கடைசி 10 நாட்கள் இருக்கும் நிலையில் TNPSC GROUP I தேர்வு சமயத்தில் என்ன செய்ய வேண்டும் செய்யகூடாது என மாணவ மாணவிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த கட்டுரை எழுதப்படுகிறது. சிலருக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். எனவே ஒவ்வொருவருக்கும் கீழ்கண்டவை பொருந்தினால் மட்டும் பின்பற்றுங்கள்.
- கடைசி நிமிடங்களில் நீங்கள் கடந்த 6 மாதங்களாக படித்ததை மட்டும் REVISE செய்யுங்கள்.
Contents show
REVISE MEANS
- Revise your Short Notes
or
Revise Book (Highlighted points)
or
Attempt online Quiz (நீங்கள் ஏற்கனவே அதே தேர்வை எழுதியிருந்தால் மட்டும்) - EXAM MACHINE ல் கடந்த 3 மாதங்களாக தேர்வு எழுதியவர்களுக்கு இதுவரை Revision (50 Questions per DAY) நடத்தப்பட்டு வருகிறது.
- மேலும், இதுவரை நடந்த எல்லா EXAM MACHINE GROUP I தேர்வுகளை இந்த நேரத்தில் எழுத நினைப்பவர்கள் கீழ்கண்ட Link ல் எழுதுங்கள்.
ALL EXAM MACHINE GROUP 1 TEST ATTEND HERE
- இந்த நேரத்தில் ஒரு TOPIC ஐ மனதில் எண்ணி முக்கிய ஆண்டுகள், FACTS ஒரளவுக்கு ஞாபகம் வருகிறதா என முயற்சி செய்யுங்கள். இல்லை என்றாலும் பரவாயில்லை மறுபடியும் அந்த பகுதியை மட்டும் REVISION செய்யுங்கள்.
- இந்த தேர்வை பொறுத்த வரையில் யார் நன்றாக படிக்கிறவர்கள் என்பதை விட PROPER REVISION (ஏற்கனவே படித்ததை)செய்பவர்களுக்கே வெற்றி உறுதியாகிறது.
- நீங்கள் போதிய முயற்சியும் பயிற்சியும் செய்திருந்தால், நீங்கள் நினைக்கும் போது ஞாபகம் வரவில்லை என்றாலும், QUESTION PAPER ஐ பார்த்தால் ஞாபகம் இருக்கும்.எனவே தேவையில்லாமல் பயப்பட வேண்டாம்.
‘BELIEVE YOUR PREPARATION, HAVE CONFIDENCE ‘
- மற்றவை எல்லாம் தன்னால் நடக்கும்.
தேர்வு அறைக்கு முன்னர்
DO’S AND DON’TS:
- தேர்வுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே CENTER க்கு சென்று அடையுங்கள்.
- உங்கள் CENTER இருக்கும் இடம் கிராம பகுதியா அல்லது நகரப்பகுதியா என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். (So you can guess the Traffic Congestion)
- எந்த வாகனத்தில் செல்லுகிறோம்,யாருடன் செல்கிறோம் என்பதனையும் தேர்வுக்கு முன் நாளிலேயே முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
தேர்வுக்கு செல்லும் போது COMPULSORY எடுத்து செல்ல வேண்டியவை
- BLACK BALL POINT PEN (3)
- HALL TICKET
- CASH (WALLET)
- ANALOG WATCH
- FACE MASK AND SANITIZER
OPTIONAL :
- WATER CAN (only if needed)
- WHITENER (only if needed)
- CELL PHONE (only if needed)
- தேர்வரைக்கு செல்லும் முன்பு காலை சிற்றுண்டி உண்டுவிட்டு செல்லுங்கள் (மற்ற நாட்களை விட கொஞ்சம் குறைவாக). அதுவே உங்கள் சிந்தனைக்கு சக்தி அளிக்கக்கூடியது.
- தேர்வரையின் வெளியில் கூட்டத்துடன் சென்று அமர வேண்டாம். (கூட்டத்திலுள்ள முகம் தெரியாதவர்கள் நீங்கள் படிக்காத விஷயத்திலிருந்து விவாதம் செய்யும் பொழுது அது உங்களுக்கு தேவையற்ற பயத்தை உருவாக்கும்)
- தேர்வரையின் வெளியில் உள்ள நேரத்தில் நீங்கள் கையினால் எழுதிய சிறு குறிப்புகள் இருந்தால் அதை மட்டும் REVISE செய்யலாம்.
- அப்படி இல்லையெனில் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து விடுங்கள்.
தேர்வறையில்
- இது உங்களுக்கான நேரம், உங்களை உலக்கிற்கு நீங்கள் யார் என்று நிருபிக்க வேண்டிய நேரம். எனவே உங்கள் எண்ணம் முழுதும்……….
- 140 + மதிப்பெண் எடுப்பதிலும்
- நேர மேலாண்மையிலிலும்
- தெளிவான சிந்தனையிலும் இருக்க வேண்டுமே தவிர மற்றவையில் அல்ல……..
- இதுவே உங்களுக்கு அளிக்கப்பட்ட நல்ல வாய்ப்பு Just Enjoy your Exam and your Day.
‘Finally, Exam is Not your whole life but it is an important part of your Life’
Congrats on your success.
Very much useful and needed motivation from your Exam machine team sir , Thank you.. keep going
Much needed & valuable post
Thank you so much for motivating and guiding us through out this journey.
Thank you for your motivation.
நன்றி
Thanku for your suggestions.It is very nice for my thinging.