1975-77 ல் தேசிய அவசரநிலை ஏன் கொண்டுவரப்பட்டது? அதன் தாக்கங்களை விவரி. / Why 1975 – 1977 National Emergency Imposed? Explain the Impacts.

தேசிய அவசரநிலைப் பிரகடனம்  1975:

  • குடியரசுத்தலைவர் (ஃபக்ருதீன் அலி அஹ்மத்) 1975 ஜூன் 26 அன்று அவசரநிலை பிரகடனத்தை  அறிவித்தார். இது மூன்றாவது முறை  கொண்டுவரப்பட்ட தேசிய அவசரநிலை பிரகடனம் ஆகும்.
  • அப்போது திருமதி இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தார்
  • அவசரநிலையின்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்,
  • தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன, அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்பட்டன,
  • பத்திரிக்கைகள் தணிக்கை செய்யப்பட்டன. சில சட்டங்கள் அரசாங்கத்திற்கு ஏற்றவாறு மீண்டும் மாற்றப்பட்டன.
  • இது இந்தியாவின் அரசியல் சூழ்நிலையை மாற்றியது.
தேசிய அவசரநிலை ஏன் கொண்டுவரப்பட்டது?
  • வங்கதேச விடுதலைப் போரின் தாக்கம்
  • அகதிகளின் வருகை
  • இந்தியாவின் சமூக-பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது
  • அமேரிக்க அரசானது இந்தியாவுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தியது
  • பொருட்களின் விலை அதிகரிப்பு
  • மெதுவான தொழில்துலற வளர்ச்சி மற்றும் அதிக வேலையின்மை விகிதம்
  • அரசு ஊழியர்களின் சம்பளத்தை முடக்கும் அரசாங்க நடவடிக்கைகள்
  • தாமதமான பருவமழை உணவு தானிய உற்பத்தியில் எதிர்மறை தாக்கத்தை  ஏற்படுத்தியது
  • விலை உயர்வு மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம்
  • குஜராத் மாநில தேர்தலில்  காங்கிரசின் தோல்வி
  • 1971 ரேபரேலி தேர்தலில்  நடைபெற்ற குளறுபடிகள்
சம்பந்தப்பட்ட  முக்கிய தலைவர்கள்:
  • ஜெ .பி.நாராயணன்
  • ஜார்ஜ் பெர்னாண்டஸ்
அவசரநிலை  கொண்டுவரப்பட்டதன் நோக்கங்கள்:
  • “உள்நாட்டு கலவரங்களைக்” கட்டுப்படுத்த
  • ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கிய இயக்கம் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மக்களாட்சி ஆபத்தில் இருந்தது.
  • விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் விளிம்புநிலை மக்களை மேம்படுத்துவதற்கான தேவை
  • அந்நிய நாடுகளின் தலையீட்டால் இந்தியாவை நிலையற்றதாக மாற்ற முயற்சி.
  • இந்தியாவில் அரசியல் சூழ்நிலை மாற்றம்:
  • பத்திரிக்கை தணிக்கை  செய்யப்பட்டது
  • ஒரு செய்தியை வெளியிட, முன் அனுமதி தேவைப்பட்டது
  • அரசியல் எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்
  • அதிகாரம் மத்திய அரசின் கைகளில் குவிந்திருந்தது
  • அடிப்படை உரிமைகள் தடை செய்யப்பட்டன
  • அரசியைலமப்பானது ஒரு சர்வாதிகார முறையில் குறிப்பாக 42 வது
  • அரசியைலமப்புத் திருத்தச் சட்டத்தில் திருத்தியமைக்கப்பட்டது .
  • ஜெ.பி. நாராயணன் தலைலமயில் ஒரு புதிய கட்சியை – ஜனதா கட்சி – உருவாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டன
  • சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது
  • தேர்தல்கள் இடைநிறுத்தப்பட்டு சிவில் உரிமைமகள் தடை செய்யப்பட்டன.
தாக்கம்:
  • ‘உள்நாட்டு கலவரங்கள்’ என்ற வார்த்தையானது ‘ ஆயுதமேந்திய போராட்டம் ‘ என்று மாற்றப்பட்டது.
  • அரசியல் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டது
  • மக்களாட்சியின் கூட்டாட்சி வடிவமானது மீட்டெடுக்கப்பட்டது
  • சட்டத்தின் ஆட்சியானது உறுதி செய்யப்பட்டது.

அவசரநிலை என்பது நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டிய அரிதான சமயங்களில் மட்டுமே  பயன்படுத்தப்பட வேண்டுமே  தவிர தனிப்பட்ட விருப்பங்களுக்காக அல்ல

National Emergency 1975

  • President (Fakhruddin Ali Ahmad) has proclaimed an Emergency on June 26, 1975. This was the third national emergency. Ms Indira Gandhi was the Prime Minister of India
  • During an emergency, opposition leaders were arrested, elections postponed, anti-government protests crushed and the press censored.
  • Some laws were rewritten to suit the government.
  • It has changed the political scenario in India
Why was National Emergency imposed?
  • Impact of Bangladesh Liberation War
  • the staggering influx of refugees
  • the socio-economic condition of India was in a dire state
  • US Government, too, stopped all aids to India
  • Increase in commodity price
  • slow industrial growth coupled with a high rate of unemployment
  • government’s move to freeze the salaries of its employees
  • monsoons caused a delay in the food grain output
  • Protest against price rise and corruption
  • Congress lost in Gujarat State election
  • Electoral Mal-practice in 1971 Rae Bareli election
Important leaders involved:
  • JP Narayanan
  • George Fernandez
The goal for imposing emergency:
  • to control “internal disturbance”
  • India’s security and democracy was in danger owing to the movement launched by Jayaprakash Narayan (JP Movement)
  • need for rapid economic development and upliftment of the underprivileged
  • The intervention of powers from abroad, which could destabilize and weaken India.
Changing of Political Scenario in India:
  • press was censored
  • Prior permission was needed to publish an article
  • political opponents were imprisoned
  • Power concentrated in the hands of the Union government
  • Fundamental Rights were restricted
  • Constitution was amended in an autocratic manner particularly in the 42nd amendment
  • The opposition united to form a new party — the Janata Party — under the leadership of JP Narayan
  • For the first time since independence, the Congress was defeated in the Lok Sabha election
  • Elections were suspended and civil liberties curbed.
Impact:
  • Replaced Internal disturbances into armed rebellion
  • Ensured political freedom
  • Restored federal form of democracy
  • Rule of law ensured

The emergency is to be used only on rarest of the rare case and to protect the security, integrity and sovereignty of the nation and not on personal whims.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!