85.20 %
இறப்பு வீதம்
பேறு காலத்திற்கு பின் குழந்தைகளின் இறப்பு வீதம் (NNM):
பிறந்த குழந்தைகள் பிரசவத்திற்கு பிறகு இறப்பது. (1000 பிறப்புகளுக்கு)
இந்தியா – 24
தமிழ்நாடு – 11
குழந்தை இறப்பு வீதம் (CMR)
0 முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகள் இறப்பது (1000 குழந்தைகளுக்கு)
இந்தியா – 55
தமிழ்நாடு – 25
பச்சிளம் குழந்தைகள் இறப்பு வீதம் (IMR)
ஒரு வயது பூர்த்தி அடைந்தவர்கள் இறக்கும் குழந்தைகளின் வீதமாக குழந்தை இறப்பு வீதம் எனப்படும்.
இது ஆயிரம் பிறப்புகளுக்கு எத்தனை இறப்பு என்பதாகும்.
இந்தியா – 44
தமிழ்நாடு – 22
மகப்பேறு இறப்பு வீதம் (MMR)
ஒரு லட்சம் பிரசவத்தில் எத்தனை தாய்மார்கள் இறக்கின்றனர் என்பதை மகப்பேறு இறப்பு வீதம் என்கிறோம்.
பேறு காலம் அல்லது குழந்தை பிறப்பின்போது உண்டாகும் சிக்கல்கள் ஏற்படும் இறப்பானது தாய்மை இறப்பு வீதத்தை குறிக்கிறது.
இந்தியா – 178
தமிழ்நாடு – 90