தேவாரம்

  • திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
  • தேவாரத்தை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
  • தே + ஆரம் – இறைனுக்குச் சூட்டப்படும் மாலை. தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள்.
  • முதல் (ஏழு) 7 திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது.
  • முதல் (ஏழு) 7 திருமுறைகளுக்கு “மூவர் தமிழ்” என்ற பெயரும் உண்டு.
  • பழம் மரபிசைக் களஞ்சியம் என்று தேவாரப் பாக்கள் அழைக்கப்படுகிறது.

பதிகம்

  • பதிகம் என்பது (பத்து) 10 பாடல்களைக் கொண்டது.

திருஞானசம்பந்தர்

  • பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று (1-3) திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்புகள்.
  • முதல் மூன்று (1-3) திருமுறையில் (இரண்டாவது) 2வது திருமுறை திருஞானசம்பந்தர் பாடிய திருமயிலாப்பூர் பதிகம்
  • இசைப் பாடல்களாக திருஞானசம்பந்தர் பாடல்கள் திகழ்கின்றன.

சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடப்பது

  • சமுதாயத்தின் பொருளாதாரம்
  • தமிழுக்கு இருந்த உயர்நிலை
  • இசை
  • கலை பண்பாட்டு நிலைகள்,
  • தத்துவம் கோட்பாடுகள்
  • சமயக் கோட்பாடுகள்

17ஆம் நூற்றாண்டு முத்துப் பல்லக்கில் திருஞானசம்மந்தர் சுவரோவியம் கானப்படும் இடம் திருநெல்வேலி.

சுந்தரர்

  • தேவாரம் பாடிய மூவருள் ஒருவர் சுந்தரர்.
  • நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் சுந்தரர் அழைக்கப்படுகிறார்.
  • சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் (ஏழாம்) 7ம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளன.
  • சுந்தரர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாக கொண்டே சேக்கிழார் பெரிய புராணத்தைப் படைத்தளித்தார்.
  • தேவாரத்தில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப் பதிகப் பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

 மாணிக்கவாசகர்

  • மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவர்.
  • மாணிக்கவாசகர் திருவாதவூரைச் சேர்ந்தவர்.
  • அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் மாணிக்கவாசகர் பணியாற்றினார்.
  • மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் திருவாசகம், திருக்கோவையார்

மாணிக்கவாசகரின் திருவாசகம்

  • திருவாசகம் என்பது சிவபபருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
  • திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
  • பன்னிரு திருமுறைகளில் (எட்டாம்) 8ம் திருமுறையாக மாணிக்கவாசகரின் திருவாசகம் உள்ளது.
  • திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன.
  • பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை திருவாசகப் பாடல்கள்.
  • ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது முதுமொழி.
  • திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் ஜி.யு.போப் மொழிப்பெயர்த்துள்ளார்.
  • திருவாசகத்தில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.

சாழல்

  • சாழல் என்பது பெண்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு
  • ஒருத்தி வினா கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருப்பது சாழல்.

திருச்சாழல்

  • திருச்சாழல் தில்லைக் கோவிலில் பாடப்பெற்றது.
  • மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் செயல்களையும் பெருமையையும் பேசும் செய்யுள் வகை திருச்சாழல் ஆகும்
  • ஒரு பெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்படுத்துவது போலவும் பாடப்படுவது திருச்சாழல்.
  • இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் திருச்சாழல் வகையில் மாணிக்கவாசகர் (இருபது) 20 பாடல்களைப் பாடியுள்ளார்
  • திருச்சாழல் வடிவத்தை திருமங்கை ஆழவாரும் தமது பெரிய திருமொழியில் பயன்படுத்தியுள்ளார்.

திருமூலர்

  • (அறுபத்து மூன்று) 63 நாயன்மார்களுள் ஒருவராகவும் (பதினெண்) 18 சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் திருமூலர்.
  • திருமந்திரம் நூலை திருமூலர் இயற்றினார்.

திருமந்திரம்

  • திருமூலர் இயற்றிய திருமந்திரம் (மூவாயிரம்) 3000 பாடல்களைக் கொண்டது.
  • தமிழ் மூவாயிரம் என்று திருமந்திரம் நூலைத் அழைப்பர்.
  • பன்னிரு திருமுறைகளுள் (பத்தாம்) 10ம் திருமுறையாக திருமந்திரம் சேர்க்கப்பட்டுள்ளது.
  • திருமந்திரம் என்னும் நூலிலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

முந்தைய ஆண்டு வினாக்கள்

பட்டியல் I ஐ பட்டியல் II டன் பொருத்தி விடை எழுது.
பட்டியல் I பட்டியல் II
(a) திருஞானசம்பந்தர் 1. திருவாதவூர்
(b) திருநாவுக்கரசர் 2. திருவெண்ணெய் நல்லூர்
(c) சுந்தரர் 3. திருவாமூர்
(d) மாணிக்கவாசகர் 4. சீர்காழி
(A) 4 3 2 1
(B) 4 2 3 1
(C) 2 4 1 3
(D) 2 3 4 1

பொருத்துக.
சிறப்புத் தொடர் நூல்கள்
(a) தமிழ் வேலி – (1) தேவாரம்
(b) தமிழ்கெழுகூடல் – (2) திருவாசகம்
(c) கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழ் – (3) பரிபாடல்
(d) பண்ணொடு தமிழொப்பாய் – (4) புறநானூறு

A B C D
(A) 4 3 2 1
(B) 2 1 4 3
(C) 4 3 2 1
(D) 3 4 2 1

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்” இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.
(A) தேவாரம்
(B) திருவாசகம்
(C) ஏர் எழுபது
(D) திருக்கோவை

‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
(A) திருவாசகம்
(B) தேவாரம்
(C) திருக்குறள்
(D) பட்டினப்பாலை

“பண்ணொடு தமிழொப்பாய்” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
(A) திருவாசகம்
(B) திருக்குறள்
(C) தேவாரம்
(D) திருத்தொண்டர் புராணம்

‘தேவாரம்’ என்பது
(A) இக்காலத்து இசைத்தமிழ் நூல்
(B) இடைக்காலத்து இசைத்தமிழ் நூல்
(C) முற்காலத்து இசைத்தமிழ் நூல்
(D) சங்கக்காலத்து இசைத்தமிழ் நூல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!