Contents show
முதல் கர்நாடக போர் (1746 – 1748)
- காரணம்: ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர் இந்தியாவிலும் எதிரொலித்தது.
நபர்கள்:
- டியூப்ளக்ஸ் (பாண்டிச்சேரியின் பிரெஞ்சு ஆளுநர்)
- மோர்ஸ் (சென்னையின் ஆங்கிலேய ஆளுநர்)
- அன்வருதீன் (கர்நாடக நவாப்)
- போர்டோனியஸ் (மொரீசியஸின் பிரெஞ்சு ஆளுநர்)
- டியூப்ளக்ஸ் இந்தியாவில் சண்டை வேண்டாம் என மோர்ஸிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், பிரெஞ்சு கப்பல்களை ஆங்கிலேய கேப்டன் பார்னெட் தாக்கியது போருக்கு வழிகோலியது.
- ஜூலை 1746-ல் போர்டோனியஸ், ஆங்கிலேய படைத்தளபதி பெய்ட்டனை தோற்கடித்தார்.
- 15 செப்டம்பர் 1746-ல் டியூப்ளக்ஸ் சென்னையைக் கைப்பற்றினார். இதனால் மோர்ஸ் அன்வருதீனின் உதவியை நாடினார். ஆனால், டியூப்ளக்ஸ் நவாப்பின் மனதை மாற்றினார்.
- கொடுத்த வாக்குறுதியை டியூப்ளெக்ஸ் நிறைவேற்றாததால் மாபஸ்கான் தலைமையின் கீழ் ஒரு படையை நவாப் அனுப்பினார்.
- அடையாறுப்போர் அல்லது சாந்தோம் போர் என அழைக்கப்பட்ட இப்போரில் பிரான்ஸ் வெற்றிபெற்றது.
- பாண்டிச்சேரியைக் கைப்பற்ற நடந்த ஆங்கிலேயரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
- 1748 அய்லா சாப்பல் உடன்படிக்கை மூலம் இப்போர் முடிவுற்றது.
- வடஅமெரிக்காவின் லூயிஸ்பெர்க்கை பிரான்ஸ்சும், சென்னையை பிரிட்டீசும் பெற்றுக்கொண்டனர்.
இரண்டாம் கர்நாடக போர் (1749 – 1754)
- காரணம்: நிசாம் பதவிக்காக ஹைதராபாத்திலும், நவாப் பதவிக்காக ஆற்காட்டிலும் நடைபெற்ற வாரிசுரிமைப்போர்.
இரண்டு கூட்டணிகள்:
- பிரெஞ்சு கூட்டணி: டியூப்ளக்ஸ், முசாபர்ஜங் (ஹைதராபாத்) மற்றும் சந்தா சாகிப் (ஆற்காடு).
- ஆங்கிலேய கூட்டணி: இராபர்ட் கிளைவ், நாசிர் ஜங் (ஹைதராபாத்) மற்றும் அன்வருதீன் (ஆற்காடு).
ஆம்பூர் போர் (1749)
- அன்வருதீன் இப்போரில் கொல்லப்பட்டார். மேலும், அவர் மகன் முகமது அலி திருச்சிராப்பள்ளிக்கு தப்பிச் சென்றார்.
- சந்தா சாகிப் ஆற்காடின் நவாப்பானார்.
- 1750-ல் நாசிர்ஜங் கொல்லப்பட்டு முசாபர் ஜங் நிஜாமாக பதவியேற்றார்.
- சில நாட்களில் முசாபர் ஜங் கொலை செய்யப்பட்டார். எனவே நாசிர் ஜங்கின் சகோதரர் சலபத் ஜங் புதிய நிஜாமாக பஸ்ஸி என்ற பிரெஞ்சுக்காரரால் நியமிக்கப்பட்டார்.
ஆற்காடு போர் (1751)
- டியூப்ளக்ஸ் திருச்சியையும் முகமது அலியை கைப்பற்ற முயற்சி செய்தார்.
- எனவே, இராபர்ட் கிளைவ், முகமது அலி, தஞ்சாவூர் அரசர் மற்றும் மைசூர் அரசர் இணைந்த படைகள் இப்போரில் பங்கு பெற்றது.
- இராபர்ட் கிளைவ் போரில் வெற்றி பெற்று ஆற்காட்டை கைப்பற்றினார்.
- இதனால் ஆற்காடு வீரர் எனப்போற்றப்பட்டார்.
- காவேரிப்பாக்கம் போரில் சந்தா சாகிப் கொல்லப்பட்டு ஆங்கிலேயரின் உதவியோடு முகமது அலி ஆற்காடின் நவாப்பாக பதவியேற்றார்.
- 1754-ல் பாண்டிச்சேரி உடன்படிக்கையின் மூலம் இப்போர் முடிவுக்கு வந்தது.
- டியூப்ளக்ஸ் இந்தியாவிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டார்.
- சலபத்ஜங் ஹைதராபாத்தின் நிஜாமாகவும் முகமது அலி ஆற்காட்டின் நவாப்பாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
மூன்றாம் கர்நாடக போர் (1756-1763)
- காரணம்: ஏழு ஆண்டு ஐரோப்பிய போர் இந்தியாவிலும் ஏற்பட்டது.
நபர்கள்:
- பிரிட்டிஷ்: இராபர்ட் கிளைவ், கர்னல்ஃபோர்டு, சர் அயர்கூட்.
- பிரெஞ்சு: கவுண்டி லாலி, பஸ்ஸி.
- கவுண்டிலாலி கடலூரின் புனித டேவிட் கோட்டையை கைப்பற்றினார். மேலும், சென்னையைக் கைப்பற்ற பஸ்ஸியையும் அழைத்தார்.
- இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இராபர்ட் கிளைவ் கர்னல் ஃபோர்டு என்பவரை அனுப்பி வடசர்க்கார் பகுதிகளை கைப்பற்றினார்.
வந்தவாசிப்போர் (1760):
- சர் அயர்கூட் பிரெஞ்சு படையை தோற்கடித்தார்.
- பிரிட்டிஷ் பாண்டிச்சேரியை கைப்பற்றியது, கவுண்டிலாலி சரணடைந்தார்.
- 1763 பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுக்கு வந்தது.
- பாண்டிச்சேரி பிரெஞ்சிடம் ஒப்படைக்கப்பட்டு கோட்டை கட்டவும் இராணுவத்தை ஏற்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டது.
- ஆங்கிலேயர்கள் கடைசி ஐரோப்பிய எதிரியை இந்தியாவில் வீழ்த்தினர்