பெரியபுராணம் – சேக்கிழார்

திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம்

  • திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர் சேக்கிழார்.
  • திருத்தொண்டத் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய இண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது திருத்தொண்டர் புராணம் * *
  • சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்து) 63 மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம் *
  • 63 மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்ட பெருமை காரணமாக பெரிய புராணம் என்று திருத்தொண்டர் புராணம் அழைக்கப்படுகிறது. * *

சேக்கிழார்

  • திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர் சேக்கிழார்
  • ‘பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ‘ என்று சேக்கிழாரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.**
  • சேக்கிழார் கி.பி. 12ஆ நூற்றாண்டைச் சேர்ந்தவர்.*
  • சேக்கிழார், சோழ அரசன் இரண்டாம் (2)ம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தார். **

திருத்தொண்டத் தொகை

  • திருத்தொண்டத் தொகை நூலை எழுதியவர் சுந்தரர்.
  • திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையைக் கூறுகிறது

திருத்தொண்டர் திருவந்தாதி

  • திருத்தொண்டத் தொகையை சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பி எழுதியது திருத்தொண்டர் திருவந்தாதி *
  • திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது.

சோழ திருநாட்டுச் சிறப்பு

பாடல் – 59 ***

மா விரைத் தெழுந்தார்ப்ப வரைதரு பூ விரித்த புது மதுப் பொங்கிட வாவியிற் பொலி நாடு (சோழ நாடு) **

வளந்தரக் காவிரிப் புனல்கால் பரந்தோங்குமால்

பாடலின் பொருள்

  • சோழ நாட்டில் காவிரி நீர் மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக் கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன.
  • நீர் நிலைகள் நிறைந்த நாட்டுக்கு வளத்தைத் தரும் பொருட்டுக் காவிரி நீர் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

சொல்லும் பொருளும்

  • மா – வண்டு
  • மது – தேன்
  • வாவி – பொய்கை

களை பறிக்கும் பருவம்

பாடல் – 63

மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரியக்

கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்

தண்டரளஞ்சொரி பணிலம் இடறியிடை

தளர்ந்தசைவார் **

வண்டலையும் குழல் மட நடையின்  வரம்பணைவார்

பாடலின் பொருள்

  • நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது.
  • அப்பருவத்தைக் கண்ட உழவர் இதுதான் களை பறிக்கும் பருவம் என்றனர்.
  • அவ்வாறை களைகளைக் களைந்து செல்லும் உழத்தியரின் கால்களில் குளிர்ந்த முத்துக்களை ஈனும் சங்குகள் இடறின.
  • அதனால், இடை தளர்ந்து வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அசையுாறு மென்மையாகக் நடந்து அருகில் உள்ள வரப்பினை அடைவர்.

சொல்லும் பொருளும்

  • வளர் முதல் – நெற் பயிர்
  • பணிலம் – சங்கு
  • தரளம் – முத்து
  • வரம்பு – வரப்பு

நாடு முழுதும் நீர் நாடு என்று சொல்லத்தக்கதாய் உள்ளது

பாடல்-67 ***

காடெல்லாம் கழைக் கரும்பு காவெல்லாம்

குழைக்கரும்பு **

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம்

நெருங்குவளை **

கோடெல்லாம் மட அன்னம் குளமெல்லாம் கடல்

அன்ன

நாடெல்லாம் நீர் நாடு தனை ஒவ்வா நலமெல்லாம்

 பாடலின் பொருள்

  • காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளன. சோலைகள் எங்கும் குழைகளில் மலர் அரும்புகள் உள்ளன.
  • பக்கங்களில் எங்கும் கரிய குவளை மலர்கள் மலர்ந்துள்ளன. வயல்களில் எங்கும் நெருக்கமாகச் சங்குகள் கிடக்கின்றன.
  • நீர் நிலையின் கரையெங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன. குளங்கள் எல்லாம் கடலைப் போன்ற பரப்பை உடையன.
  • அதனால், நாடு முழுதும் நீர்நாடு என்று சொல்லத்தக்கதாய் உள்ளது இத்தகைய சிறப்புடைய சோழ நாட்டிற்குப் பிற நாடுகள் ஈடாக மாட்டா.

