பெருமாள் திருமொழி – குலசேகராழ்வார்

  • பெருமாள் திருமொழியைப் பாடியவர் குலசேகராழ்வார்.
  • குலசேகராழ்வாரின் காலம் (எட்டாம்) 8ம் நூற்றாண்டு.
  • பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.
  • பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • 1691ஆவது பாசுரத்தில் குலசேகராழ்வார் வித்துவக்கோடு இறைவன் உய்யவந்த பெருமானை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.
  • வித்துவக்கோடு என்னும் ஊர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.

 நோயாளி மருத்துவர் – குலசேகராழ்வார் வித்துவக்கோட்டு இறைவி ஒப்பீடு

ஐந்தாம் திருமொழி

பாடல் 691 ***

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே (குலசேகராழ்வார்)

பாடலின் பொருள்

  • மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் கத்தியால் அறுத்து சுட்டாலும், அது நன்மைகே என்று உணர்ந்து நோயாளி மருத்துவரை நேசிர்பார்.
  • வித்துக் கோட்டில் எழுந்தருளயிருக்கும் அன்னையே! அது போன்று நீ விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்கு(குலசேகராழ்வார்) தந்தாலும்
  • உன் அடியவளாகிய நான் (குலசேகராழ்வார்) உன் அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்

சொல்லும் பொருளும்

  • சுடினும் – சுட்டாலும்
  • மாளாத – தீராத
  • மாயம் – விளையாட்டு

முந்தைய ஆண்டு வினாக்கள்

குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் எத்தொகுப்பில் உள்ளது? (4 முறை கேட்கப்பட்டுள்ளது )
(A) திருவியற்பா
(B) பெரிய திருமொழி
(C) முதலாயிரம்
(D) நான்காயிரம்
(E) விடை தெரியவில்லை

பெருமாள் திருமொழியில் பாசுரங்கள் உள்ளன. (2 முறை கேட்கப்பட்டுள்ளது )
(A) இருநூற்றைந்து
(B) நூற்றைந்து
(C) நூறு
(D) பதினெட்டு

பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பெற்றுள்ள இடம்
(A) முதலாம் திருமொழி
(B) மூன்றாம் திருமொழி
(C) நான்காம் திருமொழி
(D) ஐந்தாம் திருமொழி
(E) விடை தெரியவில்லை

பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்? (2 முறை கேட்கப்பட்டுள்ளது )
(A) கம்பர்
(B) குலசேகரர்
(C) ஆண்டாள்
(D) பெரியாழ்வார்
(E) விடை தெரியவில்லை

‘பெருமாள் திருமொழி’, ‘முகுந்தமாலை’ – இந்நூல்கள் எழுதப்பட்ட மொழி
(A) தமிழ், வடமொழி
(B) வடமொழி, ஆங்கிலம்
(C) இலத்தீன், கிரீக்கு
(D) தமிழ், இலத்தீன்

“என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்” -என்ற வரிகளைப் பாடியவர்
(A) திருப்பாணாழ்வார்
(B) குலசேகராழ்வார்
(C) பேயாழ்வார்
(D) ஆண்டாள்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!