திருமூலர்

ஒன்றே குலம் – திருமூலர்

மக்கள் அனைவரையும் உடன்பிறந்தாராகக் கருதி அன்பு காட்ட வேண்டும்

அடியார்களுக்கு கொடுப்பது இறைவனுக்கும் சேரும்

மனிதர்களின் சிறந்த கடமை

  • மனிதர்களிடையே பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவது தவறானது உலக மக்கள் அனைவரையும் உடன் பிறந்தாராகக் கருதி அன்பு காட்ட வேண்டும்.
  • பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைத் தமக்கு ஏற்பட்டதாகக் கருதி அவற்றைப் போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும். அதுவே இறைத்தொண்டாகும் என்பதை உணர்த்தும் திருமூலரின் திருமந்திரம் பாடல்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

பாடல்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே * * *

சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்ம்மினே* *

திருமூலர்

பாடலின் பொருள்

  • மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே
  • இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை.
  • கூசாமல் செல்ல வேண்டிய நல்வழி இதை விட வேறு இல்லை
  • உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ வேண்டுமாயின் இவற்றை நினைத்து ஈடேறுங்கள்.

அடியார்களுக்கு கொடுப்பது இறைவனுக்கும் சேரும்

பாடல்

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே***

திருமூலர்

பாடலின் பொருள்

  • படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால்
  • அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது.
  • அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

சொல்லும் பொருளும்

  • நமன் – எமன்
  • நாணாமே – கூசாமல்
  • சித்தம் – உள்ளம்
  • உய்ம்மின்- ஈடேறுங்கள்
  • நம்பர் – அடியார்
  • ஈயில் – வழங்கினால்
  • படமாடக் கோயில் – படங்கள் அமைந்த மாடங்கள் உடைய கோயில்
  • நடமாடக் கோயில் – அடியார்களாகிய மக்கள்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – என்பது எந்நூலின் புகழ்மிக்கத்தொடர்
(A) தேவாரம்
(B) திருவாசகம்
(C) திருமந்திரம்
(D) நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்

தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?
(A) தேவாரம்
(B) திருவாசகம்
(C) திருமந்திரம்
(D) திருக்குறள்

“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே” இப்பாடல் வரி எந்நூலில் உள்ளது?
(A) தமிழ் மறை
(B) தமிழ் மூவாயிரம்
(C) தேவாரம்
(D) திருவாசகம்

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்?
(A) அப்பர்
(B) திருமூலர்
(C) சம்பந்தர்
(D) சுந்தரர்

தமிழில் காணும் முதல் சித்தர்
(A) திருமூலர்
(B) அருணகிரிநாதர்
(C) தாயுமானவர்
(D) வள்ளலார்
சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
(A) பாம்பாட்டிச்சித்தர்
(B) திருமூலர்
(C) போகர்
(D) கோரக்கர்
‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்ற கூற்று யாருடையது?
(A) திருமூலர்
(B) திருநாவுக்கரசர்
(C) இராமலிங்க அடிகள்
(D) திருஞானசம்பந்தர்

‘மூலன்’ என்னும் இயற்பெயரை உடையவர்
(A) திருமூலர்
(B) அப்பர்
(C) சாத்தனார்
(D) தாயுமானவர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!