சொல்லும் பொருளும்

  • கழை – கரும்பு
  • கா – சோலை
  • குழை – சிறு கிளை
  • அரும்பு – மலர் மொட்டு
  • மாடு – பக்கம்
  • நெருங்கு வளை – நெருங்குகின்ற சங்குகள்
  • கோடு – குளக்கரை

 நீர்நிலைகளின் உயிரினங்கள்

பாடல் – 69

அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில் துன்னும் மேதி படியத்*

துதைந்தெழும் கன்னி வாளை கமுகின் மேற் பாய்வன மன்னு வான்மிசை வானவில் போலுமால்*

பாடலின் பொருள்

  • அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும்.
  • அதனால், அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும்
  • இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்.

சொல்லும் பொருளும்

  • ஆடும் – நீராடும்
  • மேதி – எருமை
  • துதைந்து எழும் – கலக்கி எழும்
  • கன்னி வாளை – இளமையான வாளை மீன்

நெற் போர், மீன், சங்கு குவித்தல்

பாடல்-73

அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்

பரிவுறத் தடிந்த பன்மீன் படர் நெடுங்குன்று செய்வார்

சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு

யாப்பார்

விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்

பாடலின் பொருள்

  • அரியப்பட்ட செந்நெல் கட்டுகளை அடுக்கிப் பெரிய போராகக் குவிப்பர்.
  • மிகுதியாகப் பிடிக்கப்பட்ட பல வகை மீன்களையும் நீண்ட குன்றைப் போல் குவிப்பைர்.
  • வளைந்த சங்குகளை ஈன்ற முத்துகளையும் குன்றைப் போல் உயர்த்திக் கூடடுவர்
  • தேன் வடியும் விரிந்த மலர்த் தொகுதியை மலை போல்
  • குவித்து வைப்பர்.

சொல்லும் பொருளும்

  • சூடு – நெல் அரிக்கட்டு
  • சுரிவளை – சங்கு
  • வேரி – தேன்

நெற் போரடித்தல்

பாடல் – 74

சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்

காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்

ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்

போல் வலங்கொண்டு சூழும் காட்சியின் மிக்க தன்றே

பாடலின் பொருள்

  • நெல்கற்றைகள் குவிந்த பெரிய மலை போன்ற போரை
  • மேலேயிருந்து சாயச் செய்வர்.
  •  பெரிய வண்டிகளைச் செலுத்தும் கருமையான
  • எருமைக்கூட்டங்கள் வலமாகச் சுற்றிச்சுற்றி மிதிக்கும்.
  •  இத்தோற்றமானது கரிய மேகங்கள் பெரிய பொன்
  • மலைச் சாரல் மீது வலமாகச் சுற்றுகின்ற காட்சியை போல் உள்ளது
  • இத்தகையக் காட்சிகள் அங்கு மிகுதியாகத் தோன்றும்.

சொல்லும் பொருளும்

  • பகடு – எருமைக் கடா
  • பாண்டில் – வட்டம்
  • சிமயம் – மலையுச்சி

மரங்கள் நிறைந்த காட்சி

பாடல்-78***

நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும் **

கோளி சாலந் தமாலம் குளிர் மலர்க் குரவம் எங்கும் **

தாளிரும் போந்து சந்து தண் மலர் நாகம் எங்கும் **

நீளிலை வஞ்சி காஞ்சி நிறை மலர்க் கோங்கம் எங்கும்.

