ஆரிய சமாஜம் 1875 & இராமகிருஷ்ண இயக்கம் 1897

ஆரிய சமாஜம் 1875பஞ்சாப்

  • நிறுவியவர்: சுவாமி தயானந்த சரஸ்வதி.
  • இயற்பெயர்: ‘மூல் சங்கர்‘ என்பதாகும்.
  • இவர் சுவாமி விராஜனந்தரின் (Virjanand) சீடராவார்.
  • வேதங்களை நோக்கிச் செல் (Go back to the Vedas) என்பதே இவரின் குறிக்கோளாகும்.

ஆரிய சமாஜம் பின்வரும் கோட்பாடுகளை எதிர்த்தது

  • விலங்குகளைப் பலியிடுதல்
  • உருவ வழிபாடு 
  • மூடப்பழக்கங்கள்
  • சொர்க்கம், நரகம்
  • புராணங்கள் 
  • பல கடவுள் வழிபாடு
  • உருவ வழிபாடு
  • பிராமண அர்ச்சகர்களின் நடவடிக்கைகள் 
  • புனித யாத்திரைகள் 
  • குழந்தை மணம் 
  • பலதார மணமுறை 
  • பர்தா அணியும் முறை 
  • சாதி வேறுபாடுகள்
  • உடன்கட்டை ஏறும் வழக்கம்

ஆரிய சமாஜம் பின்வருவற்றிற்காக பாடுபட்டது

  • பெண் கல்வி
  • கலப்பு மணம்
  • சமபந்தி உணவு முறை
  • பெண்கள் முன்னேற்றம்
  • தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம்
  • விதவைத் திருமணம்
  • 1875 இல் ‘சத்யார்த்த பிரகாஷ்’ எனும் தனது முக்கிய நூலை வெளியிட்டார். அவருடைய கருத்தின்படி சமகாலத்து இந்து மதம் சீர்கேடு அடைந்துவிட்டது. 
  • மதம்மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக ‘சுத்தி இயக்கம்’ (Suddhi Movement) என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.
  • ‘சுதேசி’ மற்றும் இந்தியா இந்தியருக்கே போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கியவர் சுவாமி தயானந்தர் ஆவார்.
  • இவர் இந்து சமயத்தின் ‘மார்ட்டின் லூதர்’ என அழைக்கப்பட்டார். 
  • வேதம் மற்றும் ஆங்கில வழி கல்வியை பயிற்றுவிப்பதற்காக தயானந்தா ஆங்கிலோ வேதிக் பள்ளிகள் (DAV Dayanand Anglo Vedic Schools) மற்றும் கல்லூரிகளை நிறுவினார்.
  • தயானந்தரின் முக்கிய சீடர்களான லாலாலஜபதிராய் லாலா ஹன்ஸ்ராஜ் மற்றும் பண்டித குருதத் ஆகியோர் ஆரிய சமாஜக் கொள்கைகளைப் பரப்பினர்.
  • பாலகங்காதர திலகர் மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே போன்றோர் ஆரிய சமாஜத்தின் தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர்.
  • 1893இல் சிரதானந்தா பின்வரும் பிரச்சினைகளினால் ஆர்யசமாஜிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தினார்
  1. ஆங்கில வழி கல்வி மற்றும் சம்ஸ்கிருத கல்வி
  2. அசைவ உணவு மற்றும் சைவ உணவு
  • சிரதானந்தா குருகுலவழி கல்வி மற்றும் அசைவ உணவை ஆதரித்தார்.

இராமகிருஷ்ண இயக்கம் கொல்கத்தா 1897

  • நிறுவியவர்: சுவாமி விவேகானந்தர்.
  • தலைமையிடம்: பேலூர், கொல்கத்தா.
  • இராமகிருஷ்ண இயக்கம், இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது 
    • இராமகிருஷ்ணரின் முக்கிய சீடர்களில் விவேகானந்தரும் ஒருவராவர்..

இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836 – 1886)

  • வங்காளத்தில் ஓர் பிராமணக் குடும்பத்தில் 1836 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • இவரது துணைவியார் பெயர் சாரதாமணிதேவி
  • இவர் தட்சிணேசுவரம் என்னும் இடத்தில் உள்ள காளி கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றினார்.
  • பல வடிவங்களில் இருந்தாலும் கடவுள் ஒருவரே என்ற தீர்க்கமான கொள்கையைக் கொண்டிருந்தார். 
  • ‘ஜீவன்’ என்பதே சிவன் எனவும் அவர் கூறினார் (வாழ்கின்ற அனைத்து உயிர்களும் இறைவனே).
  • மனிதனுக்கு செய்யும் பணி கடவுளுக்குச் செய்யும் பணியாகக் கருதப்படும் என்று உறுதியாக நம்பினார்.

சுவாமி விவேகானந்தர் (1863-1902)

  • இயற்பெயர்: நரேந்திரநாத் தத்தா
  • துறத்தல் மற்றும் சேவை இரண்டுமே நவீன இந்தியாவின் இரு கொள்கைகளாக இருக்க வேண்டும் எனக் கூறிர்.
  • 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு ‘என் சகோதர, சகோதரிகளே’ என தனது முதல் உரையின் மூலம், இந்தியப் பண்பாட்டின் சிறப்பையும் இந்து சமயத்தின் மேன்மையையும் உலகறியச் செய்தார்.
  • சுவாமி விவேகானந்தர் நவீன இந்தியாவின் விடிவெள்ளி எனக் குறிக்கப்படுகின்றார்.
  • கல்விப் பணி, உடல் நலம், கிராம வளர்ச்சி, ஆதிவாசிகள் முன்னேற்றம் மற்றும் இளைஞர் நலம் ஆகியவற்றிற்காகப் பாடுபட்டு வருகிறது.

இவ்வியக்கம் போன்றவற்றை நடத்தி மக்களுக்குத் தொண்டாற்றி வருகிறது.

  • மருத்துவ மனைகள், 
  • அறக்கட்டளை 
  • ஆதரவற்றோர் இல்லங்கள், 
  • முதியோர் இல்லங்கள், 
  • செவிலியர் பயிற்சிப் பள்ளிகள். 
  • கல்வி நிறுவனங்கள். 
  • பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், 
  • தொழிற்கல்வி பயிற்சி மையங்கள்
  • உடல்நலம், 
  • பேரழிவு நிவாரணம், 
  • கிராம முன்னேற்றம், 
  • ஆதிவாசிகள் முன்னேற்றம்
  • இயற்கை சீற்றங்களான பஞ்சம், வெள்ளம், நிலநடுக்கம், புயல் மற்றும் கொடிய தொற்று நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக பல நிவாரண முகாம்களை நடத்தி மிகச் சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறது.
  • மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனப் பகுதியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் (Photo Voltaic Lighting System) தோன்றுவதற்கு முக்கியப்பங்கு வகித்தது இராமகிருஷ்ண இயக்கம் ஆகும்.
  • ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சாரக் குழுவின் (UNESCO) தலைமை இயக்குநர் பெடரிக்கோ மேயர் (Federico Mayor) 1993 ஆம் ஆண்டில் சொற்பொழிவாற்றும் பொழுது 1897 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இராமகிருஷ்ண இயக்கத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் 1945 -ல் ஏற்படுத்தப்பட்ட ”யுனஸ்கோ’ வின் அமைப்பைப் போன்றே இருப்பதால்தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!