அனைத்து இந்திய முஸ்லிம் லீக்

அனைத்து இந்திய முஸ்லிம் லீக்

  • 1906 அக்டோபர் 1 இல் முஸ்லிம் பிரபுக்கள், ஆளும் வர்க்கத்தினர், சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூகத்தின் உயர்பிரிவினர் பெரும்பாலும் அலிகார் இயக்கத்தோடு தொடர்புடைய 35 பங்கேற்பாளர்கள் ஆகாகான் தலைமையின் கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய அரசப்பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
  • அவர்கள் அரசுப் பணிகளில் முஸ்லீம்களின் சதவீதத்தை உயர்த்துதல், உயர்நீதி மன்றங்களில் முஸ்லீம் நீதிபதிகளின் நியமனம் மற்றும் அரச பிரதிநிதியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
  • இந்த சிம்லா மாநாடு அரசப்பிரதிநிதியிடமிருந்து எந்த ஒரு நல்ல தீர்மானத்தையும் முஸ்லீம்களுக்கு வழங்கவில்லையென்றாலும், இது அகில இந்திய முஸ்லீம் லீக் உருவாவதற்கு ஒரு ஊக்கியாக செயல்பட்டது என்லாம்.
  • 1906 டிசம்பர் 30 ஆம் நாள் டாக்கா நகரைச் சேர்ந்த நவாப் சலிமுல்லாகான் என்பவரது தலைமையில் முஸ்லீம் லீக் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
  • இந்த லீக்கானது, வங்காளப் பிரிவினை, முஸ்லீம்களுக்கான தனித்தொகுதி கோரிக்கை மற்றும் அரசுப் பணிகளில் முஸ்லீம்களுக்கான பாதுகாப்பினை வலியுறுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பை நல்கியது.

நோக்கங்கள்

  • இந்திய முஸ்லீம்கள், பிரிட்டிஷ் அரசிடம் உண்மையுடனும், நன்றியுடனும் நடந்துகொள்ள வேண்டுமென்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்துதல், மேலும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அரசுக்கு எழும் தவறான கருத்துக்களை நீக்குதல்.
  • இந்திய முஸ்லிம்களின் விருப்பங்கள் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், மேலும் தங்களது தேவைகள், உயர்ந்த லட்சியங்களை கண்ணியமான முறையில் அரசுக்குத் தெரிவித்தல்.
  •  இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் எவ்விதப் பகைமை பாராட்டுவதையும் முன்விரோதம் கொள்வதையும் தடுத்தல்.
  • உருவாக்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கான தனித்தொகுதி பெறுவதை வெற்றிகரமாக சாதித்தது எனலாம்.
  • லக்னோ ஒப்பந்தம் (1916), முஸ்லிம்களின் தனி அரசியல் அடையாளத்திற்கான அலுவல் முத்திரையை முஸ்லிம் லீக்கிற்கு வழங்கியது.

மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் – 1909

  • டிசம்பர் 1909 இல் மிண்டோ-மார்லி அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. சீர்திருத்தங்களை மிதவாத தேசியவாதிகள் வரவேற்றனர்.
  • மிண்டோ (வைசிராய்) – வகுப்புவாத பிரதிநிதித்துவத்தின் தந்தை
  • மார்லி (இந்திய அரசுச் செயலர்)
  • மிண்டோ மேற்கொண்ட நடவடிக்கைகள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நிறுவனப்படுத்தி இந்து, முஸ்லிம்களைப் பிரித்தது.
  • இந்தியக் குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் விசாரணையின்றி முடிவுகளை மேற்கொள்ள அனுமதித்தது.
  • மத்திய சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர் எண்ணிக்கை 16-லிருந்து 60 ஆக உயர்வு.
  • உறுப்பினர்கள் துணைக் கேள்விகள் எழுப்பிடவும் தீர்மானம் கொண்டு வரவும் உரிமை பெற்றனர்.
  • முஸ்லீம்களுக்கான வகுப்புவாத பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • நிர்வாகக் குழுவில் முதன்முறையாக இந்தியர் சத்யேந்திர பிரசாத் சின்ஹா நியமனம் செய்யப்பட்டர்.

தனித்தொகுதி 

  • முஸ்லீம்கள் மட்டுமே முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும். 1909 ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சட்டம், பேரரசு சட்டமன்றத்தில் அலுவலரல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடங்களில் எட்டு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியது. 
  • மாகாண சட்டமன்றங்களின் இடங்களை முஸ்லிம் வேட்பாளர்களுக்குப் பின்வருமாறு ஒதுக்கியிருந்தது. அவையாவன : மதராஸ் 4; பம்பாய் 4; வங்காளம் 5.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!