பாடலின் பொருள்

  • சோழ நாட்டில் எங்கும் தென்னை, செருந்தி, நறுமணமுடைய நரந்தம் போன்றவை உள்ளன.
  • அசரமரம், கடம்ப மரம், பச்சிலை மரம். குளிர்ந்த மலரையுடைய குரா மரம் போன்றவை எங்கும் வளர்ந்துள்ளன.
  • பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை, சந்தனம், குளிர்ந்த மலரையுடைய நாகம், நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சி, மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கெங்கும்  செழித்து வளர்ந்துள்ளன.

சொல்லும் பொருளும்

  • நாளி கேரம் – தென்னை
  • நரந்தம் – நாரத்தை
  • கோளி – அரச மரம்
  • சாலம் – ஆச்சா மரம்
  • தமாலம் – பச்சிலை மரம்
  • இரும் போந்து – பருத்த பனை மரம்
  • சந்து – சந்தன மரம்
  • நாகம் – நாக மரம்
  • காஞ்சி – ஆற்றுப் பூவரசு

முந்தைய ஆண்டு வினாக்கள்

“உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்? (5 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
(B) உ.வே.சாமிநாதனார்
(C) திரு.வி. கலியாண சுந்தரனார்
(D) ஆறுமுக நாவலர்
(E) விடை தெரியவில்லை

விடை தேர்க.
“பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என்று பாராட்டப்பட்டவர் (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) மாணிக்கவாசகர்
(B) சேக்கிழார்
(C) திருஞானசம்பந்தர்
(D) திருநாவுக்கரசர்

“தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர் யார்? (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) அப்பூதியடிகள்
(B) திருநாவுக்கரசர்
(C) சேக்கிழார்
(D) திருஞானசம்பந்தர்

‘திருத்தொண்டர் புராணம்’ என்று அழைக்கப்படுவது (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) சீறாப்புராணம்
(B) கந்தபுராணம்
(C) திருவிளையாடற்புராணம்
(D) பெரியபுராணம்
(E) விடை தெரியவில்லை

பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
(A) சேர நாடு
(B) சோழ நாடு
(C) பாண்டிய நாடு
(D) கலிங்க நாடு
(E) விடை தெரியவில்லை

“பொங்கு கடல் கல்மிதப்பிற் போந்தேறும் அவர் பெருமை அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யாருளரே”-இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
(A) கம்பராமாயணம்
(B) மகாபாரதம்
(C) பெரியபுராணம்
(D) நளவெண்பா

பெரியபுராணம் என்னும் நூலுக்குச் சேக்கிழார் இட்ட பெயர்
(A) திருத்தொண்டர் புராணம்
(B) திருவிளையாடர் புராணம்
(C) சிவபுராணம்
(D) கந்தபுராணம்

“அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
(A) பெரியபுராணம்
(B) திருவிளையாடற்புராணம்
(C) சிலப்பதிகாரம்
(D) சீறாப்புராணம்

“திருத்தொண்டர் மாக்கதை” எனும் அடைமொழியால் அழைக்கப்பெறும் நூல் யாது?
(A) பெரிய புராணம்
(B) கந்த புராணம்
(C) சீறாப்புராணம்
(D) அரிச்சந்திர புராணம்

‘பெரிய புராணம் எழுதிடத் துணை நின்ற நூல் எது?
(A) திருத்தொண்டத் தொகை
(B) திருவாசகம்
(C) தேவாரம்
(D) திருவெம்பாவை

கூற்று: 1 சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்
கூற்று:2 பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்டபெயர் திருத்தொண்டர் புராணம்
(A) கூற்று 1 மட்டும் சரி
(B) கூற்று 2 மட்டும் சரி
(C) கூற்று இரண்டும் தவறு
(D) கூற்று இரண்டும் சரி

உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
(A) கம்பர்
(B) சேக்கிழார்
(C) புகழேந்தி
(D) ஒட்டக்கூத்தர்

பெரியபுராணத்தை அருளிய சேக்கிழார் பிறந்த தற்போதைய மாவட்டம் எது?
(A) சென்னை
(B) கடலூர்
(C) விழுப்புரம்
(D) காஞ்சிபுரம்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!