Contents show
வேளாண்மை
- பெரும்பான்மை இந்தியர்கள் கிராமப்புறத்தில் வசித்ததோடு பெரும்பான்மை இந்தியர்கள் வேளாண்மையை முதன்மைத் தொழிலாக கொண்டிருந்தனர்.
- உணவு தானியப் பயிர்களே பெரும்பான்மையாக பயிரிடப்பட்டது.
- கரும்பு, எண்ணெய்வித்துக்கள், பருத்தி, அவுரி போன்ற சில வணிகப் பயிர்கள் பயிரிடப்பட்டன.
- உபரி பகுதிகளிலிருந்து மற்ற பகுதிகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
நெசவு
- வேளாண்மைக்கு பின் இரண்டாவது தொழிலாக பருத்தி நெசவு விளங்கியது.
- இது பெரும்பாலும் கிராமப்புறப் பகுதிகளில் அதிகமாக செயல்பட்டது.
- பருத்தி இந்தியாவில் விளைவதோடு நிரந்தர சாயமேற்றும் செய்முறை இந்திய நெசவினை உலகளவில் பிரபலப்படுத்தியது. த்த சாயமேற்றும்
- சோழ மண்டல பகுதியின் முக்கிய துணி வகையான “கலம்காரி” இந்தோனேசியாவின் முக்கிய நுகர்வு பொருளாக விளங்கியது.
சந்தைப்படுத்துதல்
- சிராட் எனப்படும் பரந்துபட்ட சந்தை அமைப்பு பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இந்தியாவில் இருந்தது.
- இவ்வமைப்பில் கிராமப்புறச் சந்தைகளிலிருந்து மண்டல சந்தைகளுக்கும், அங்கிருந்து பெரிய நகர சந்தைகளுக்கும் பொருட்கள் சென்று சேர்ந்தன.
- கிராமச் சந்தையிலிருந்து மண்டலத்திற்கு சிறிய வணிகர்களாலும் மண்டலத்திலிருந்து பெரிய நகரங்களுக்கு முகவர்கள் மூலமாகவும் நகரங்களிலிருந்து துறைமுகங்கள் வாயிலாக ஏற்றுமதி செய்ய பெரும் வணிகர்களும் இவ்வமைப்பு முறையில் இருந்தனர்.
வங்கி அமைப்பு
- உண்டி (Hundis) – பிரிட்டிஷிற்கு முன்பு பணமாற்று முறிகளை அளிக்கும் ஒரு வங்கியமைப்பு இருந்தது.
- சராப் (Shroffs) நாணயங்களை பரிசோதிக்கவும் மதிப்பை அறியவும் சராப்கள் என்ற வணிகர்கள் உண்டியில் செயல்பட்டனர்.
- இவர்கள் உள்ளூர் வங்கியாளர்களாகவும் செயல்பட்டனர்.
- இவ்வமைப்பு பெரும் பணக்கார வணிகர்களை நாடு முழுவதும் உருவாக்கியது.
உதாரணங்கள்
- பனியாக்கள் & பாரசீக வணிகர்கள் – சூரத்
- நகர் சேத்துகள் – அகமதாபாத்
- ஜெகத் சேத்துக்கள் – வங்காளம்
- நகரத்தார் – சோழமண்டல பகுதி
- இவ்விணைப்பு உயர் இஸ்லாமியர்களை கோபமூட்டியது. பிரிட்டிசாரின் படையில் பெரும் படைவீரர்கள் அயோத்தியை சேர்ந்தவர்கள். எனவே அவர்களும் கோபமடைந்தனர்.
- இது 1857 போருக்கு ஒரு காரணமாக அமைந்தது.
- கேரளாவின் கள்ளிக்கோட்டையும், சூரத்தும் முக்கியம் இந்தியத் துறைமுகங்களாக செயல்பட்டன. பின்பு 16-ம் நூற்றாண்டில் கள்ளிக் கோட்டை மதிப்பிழந்து குஜராத் துறைமுகங்கள் பெரும் துறைமுகங்களாக மாறின.
- கிழக்கு கடற்கரையின் மசூலிப்பட்டினம், பழவேற்காடு துறைமுகங்கள் இடைநிலைத் துறைமுகங்களாக செயல்பட்டன.
மக்களின் நிலை
- வணிகர்கள் அல்லாத மற்ற மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை.
- பஞ்சங்களின் போது இம்மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருந்தன.
- 1678-1750 ஆம் ஆண்டுகளுக்கிடையே ஏற்பட்ட பத்து பஞ்சங்களினால் மக்கள் தங்களை அடிமையாக விற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.