இந்திய தேசிய காங்கிரஸ் – 1885

இந்திய தேசிய காங்கிரஸ்

  • ஆலன் ஆக்டேவியன் ஹியூம் இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கியவர்
  • ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (A.O.Hume) எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி (Indian Civil Service ICS) அதிகாரி டிசம்பர் 1884 இல், சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார்.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்த இந்திய தலைவர்கள தாதாபாய் நௌரோஜி, K.T.தெலாங், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் சில முக்கியத் தலைவர்களுடன், சென்னையிலிருந்து G.சுப்பிரமணியம், P.ரங்கையா, P. அனந்தாச்சார்லு போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
  • இக்கூட்டத்தில் அகில இந்திய அளவில் செயல்படும் ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுகையில் இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்குவது எனும் கருத்து உருவானது.
  • இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28 இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது.
  • W.C.பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • மொத்தம் கலந்து கொண்ட 72 பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தோராவர்
  • கோரிக்கை மனு கொடுப்பது. விண்ணப்பங்கள் அனுப்புவது போன்ற செயல்பாடுகளை மட்டுமே காங்கிரஸ் மேற்கொண்ட போதும், தொடக்கத்திலிருந்தே சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் தனது வரம்புக்குள் கொண்டுவரும் பணிகளை மேற்கொண்டது.
  • இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு 1886 இல் கல்கத்தாவில் தாதாபாய் நௌரோஜியின் தலைமையில் நடைபெற்றது.
  • காங்கிரசின் மூன்றாவது மாநாடு பக்ருதீன் தியாப்ஜியின் தலைமையில் 1887 இல் சென்னையில் இன்று ஆயிரம் விளக்கு என்று அழைக்கப்படுகிற மக்கிஸ் தோட்டத்தில் (Makkies Garden) நடைபெற்றது.
  • கலந்து கொண்ட 607 அகில இந்தியப் பிரதிநிதிகளில் 362 பிரதிநிதிகள் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்கள்

  1. சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.அதிகப்படியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். 
  2. கல்வியைப் பரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  3. பத்திரிக்கைச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
  4. இந்திய நிர்வாகப்பணித் தேர்வுகளை (ICS) இந்தியாவிலேயே நடத்த வேண்டும்.
  5. இராணுவச் செலவுகளைக் குறைக்க வேண்டும்.
  6. வரிமுறையை எளிமையாக்க வேண்டும் மற்றும் அயல்நாட்டுப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்.
  7. இந்தியர்களை உயர்பதவிகளில் நியமிக்க வேண்டும்.

இலண்டனில் உள்ள இந்தியன் கவுன்சில் (சபை) கலைக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை கொண்டு இந்திய தேசியக் காங்கிரஸ் செயல்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!