சுந்தரர்

திருக்கேதாரம் – சுந்தரர்

தமிழ் இசை பாடப்படும் இனிய சூழலை விளக்கும் சுந்தரரின் தேவாரப்பாடல்

இசை

  • உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது இசை.
  • இசை மனிதர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் ஆற்றல் உடையது.
  • இசைக்கருவிகளின் ஓசையோடு பாடல் இணையும் போது அது செவிகளுக்கும் சிந்தைக்கும் விருந்தாகிறது.
  • தமிழ் இசை பாடப்படும் இனிய சூழலை விளக்கும் சுந்தரரின் தேவாரப்பாடல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பாடல்

பண்ணின் தமிழ் இசை பாடலின் பழவெய் முழவு அதிரக்

கண்ணின் ஒளி கனகச்சுனை வயிரம் அவை சொரிய

மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறியக் * * *

கிண் என்று இசை முரலும் திருக்கேதாரம் என்னீரே. *

சுந்தரர்

 பாடலின் பொருள்

  • பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
  • கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்.
  • நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மத யானைகள் மணிகளை வாரி வாரி வீசும்.
  • இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.

சொல்லும் பொருளும்

  • பண் – இசை
  • பழ வெய் – முதிர்ந்த மூங்கில்
  • கனகச்சுனை – பொன் வண்ண நீர் நிலை
  • மத வேழங்கள் – மத யானைகள்
  • முரலும் – முழங்கும்

முந்தைய ஆண்டு வினாக்கள்

சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
(A) திருச்செங்குன்றம்
(B) திருவெண்ணெய் நல்லூர்
(C) திருச்செந்தூர்
(D) திருவாரூர்

‘அற்பு தப்பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்’ -பாடியவர் யார்?
(A) அப்பர்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) திருமூலர்

சுந்தரர் எவ்வரசரால் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்?
(A) நரசிங்கமுனையரையர்
(B) நரசிம்மவர்மன்
(C) நந்திவர்மன்
(D) நரசிங்கநாதர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!