புவி வெப்பமடைதல் (b) காலநிலை மாற்றம் மற்றும் (c) அமில மழை பற்றிய குறிப்பு  எழுதுக / Write a note on (a) Global Warming  (b)Climate change and (c) Acid rain

புவி வெப்பமயமாதல்‌

  • நிலம்‌ மற்றும்‌ நீர்‌ உள்ளடக்கிய பூமி மற்றும்‌ வளிமண்டலத்தில்‌ தற்போது அதிகரிக்கும்‌ வெப்ப நிலையையே புவி வெப்பமயமதால்‌ என்கிறோம்‌. உலகின்‌ சராசரி வெப்பநிலை கடந்த 100 ஆண்டுகளில்‌ 75 (1.4F) கூடியுள்ளதாகச்‌ சொல்லப்படுகிறது.
  • இதில்‌ 3ல்‌ 2 பங்கு 1975க்கு பின்‌ வந்த குறுகிய காலத்திலேயே கூடியதாகும்‌. கரியமில வாயு, மீத்தேன்‌, குளோரோபுளோரோ கார்பன்‌ (chloro fluoro carbon) நைட்ரஸ்‌ ஆக்ஸைடு (nitrous oxide) போன்ற பசுமைக்‌ குடில்‌ வாயுக்களின்‌ அளவு வளிமண்டலத்தில்‌ அதிகரிப்பதால்‌ புவியின்‌ வெப்பம்‌ அதிகரிக்கின்றது. இதை பசுமைக்குடில்‌ விளைவு என்பர்‌.
  • இவைகளில்‌ கரியமில வாயு புவி வப்பம்‌ அதிகரிக்க 50% காரணமாக உள்ளது. உயிரிப்பொருட்கள்‌, விறகு ஆகியவற்றை எறிப்பதாலும்‌ காடுகள்‌, மரங்களை அழிப்பதாலும்‌ கரியமில வாயுவின்‌ அளவு அதிகரிக்கின்றது.
  • கடந்த காலங்களில்‌ புவி வெப்பமடைதல்‌ இயற்கைக்‌ காரணங்களால்‌ நிகழ்ந்தது.
  • ஆனால்‌ தற்போது இது மனித நடவடிக்கைகளால்‌ தோற்றுவிக்கப்படுகின்றது.
விளைவுகள்
  • புவி வெப்பமடைதல்‌ காரணமாக விவசாயம்‌, தோட்டக்கலை மற்றும்‌ சுற்றுச்‌ சூழல்‌ அமைப்பு போன்றவை அதிக அளவில்‌ பாதிக்கப்படுகின்றது.
  • குறைந்த மழையளவு, அதிக வெப்பம்‌ காரணமாக அதிக பூச்சி தாக்குதல்‌, களைகள்‌ வளர்தல்‌ மூலம்‌ விவசாயம்‌ பாதிக்கப்படுகின்றது.
  • அதிக வெப்பம்‌ காரணமாக நோய்‌ பரப்பும்‌ கொசு போன்ற உயிரினங்கள்‌ பெருகி மலேரியா, டெங்கு, என்செபாலிட்டிஸ்‌ (encephalities) மஞ்சள்‌ காய்ச்சல்‌ போன்ற நோய்களை பரப்புகின்றது.
  • புவி வெப்பத்தின்‌ சராசரி வெப்ப நிலையின்‌ அதிக அளவு அதிகரிப்பு மழை பெய்யும்‌ போக்கையும்‌ மற்றும்‌ தட்பவெப்ப நிலைகளையும்‌ மாற்றி சுற்றுப்புறச்‌ சூழலில்‌ சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்‌.

காலநிலை மாற்றம்‌

  • வளிமண்டலத்தில்‌ பசுமைக்‌ குடில்‌ வாயுக்களின்‌ அளவுகள்‌ வளர்ந்துகொண்டே செல்வதால்‌ நீண்ட காலத்தில்‌ ஏற்படும்‌ பருவநிலை மாறுபாடுகளே காலநிலை மாற்றம்‌ எனப்படும்‌.
  • தொழிற்புரட்சியில்‌ தொடங்கி மனித நடவடிக்கைகளால்‌ வழி மண்டலத்தில்‌ உள்ள கரியமில வாயுவின்‌ அளவு தொழில்புரட்சிக்கு முன்‌ 280ppm என்ற அளவிலிருந்து 2016ம்‌ ஆண்டு 402 ppm ஆக, அதாவது 40 விழுக்காடு அளவிற்கு புவி வெப்பத்தை அதிகரித்துள்ளது.
விளைவுகள்
  • கடற்கரை நீரின்‌ வெப்ப அதிகரிப்பு, உயர்ந்த வெப்பநிலை, மழைபெய்யும்‌ காலங்களில்‌ மாற்றம்‌, அதிக வேகத்துடன்‌ அடிக்கடி தோன்றும்‌ புயல்‌ ஆகியவற்றை உலகின்‌ பல பகுதிகளிலும்‌ உணரத்‌ தொடங்கியுள்ளார்கள்‌.
  • கடல்‌ மட்டமும்‌ வெப்பமும்‌ அதிகரிக்கும்‌ என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமில மழை (Acid Rain)

