TNPSC குரூப்-2 தேர்வு என்பது தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் ஒரு முக்கியமான போட்டி தேர்வு ஆகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, தேர்வின் நோக்கங்கள் மற்றும் தேவையான தயாரிப்பு முறைகள் பற்றிய தெளிவான புரிதல் அவசியம்.
Prelims தேர்வுக்கு தயாராகுதல்
TNPSC குரூப்-2 தேர்வின் முதல் கட்டம் முதல்நிலை தேர்வு ஆகும். இந்த தேர்வில் தமிழ் or ஆங்கிலம் – (100), பொது அறிவு (75), மற்றும் கணிதம் (25) பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முதல்நிலை தேர்வில் வெற்றிபெற, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
பகுதி வாரியாக மதிப்பெண் இலக்கு:
- தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 95 + கேள்விகளை சரியாக பதிலளிக்க வேண்டும்..
- பொது அறிவில் 50+ கேள்விகள் வரை பதிலளிக்கலாம்.
- கணிதத்தில் 23+ வரை கேள்விகள் பதிலளிக்க வேண்டும்.
- மொத்த கேள்விகளில் 165+ என்பது பாதுகாப்பானது. கேள்வியின் கடினத்தமையை பொறுத்து இந்த மதிப்பெண் அளவானது மாறுபடும்.
கேள்வியின் வடிவமைப்பை எவ்வாறு தெரிந்துகொள்வது?
- தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து முந்தைய தேர்வுத் தாள்களைப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள கேள்விகளைப் பயிற்சி செய்ய வேண்டும்.
பொதுத்தமிழ் தயாரிப்பதற்கான சில குறிப்பிட்ட குறிப்புகள்:
- தமிழ் இலக்கணம்,தமிழ் இலக்கியம்,தமிழ் உரைநடை – 6 TO 12th புதிய பாடப்புத்தகத்தில் அனைத்து பகுதியையும் தரவாக படித்து முடிப்பது அவசியம்.
- பழைய பாடப்புத்தகத்தில் பாடத்திட்டத்தில் (Syllabus) உள்ள பகுதியை அவசியம் படிக்க வேண்டும்.
- பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்து படிக்க வேண்டும்.
- பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 90+ கேள்விகள் சரியாக செய்தால் மட்டுமே PRELIMS தேர்வை வெல்லமுடியும்
பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம்
- ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்: முதலில், தேர்வு தேதி மற்றும் காலக்கெடுவை கருத்தில் கொண்டு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த திட்டத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.
- தினமும் பயிற்சி செய்யுங்கள்: தேர்வில் வெற்றிபெற, தினமும் பயிற்சி செய்வது அவசியம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும்.
- முந்தைய தேர்வுத் தாள்களைப் பயிற்சி செய்யுங்கள்: முந்தைய தேர்வுத் தாள்களைப் பயிற்சி செய்வது, தேர்வின் போக்கு மற்றும் நடைமுறைகளைப் புரிந்துகொள்ள உதவும்.
TNPSC தேர்வுக்கு கணிதம் தயாரிக்க சில குறிப்பிட்ட குறிப்புகள்:
- கணிதம் 6 to 10 பள்ளிப் பாடங்களில் உள்ள example sum மற்றும் பயிற்சி கணக்குகளை பயிற்சி செய்யவும். ஏனெனில், TNPSC தேர்வுக்கு கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் பள்ளிப் பாடங்களிலிருந்து எடுக்கப்படுகின்றன
- முந்தைய தேர்வுத் தாள்களைப் பயிற்சி செய்யுங்கள்
MATHS WHERE TO STUDY – BOOKWISE
பொது அறிவு தயாரிப்பு
- TNPSC தேர்வுக்கு பொது அறிவு தயாரிப்பது என்பது ஒரு முக்கியமான பகுதியாகும். ஏனெனில், TNPSC தேர்வுகளில் பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகள் கேட்கப்படும். எனவே, பொது அறிவு பகுதியில் சிறப்பாக பயிற்சி பெற்றால், தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- மற்ற பாடங்களை விட பொதுஅறிவு பகுதியானது சற்று அதிக பாடங்களை கொண்டிருக்கும்.
- எனவே தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் முன்பு பொது அறிவு பகுதில் முக்கிய பாடங்களை படித்துவிடுவது சிறந்தது.
படி நிலைகள்:
- தேர்வின் பாடத்திட்டத்தைப் புரிந்துகொள்வது
முதலில், TNPSC தேர்வின் பொது அறிவு பாடத்திட்டத்தைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்வது அவசியம். மொத்தம் 10 பாடங்கள் உள்ளன. அவற்றில் எந்த தலைப்புகளில் அதிகம் கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். (Ex -Unit – 8, Polity, INM, Unit – 9…etc).
- தமிழ்நாடு பாட புத்தகத்தை 6 to 12 ம் வகுப்பு வரையில் உள்ள பாடங்களில் அதிக கேள்விகள் கேட்கப்படும் பாடங்களை முதலில் படிக்கலாம்
TNSCERT – GK – BOOK COMPILATION – SUBJECTWISE
தினமும் பயிற்சி
பொது அறிவு பகுதியில் சிறப்பாக பயிற்சி பெற, தினமும் பயிற்சி செய்வது அவசியம். தினமும் குறைந்தது 2 மணி நேரம் பயிற்சி செய்தால், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை எளிதில் எதிர்கொள்ள முடியும். Exam machine தளத்தில் Daily Questions update செய்வதை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம்.
தினமும் GK கேள்வி பயிற்சி செய்வதற்காக தமிழ்நாடு புத்தக வாரியாக EXAM MACHINE APP ல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன
முந்தைய ஆண்டு தேர்வு கேள்விகளைத் தேர்வு செய்தல்
TNPSC தேர்வின் முந்தைய ஆண்டு தேர்வு கேள்விகளைத் தேர்ந்தெடுத்து பயிற்சி செய்வதன் மூலம், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் வகைகளையும், அதற்கான சரியான பதில்களையும் அறிந்து கொள்ள முடியும். இதுவும் Exam machine தளத்தில் update செய்யப்பட்டுள்ளது
- தேர்வு தேதிக்கு அருகில், தேர்வு முறை மற்றும் சூழ்நிலைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
Mains தேர்வுக்கு தயாராகுதல்
இரண்டு தாள்களை கொண்டுள்ளது.
1. தமிழ் தகுதி தேர்வு
2. பொது அறிவு பகுதி.
1. தமிழ் தகுதி தேர்வு
- தமிழ் தகுதி தேர்வானது, அடிப்படை தமிழ் அறிவை சோதனை செய்யும் அளவிலே இருக்கும். தமிழில் அடிப்படை தெரிந்து இருந்தால் போதுமானது.
2. பொது அறிவு பகுதி
- பொது அறிவு பகுதியானது அடிப்படை கேள்விகளுடன் நடப்பு நிகழ்வுகளை இணைத்து படிக்கவேண்டும்.
- உதாரணமாக மத்திய, மாநில உறவுகளை பற்றிய அடிப்படை தகவல்கள் 12 வகுப்பு பாடப்புத்தகத்தில் காணப்படும், ஆனால் தேர்வில் கேட்கப்படும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு, நடப்புநிகழ்வுகளை இணைத்து பதிலை எழுதும்போது அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.
SOURCE FOR STUDY IN EXAM MACHINE WEBSITE
GROUP – 2 MAINS QUESTIONS AND ANSWERS – ENGLISH
GROUP – 2 MAINS QUESTIONS AND ANSWERS – TAMIL
SYLLABUS – WISE – GROUP – 2 MAINS PREPARATION