அறம் என்னும் கதிர் – அறநெறிச்சாரம் – முனைப்பாடியார்
இளமைப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
அறநெறிகள் இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல்
அறநெறிச்சாரம்
- அறநெறிச்சாரம் நூலின் ஆசிரியர் முனைப்பாடியார்
- அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது
- அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது.
- அறநெறிச்சாரம் நூலின் பதினைந்தாம் (15) பாடல் பாடமாகத் தரப்பட்டுள்ளது.
முனைப்பாடியார்
- அறநெறிச்சாரம் நூலின் ஆசிரியர் முனைப்பாடியார்
- முனைப்பாடியார் சமணப் புலவர்.
- திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்தவர் முனைப்பாடியார்.
- முனைப்பாடியாரது காலம் பதின்மூன்றாம் (13) நூற்றாண்டு.
அறம் என்னும் கதிர் – அறநெறிச்சாரம்
பாடல் – 15
இன்னெொல் விளை நிலனா ஈதல வித்தாக
வன்சொல் களை கட்டு வாய்மைக்கு எருவொட்டி
அன்புநீர் பொய்ச்சி அறக்கதிர் ஈன ஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய் *
– முனைப்பாடியார்
பாடலின் பொருள்
இனிய சொல்லையே விளை நிலமாகக் கொள்ளவேண்டும்.
அதில் ஈகை எனனும் பண்பை விதையாக விதைக்க வேண்டும்
வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும்.
உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும்.
அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும் .அப்போது தான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும்
இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்
சொல்லும் பொருளும்
வித்து – விதை
ஈன – பெற
நிலன் – நிலம்
களை – வேண்டாத செடி
பைங்கூழ் – பசுமையான பயிர்
வன்சொல் – கடுஞ் சொல்
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————