  • காற்று மாசுவின்‌ விளைவே அமில மழை ஆகும்‌. தொழிற்சாலைகள்‌, வாகனங்கள்‌ கொதிப்பான்கள்‌ போன்றவை வெளியிடும்‌ வாயுக்கள்‌ வளிமண்டலத்தின்‌ உள்ள நீர்த்துகள்களோடு இணையும்‌ போது ஏற்படுகின்றது.
  • இந்த வாயுக்கள்‌ நைட்ரஜன்‌ ஆக்ஸைடு, சல்பர்‌ டை ஆக்ஸைடு மற்றும்‌ சல்பர்‌ டிரை ஆக்ஸைடு, தண்ணீரோடு கலக்கின்ற போது சல்பரஸ்‌ அமிலம்‌, நைட்ரிக்‌ அமிலம்‌, சல்பியூரிக்‌ அமிலம்‌ போன்றவையாக மாறுகின்றது. இந்நிகழ்வுகள்‌ எரிமலை வெடித்துச்‌ சிதறும்‌ போதும்‌ எரிகுழம்புகளைக்‌ கக்கும்போதும்‌ இயற்கையிலேயும்‌ ஏற்படும்‌.
விளைவுகள்
  • தாவரங்கள்‌, நீர்வாழ்‌ உயிரினங்கள்‌, கட்டமைப்புக்கள்‌ அதிக அளவில்‌ அமில மழையால்‌ பாதிக்கப்படுகின்றது.

Global Warming

  • Global warming is the current increase in temperature of the Earth’s surface (both land and water) as well as its atmosphere. Average temperatures around the world have risen by 0.75oC (1.4 0 F) over the last 100 years. About two-thirds of this increase has occurred since 1975.
  • Carbon dioxide, methane, Chlorofluoro Carbon, nitrous oxides are the greenhouse gases warming the earth’s surface. So it is also called the greenhouse effect.
  • CO2 is the most important of the greenhouse gases contributing to 50% of global warming. The burning of fossil fuel, and other biomass, deforestation result in CO2.
  • In the past, when the Earth experienced increases in temperature it was the result of natural causes but today it is being caused by human activities.
Impact
  • Global warming adversely affects agriculture, horticulture and the ecosystem. Reduced rainfall, higher temperature and increased pest/weed growth hamper farming.
  • Threats to health arise due to an increase in disease-carrying vectors such as mosquitoes resulting in malaria, dengue fever, encephalitis and yellow fever.
  • An increase in the global average surface air temperature of such magnitude will bring about alarming changes in rainfall patterns and other climatic conditions, resulting in serious ecological disequilibrium.
Climate Change
  • Climate change refers to seasonal changes over a long period with respect to the growing accumulation of greenhouse gases in the atmosphere.
  • Recent studies have shown that human activities since the beginning of the industrial revolution.
  • Climate Change has contributed to an increase in the concentration of carbon dioxide in the atmosphere by as much as 40%, from about 280 parts per million in the pre-industrial period, to 402 parts per million in 2016, which in turn has led to global warming.
Impact
  • Several parts of the world have already experienced the warming of coastal waters, high temperatures, a marked change in rainfall patterns, and increased intensity and frequency of storms.
  • Sea levels and temperatures are expected to be rising.
Acid rain
  • Acid rain is one of the consequences of air pollution.
  • It occurs when emissions from factories, cars or heating boilers
  • Its contact with the water in the atmosphere.
  • These emissions contain nitrogen oxides, sulphur dioxide and sulphur trioxide which when mixed with water becomes sulfurous acid, nitric acid and sulfuric acid.
Impact
  • This process also occurs by nature through volcanic eruptions. It can have harmful effects on plants, aquatic animals and infrastructure.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!